அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், இப்புதிய ஆண்டில் எமது தளத்தை எளிதில் பார்வையிட புதியதாக http://www.thahirknr.co.cc/ என்ற தளத்தின் மூலமாகவும் காணலாம், தங்களின் ஆதரவே எனது தூண்டுகோள்.
Oneindia.in - thatsTamil
Showing posts with label துபை நிகழ்வுகள். Show all posts
Showing posts with label துபை நிகழ்வுகள். Show all posts
Tuesday, July 10, 2012
Tuesday, May 8, 2012
மே 11, துபாயில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினர் நடத்தும் மனிதவளமேம்பாடு குறித்த கருத்தரங்கு
மே 11, துபாயில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினர் நடத்தும் மனிதவளமேம்பாடு குறித்த கருத்தரங்கு
--
துபாய் : துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் அமீரகக் கிளையின் மனிதவளமேம்பாடு குறித்த கருத்தரங்கினை 11.05.2012 வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணிக்கு அல் முத்தீனா துபாய் இந்தியன் இஸ்லாமிக் சென்டர் அரங்கில் நடைபெற இருக்கிறது.
கருத்தரங்கிற்கு லேண்ட்மார்க் ஜீனத் குழும மேலாண்மை இயக்குநர் சையத் முஹம்மது சாதிக் தலைமையேற்கிறார்.
துபாய் ஹோல்டிங் மனிதவள மேம்பாட்டுத்துறையின் முதுநிலை ஆலோசகர் பொன் முஹைதீன் பிச்சை எனும் தலைப்பில் உரை வழங்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
மேலதிக விபரங்களுக்கு 050 54 89 609 / 050 100 4515 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
E-mail :
"JMC UAE" <jmcuae@gmail.com>
Thanks to Brother
MUDUVAI HIDAYATH
Thursday, November 17, 2011
Tuesday, March 1, 2011
துபாயில் முனைவர் சேமுமு பங்கேற்கும் இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு
துபாயில் முனைவர் சேமுமு பங்கேற்கும் இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு
துபாய் : துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் 02.03.2011 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் 'மணம் வீசும் மனம்' எனும் தலைப்பில் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச்செயலாளரும், இனிய திசைகள் ஆசிரியருமான பேராசிரியர் முனைவர் சேமுமு முகமதலி அவர்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்கள்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Thanks to MUDUVAI HIDAYATH

Thursday, February 24, 2011
பிப்.25, அஜ்மானில் மீலாது நபி விழா
Dears,
We are delighted to invite you for MEELAD-UN NABI Celebration.
Date:25.2.2011 Friday 9.00 A.M. to 12.00.A.M.
Venue: Ajman, Al Sawan Area, RAK Motors & Bukhari Al Khaleej Restaurant Road,
(Next to Alpha Pharmacy bldg) 1st floor, Flat 112.
We look forward to meet you all.
Refreshment and food will be served.
Further details contact.050-7752737/050-8757624
பிப்.25, அஜ்மானில் மீலாது நபி விழா
அஜ்மான் : அஜ்மானில் தமிழக முஸ்லிம் சகோதரர்களின் சார்பில் மீலாது நபி விழா 25.02.2011 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் மார்க்க அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு 050-7752737 / 050-8757624 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

Sunday, January 9, 2011
பிப்ரவரி 4, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி
|
Saturday, June 19, 2010
உறவினர்களை நேசித்தல்
18.06.2010 வெள்ளிக்கிழமை அன்று துபாய் பள்ளிகளில் ஜும் ஆ தொழுகையின் போது நிகழ்த்தப்பட்ட குத்பா உரையின் தமிழாக்கம்
தமிழாக்கம் :
மௌலவி காயல் முஹம்மது சுலைமான் ஆலிம் லெப்பை மஹ்ளரி
இமாம், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமம்
துபாய்
உறவினர்களை நேசித்தல்
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் …
ஐக்கிய அரபு அமீரகம் - துபாய்
ஜும்ஆ பிறை 6 ரஜப் 1431 ( தேதி: 18- Jun- 2010 )
"உறவினர்களை நேசித்தல்"
முதல் குத்பா
உறவைப் பேணுகிற விசயத்தில் சேர்ந்து வாழ வேண்டும் என்று கடமையாக்கியும் ஸலாமத்துடன் சுவனம் செல்லும் வழியை ஏற்படுத்திய அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக !
இதைக் கருத்தில் கொண்டு அருள்மரையில் அல்லாஹ் சொல்கிறான் "மேலும் அவர்கள் எத்தகையோர் என்றால், எதை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டானோ, அந்த இரத்த சொந்தத்தையையும் சேர்த்துக் கொள்வார்கள் (அதைத் துண்டித்து விடும் விஷயத்தில் தங்கள் இரட்சகனுக்கு பயந்தும் நடப்பார்கள். கேள்வி கணக்குகளின் கடுமைகளையும் பயந்து கொள்வார்கள்" ( 13:21 )
"மேலும் இரத்தக் கலப்பு சொந்தங்களையும் துண்டித்து விடுவதையும் நீங்கள் பயந்து கொள்ளுங்கள்" ( 4:1 ) முஸ்லீம்களே! நிச்சயமாக உறவினர்களைப் பேணுவதில் மகத்துவமும் மாபெரும் கண்ணியமும் இருக்கும் நிலையில் உறவினர்களை நேசிக்கும் விதிகளில் அதிகமான கடமைகள் உள்ளன. ஏனென்றால், நிச்சயமாக ரஹ்மான் & ரஹீம் என்ற வார்த்தையிலிருந்து அல்லாஹ்வின் பெயராக உருவாக்கப்பட்டுள்ளது.
இன்னும் அவர்களுடன் மென்மையாகவும் பாசத்துடனும் இரக்கத்துடனும் நல்ல உபகாரத்துடனும் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் அல்லாஹ் உங்களுக்கு வாக்களிப்பதுடன்இ கட்டாய கடமையாக்கியதுடன் அதிகமான பரக்கத்துகளும் வெற்றியும் ஈடேற்றமும் முழு நன்மையை பெற்றுக் கொள்ளும் ஒரு வாய்ப்பு இந்த உறவினர்களுடன் சேர்ந்து வாழும் அடியானுக்கு இறைவன் ஏற்படுத்துகிறான். எனவே, இவ்வாறு கடமையாக்கிய இறைவன் உறவினர்களை நேசிப்பது என்பது சொந்தக்காரர்கள், அதாவது சகோதர சகோதரிகள் மூலமாக, தாய் தந்தை வழி சொந்தங்கள், திருமண சொந்தம், மாமா மற்றும் மாமிமார்கள் சிறிய தகப்பனார் மற்றும் சாச்சிகள் கோத்திரத்தார்கள் மற்றும் குடும்பத்தார்கள் இவர்களை நேரில் சந்தித்து முக மலர்ச்சியோடு ஸலாம் உரைப்பதிலும் பொருள் உதவி செய்வதிலும் உபதேசிப்பதிலும் ஆலோசனை கூறும் விசயத்திலும் நல்ல வார்த்தைகளைப் பேசுவதிலும் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பதிலும் மனக்கசடுகளைக் கலைவதிலும் இது போன்றவற்றில் ஈடுபடுவதில் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
உங்களை துண்டித்து நடந்தாலும் நீங்கள் அவர்களுடன் இணக்கமாக நடப்பதில்தான் வெற்றியும் உள்ளது. இதை வலியுறுத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய கூற்று சான்றாக அமைகிறது. இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் "பதிலுக்குப் பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர். மாறாக உறவு முறிந்தாலும்இ அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவர். (நூல்: புகாரி 5988)
அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரக்கத்தும் இறங்குவதற்கு காரணமாகவே உறவைப் பேணுவதின் நோக்கமாகும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உறவுகளைப் பேணக் கூடியவர்களாக உருவாக்க வேண்டும். நாம் உறவினர்களை சந்திப்பதற்கும் விசாரிப்பதற்கும் ஓர் அரணாகத் திகழ வேண்டும். தங்களுடைய கோத்திரங்களைப் பற்றியும் குடும்பத்தார்களின் விபரங்களையும் நமது தலைமுறையினர்களையும் அவர்களுக்கு (பிள்ளைகளுக்கு) தெரியப்படுத்த வேண்டும். இதற்கு முன் மாதிரியாகவே பெற்றோர்கள் திகழ வேண்டும். இதை உணர்த்தும் நபி (ஸல்) அவர்களின் கூற்று 'எந்த ஒன்றை உங்கள் உறவினர்களாக கருதுகிறீர்களோ அந்த குடும்பத்தார்களைப் பற்றியும் உறவினர்களையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்' இந்த நபி மொழிக்கு இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள். தம் வாழ்வாதாரம் (ரிஜ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும் (நூல்: புஹாரி 5985).
தம்பதியர்கள் தங்கள் சொந்தங்களில் பேணுதலாகவும் அவரவர் பெற்றோர்களை கண்ணியப்படுத்தக் கூடியவர்களுக்கு தங்களது ஆயுள்களிலும் பொருட்களிலும் எல்லா வகையான நன்மைகளையும் பரக்கத்துகளையும் பெற்றுக் கொள்வதற்கு காரணமாக இந்த உறவு நேசிப்பதில்தான் திகழ்கிறது. அதுபோல நண்பர்கள் தங்களுக்குள் நட்பை வளர்ப்பதும் ஒருவருக்கொருவர் உபதேசிப்பதிலும் பொறுமையை கடைப்பிடிப்பதிலும் உறவுகளைப் பேணும் விசயத்தில் முழு ஆர்வம் கொள்வது அவசியமாகும். இந்த உறவை நிலைப் படுத்தும் நபி மொழிகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம். ஸலாமை பரப்புங்கள் உணவுகளை உண்ணக் கொடுங்கள் உறவைப் பேணுங்கள் மக்கள் தூங்கும் (இரவில்) நிலையில் தொழுது கொள்ளுங்கள் இவ்வாறு நடந்து கொண்டால் நிம்மதியாக சுவர்க்கம் செல்வதற்கு வாய்ப்பாக அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: முஸ்னத் அஹ்மத் 22668).
அபு அய்யூபுல் அன்சாரி அவர்கள் கூறியதாவது 'ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் "இறைத்தூதர் அவர்களே! என்னை சுவர்க்கத்தில் சேர்க்கும் ஒரு நற் செயலை எனக்கு கூறுங்கள்" என்று அவசரமாக கேட்டார். அப்போது மக்கள் "இவருக்கு என்ன நேர்ந்தது? இவருக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் "அவருக்கு ஏதேனும் (அவசரத்) தேவை இருக்கலாம்" என்று மக்களை நோக்கி சொல்லிவிட்டு அந்த மனிதரை நோக்கி "நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது. (கடமையான) தொழுகையையும் (கடமையான) ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும். உறவைப் பேணி வாழ வேண்டும்" என்று கூறிவிட்டு "உம்முடைய வாகனத்தை (உம்முடைய வீடு நோக்கி) செலுத்துவீராக!" என்று கூறினார்கள். அம் மனிதர் (அப்போது) தன் வாகனத்தில் அமர்ந்தார் (நூல்: புஹாரி 5983).
உறவை முறிக்கும் பாவத்திற்க்காக தண்டனை என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "உறவை முறித்து வாழ்பவன் சுவர்க்கத்தில் நுழைய மாட்டான்" என ஜுபைர் இப்நுமுத்யிம் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் (நூல்: புஹாரி 5984).
அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்த போது உறவானது (எழுந்து இறைவனின் அரியாசனத்தின் கால்களைப் பற்றிக்கொண்டு) உறவுகளை துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோரியே இப்படி நிற்கிறேன். என்று கூறிய(மன்றாடிய)து. அல்லாஹ் "ஆம்! உன்னை (உறவை)ப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்லமுறையில் நடந்து கொள்வேன் என்பதும்இ உன்னை துண்டித்து விடுபவனை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்கு திருப்தியளிக்கவில்லையா? என்று கேட்டான். அதற்கு உறவு "ஆம் (திருப்தியே) என் இறைவா" என்று கூறியது. அல்லாஹ் "இது உனக்காக நடக்கும்" என்று சொன்னான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் விரும்பினால் (நயவஞ்சகர்களே) நீங்கள் (போருக்கு வராமல்) பின் வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டித்து விடவும் முனைகிறீர்களா? எனும் திருக் குர்ஆன் (47:22)-வது வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள் என அபுஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி 5987)
உறவு ரஹீம் என்பது அளவில்லா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே இறைவன் (உறவை நோக்கி) உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுகிறேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக் கொள்வேன்" என்று கூறினான் என அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் (நூல்: புஹாரி 5988).
நபி (ஸல்) அவர்களுக்கு வஹியின் தாக்கத்தின் காரணமாக அன்னை கதீஜா நாயகி (ரலி) அவர்கள் ஆறுதல் சொல்லும்போது "அல்லாஹ்வின் ஆணையாகஇ அல்லாஹ் உங்களை கை விடவே மாட்டான். ஏனென்றால்இ நீங்கள் உறவினர்களை நேசிக்கிறீர்கள்இ சிரமத்தை சுமந்து கொள்கிறீர்கள்இ விருந்தாளிகளை உபசரிக்கிறீர்கள்இ எளியவர்களுக்கு உதவுகிறீர்கள்' என்று அன்னை கதீஜா நாயகி (ரலி) வாழ்த்தினார்கள் (நூல்: புஹாரி 3)
இரண்டாவது குத்பா
அடியார்களே! மேலே சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்திலும் ஒவ்வொரு மனிதனும் சொந்த பந்தங்களை (உறவை) பேணும் விசயத்தில் கவனமாகத் திகழ வேண்டும் என்றும்இ நோயாளிகளை சந்திப்பதிலும் ஒருவருக்கொருவர் உதவியாக வாழ வேண்டும் என்பதையும் இந்த ஐக்கிய அரபு அமீரகம் உங்களுக்கு கட்டளையிடுகிறது. இதை உணர்த்தும் வசனமாக அல்லாஹ் அருள்மறையில் சொல்கிறான் "இன்னும் நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்" (5:2)
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோரையும் நம் சொந்த பந்தங்களை நேசிக்கக் கூடியவர்களாகஇ அல்லாஹூம் அவனுடைய திருத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்பட்டவர்களாக ஆக்கித் தந்தருள்வானாக! ஆமீன்!!
தகவல்: அவ்காஃப் - U.A.E.

Monday, March 29, 2010
KEO பொதுக்குழு கூட்ட அறிவிப்பு
இன்ஷா அல்லாஹ் வரும் ஏப்ரல் 2 ம் தேதி டேய்ரா துபை, அல் பராஹா பகுதியில் அமைந்துள்ள Jesco Supermarket அருகில் உள்ள GYM கட்டடத்தில் KEO பொதுக்குழு கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது UAE வாழ் நமதூர் மக்களுக்கு அன்பான வேண்டுகோள் KEO கூட்டத்திற்கு அனைவரும் வருகை தந்து நமது KEO திட்டங்களுக்கு ஆலோசனை வழங்கி கூட்டத்தினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம், மேலும் விபரங்களுக்கு மாணா ஈனா ரியாஸ் அஹமது அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் 050-5768011.
Wednesday, March 24, 2010
சிறப்பு சொற்பொழிவு - கோட்டைப்பள்ளிவாசல்
அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்ஷாஅல்லாஹ் வியாழன் 25-03-2010 இரவு இஷா தொழுகைக்கு பின் தேரா சிறிய ஜர்வானி பள்ளிவாசலில் (கோட்டைப்பள்ளிவாசல்), தமிழகத்திலிருந்து வருகைபுரிந்துள்ள ஆலிம் பெருந்தகை மவ்லானா மவ்லவி முனைவர் செய்யது மசூது ஜமாலி அவர்களின் சிறப்புச்சொற்பொழிவு நடைபெறும், அதுசமயம் அனைவரும் கலந்து சிறப்பிக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.
கோட்டைப்பள்ளி ஜமாத்

Tuesday, January 5, 2010
துபாயில் தொழிலாளர்களுக்காக இலவச மருத்துவ முகாம்
துபாயில் தொழிலாளர்களுக்காக இலவச மருத்துவ முகாம்
துபாய் : துபாய் இந்திய பெண்கள் அமைப்பு தொழிலாளர்களுக்காக ஏழாவது இலவச மருத்துவ முகாமினை 08.01.2010 வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 12 மணி வரை இந்திய கன்சுலேட் ஆடிட்டோரியத்தில் நடத்த இருக்கிறது.
இம்முகாம் இரண்டாயிரத்துக்கும் குறைவாக சம்பளம் பெறுவோருக்கும், மருத்துவ காப்பீடு பெற வசதியற்றவர்களுக்காக நடத்தப்படுகிறது.
நீரிழிவு நோய் இருப்பவர்களும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் எதுவம் சாப்பிடாமல் மருத்துவ முகாமில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே மருத்துவரிடம் காண்பித்த ரிப்போர்ட் இருப்பின் அதனை அவசியம் எடுத்து வரவேண்டும்.
மருத்துவ முகாமில் பங்கேற்க விரும்புவோர் ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் காலை ஒன்பது மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை 050-1152021 அல்லது 056 -6945125 ஆகிய அலைபேசியில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Monday, November 30, 2009
துபை நிகழ்வுகள்
வரும் 04.12.2009 வெள்ளி மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு தேரா குவைத் பள்ளியில் கு.செ. சுல்தான் இப்ராஹிம் மனைவியும் கு.செ. அமீர்ஹம்ஜா தாயாருமான பூண்டியார் ஹமிதா பீவி அவர்களின் பெயரால் ஓதப்படும் பாத்திஹாவிலும் மற்றும் தொழுகையிலும் நமதூர் ஜமாஆத்தார்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து எனது தாயாரின் ஹக்கில் துஆச் செய்யுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன்.
தங்களின்,
கு.செ. அமீர்ஹம்ஜா
அபுதாபி.
Subscribe to:
Posts (Atom)
NOTICE BOARD
இஸ்லாமிய அமைப்புகளின் இலட்சிய சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்ஹு.
அன்றொரு காலம் இருந்தது:
திமுக வின் கருணாநிதியும்அதிமுக வின் MGR ம் பொது நிகழ்ச்சிகளில் சந்திக்க நேர்ந்தால் தழுவிக்கொள்வார்கள் அல்லது குசலமாவது விசாரிப்பார்கள்..
ஆனால் இரு கட்சித்தொண்டர்களும் அடிதடி , கைகலப்பு , வெட்டு குத்து என அன்றாடம் மோதிக்கொள்வதை ஊடகங்கள் வழியாக அறிந்திருந்தோம்.
இன்றொரு காலம் இருக்கிறது:
இஸ்லாமிய சமுதாய அமைப்புகளின் கண்ணியமிக்க தலைவர்கள், தங்களது கருத்து வேறுபாடுகளால் பொது நிகழ்ச்சிகளில் சந்திப்பதைக்கூட தவிர்க்க சிந்திக்கிறார்கள்.
ஆனால் சமுதாய அமைப்புக்களில் தங்களை உட்படுத்திக்கொண்ட அன்பிற்குரிய சகோதரர்கள் மோதிக்கொள்வதாகத் தகவல்கள் மிக அரிது..
வாதத்துக்காகவும் ,பகட்டுக்காகவும் இல்லாமல் சுய சிந்தனையோடு கூறுங்கள் சகோதரர்களே!
உங்களில், ஒற்றுமை ஏற்படுவதை விரும்பாத ஒருவராவது இருக்க முடியுமா? அல்லது ''ஒற்றுமை ஏற்படாதா?'' என்று ஆதங்கப்படாத உள்ளம் தான் இருக்க முடியுமா?
சமுதாயத்தலைவர்கள் தங்கள் வெட்டி கௌரவத்தை(பந்தா?) விட்டு வெளியில் வந்து பழையன மறந்து சமுதாய ஒற்றுமைக்காக புது உறவை ஏற்படுத்த மாட்டார்களா?
தங்களை நல்ல முறையில் வழி நடத்த மாட்டார்களா? என்று ஏங்காத உள்ளமுடைய எவரேனும் உங்களில் இருக்க முடியுமா?
நாம் சிந்தனை செய்யும் சக்தியை ஏக இறைவனால் வழங்கப்பெற்றவர்கள்...சிந்தனை செய்யுங்கள்....
((((( 2 )))))
அனைத்து இஸ்லாமிய சமுதாய இயக்கங்களும் இலட்சியத்தில் ஒன்று படுகிறது; நோக்கம் இறைவனின் நேசத்தைப்பெற்று மறுமை வெற்றியை அடைய வேண்டும்
என்பதாகத்தான் அமைந்திருக்கும். மாஷா அல்லாஹ்.நோக்கம் உன்னதமானது. ஆக, பாதைகள் தான் வெவ்வேறே தவிர இலக்கு வெவ்வேறல்ல. ஆனால் துவங்கப்பட்ட அமைப்புகள் இந்த இலட்சியத்தை அடைவதற்கான செயல்பாடுகளிலிருந்து தடம் புரள்வதேன்?
துரதிர்ஷ்டவசமாக சில இயக்கங்களை நிர்வகிப்பவர்களின் செயல்பாடுகள் ''ஊசலாட்டங்களை ஏற்படுத்துபவனின்'' செயல்களைப் போன்று அமைந்து விடுகிறது.
இங்கே 'மாற்றான் தோட்டத்து மல்லிகையின் மணம்' கண்டு கொள்ளப்படுவதேயில்லை; ஏனைய பண்புகளே மிகைப்படுத்தப்படுகிறது. பிற இஸ்லாமிய சமுதாய அமைப்புகளுடையவும் அதைச்சார்ந்தவர்களுடையவும் குறைகளை மிகைப்படுத்துவதையே முக்கிய இலக்காகக் கொண்டுள்ளனரோ? என்று எண்ணத்தோன்றுகிறது!
படைக்கப்பட்டவனுடைய உள்ளத்தை படைத்தவன் அறிவான். படைத்தவனின் உரிமைகளை தனதாக்கிக்கொள்ள எவருக்கு தகுதியிருக்கிறது? ''இன்னமல் அஃமாலு பின் நிய்யத்''என்பதை மறப்பதேன்? நான் அல்லது நாம் செய்வது தான் சரியென்பது அவரவர் நம்பிக்கை; தீர்ப்பு செய்யும் அதிகாரம் படைத்தவனுக்குரியது.
குறைகள் தெரிந்தாலும் அன்போடும் அக்கரையோடும் நளினமான முறையில் எடுத்துக்கூறும் பண்பு ஏன் இல்லாமல் போயிற்று? எங்கே இந்த சமுதாயம் அழிந்துவிடதா? என நப்பாசை கொண்டு திரிபவனுக்கு மத்தியில் நமது குறைகளை மேடைபோட்டு அரங்கேற்றுவதில் சகோதரர்களே! நீங்கள் உடன்படுகிறீர்களா?
((( 3 )))
நமது இயக்கங்களின் நிர்வாகிகள் அரசியல் குள்ளநரிகளின் சூழ்ச்சியில் விழுந்து விடும் சூழ்ச்சுமம் என்னவாக இருக்கும்? இதற்கு விடை அறிய வேண்டுமெனில்
முதலில் சூழ்ச்சி என்னவென்று தெரிய வேண்டும்.
சமீபத்திய நிகழ்வு ஒன்றை பார்ப்போம்...
நமது சமுதாய இயக்கம் ஒன்றின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில்,, ஒரு கட்சியை வரும் பாரளுமன்றத்தேர்தலில் ஆதரிப்பது என்பதும் ஒரு தீர்மானம். இந்த முடிவு 2007 ஆம் வருடத்திலேயே எடுக்கப்பட்டது என்பது வெளியிடப்பட்ட கடிதத்தின் வாயிலாக நமக்கு இப்போது தெரிய வருகிறது.
ஆனால் எழுதப்பட்ட கடிதம் யாருக்கு?
நரிக்குணத்துடன் முதுகில் குத்தும் குணமுடையவருக்காயிற்றே!
முன்னணி இயக்கங்களில் ஒன்றை கூட்டுப்பிடித்திருந்தும் மற்றொன்றின் ஆதரவு இல்லாததால் (கோவை மற்றும் சில இடங்கள்)பெரும்பான்மையும் கிடைக்கவில்லை; கிடைத்த இடங்களிலும் (சென்னை மற்றும் சில இடங்கள்)சொற்ப ஓட்டுக்களில் வெற்றி என்று நொந்து போயிருந்தவருக்கு அல்லவா இந்த கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.. 2007 ல் தகவல் கிடைக்கப்பெற்றவர் குதூகலம் அடைந்திருப்பார்!
''இந்த இஸ்லாமியர்கள் சொன்ன சொல்லைக் காப்பார்கள்'' என்பதும்
''இந்த இஸ்லாமிய இயக்கங்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் ஒற்றுமையற்ற இயக்கங்கள்'' என்பதும் புரிந்த தந்திரக்காரர் அவர்! திட்டம் வகுத்திருப்பார்!!
இலவசமாக ஒரு இயக்கத்தின் ஆதரவு கிடைக்கப்போகிறது; முன்னர் ஆதரித்த இயக்கம் கூடவே இருந்தால் ஒன்றிரண்டு தொகுதிகள் கேட்டு நச்சரிப்பார்கள் ;
திட்டம் வகுத்து கழற்றி விட்டுவிட்டார்.. சூடு, சொரணையற்ற இளிச்சவாயர் கூட்டத்தின் பகுதி ஓட்டுக்கள் இலவசமாகக் கிடைக்கும் போது மற்றொரு பகுதியில்லாமலே (அதுவும் சிதறி விடும்)இந்த சமுதாயத்தை சமாளித்து விடலாம் என்று சூழ்ச்சி செய்தார்.
சரி, அவர் சூழ்ச்சி செய்தார்! அது அவரது அரசியல்!
நம்மவர்கள் எப்படி சூழ்ச்சியில் விழுந்தார்கள்? என்றெல்லாம் (இஸ்லாமிய இயக்கங்களின் இலட்சிய சகோதரர்களே) நீங்கள் கேட்க விரும்புகிறீர்கள் என்றால்
........மகிழ்ச்சி.........நீங்களும் சிந்திக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று பொருள்.
இன்ஷா அல்லாஹ்... தொடருவேன்...
சமுதாய ஒற்றுமையை விரும்பும் ஒரு சாதாரண சகோதரன்...
நாஞ்சில் தமிழ்.
திக்ருகள்
திக்ரு என்பது இறைவனை நினைவு கூறுவதாகும்.. மனிதன் இறைவனின் நினைவுகளோடு இவ்வுலகில் வாழ வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைபாடு. இது மனிதனை வெற்றிக்கு இட்டுச் செல்லும் வழியாகும். ஐவேளை தொழுகை கூட இறைவனை நினைவு கூறக்கூடியதாகவே அமைந்துள்ளது. தொழுகை நேரம் போக அன்றாட வாழ்க்கையின் மற்ற நேரங்களிலும் இறைவனை நினைவு கூறுவதற்கு சில திக்ருகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.. அதற்கு முன் திக்ரு செய்வதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.
திக்ருகளின் சிறப்புகள் :
فَاذْكُرُونِي اَذْكُرُكُمْ
'என்னை நீங்கள் நினைவு கூறுங்கள், நானும் உங்களை நினைவு கூறுவேன்' (அல்குர்ஆன் 2:152)
நாம் அல்லாஹ்வை திக்ரு செய்தால் அல்லாஹ் நம்மை நினைவு கூறுகிறான். இது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
وَاذْكُرْ رَبَّكَ فِيْ نَفْسِكَ تَضَرُّعًا وَخِيْفَةً وَدُوْنَ الجَهْرِ مِنَ القَوْلِ بِالْغُدُوِّ وَالآصَالِ وَلاَ تَكُنْ مِنَ الغَافِلِيْنَ
'(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும் மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்' (அல்குர்ஆன் 7:205)
திக்ரு எவ்வாறு செய்ய வேண்டும் என்ற முறையை இறைவன் இங்கே நமக்கு கற்றுத் தருகிறான்.
يَأيُّهَا الَّذِينَ ءَامَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا ، وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا
'ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு செய்யுங்கள்.. இன்னும் காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்' (அல்குர்ஆன் 33:41,42)
அல்லாஹ்வை அதிகமதிகம் திக்ருச் செய்ய வேண்டும், காலையிலும் மாலையிலும் அதிகமதிகம் செய்ய வேண்டும் என்பது இதன் பொருளாகும். காலையிலும் மாலையிலும் மட்டும் திக்ருச் செய்தால் போதும் என்பது இதன் பொருள் அல்ல.
لاَيَقْعُدُ قَوْمٌ يَذْكُرُوْنَ اللهَ عَزَّ وَجَلَّ إِلاَّ حَفَّتْهُمُ المَلاَئِكَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِيْنَةُ ، وَذَكَرَهُمُ اللهُ فِيْمَنْ عِنْدَهُ (رواه مسلم)
'அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாக அமரும் கூட்டத்தினரை மலக்குகள் சூழ்ந்தும், ரஹ்மத் (இறையருள்) அவர்களை மூடியும் 'ஸகீனா' என்னும் நிம்மதி அவர்கள் மீது இறங்கியுமே தவிர வேறில்லை. அல்லாஹ் தன்னிடமுள்ளவர்களிடம் (மலக்குகளிடம்) அவர்களைப் பற்றி (புகழ்ந்து) கூறுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்கள்: அபூஹுரைரா (ரலி), அபூ ஸயீது (ரலி) நூல்: முஸ்லிம்)
திக்ரு செய்வோரை மலக்குகள் சூழ்ந்து இருப்பார்கள், மனிதன் சுவர்க்கம் செல்ல அவசியம் தேவைப்படும் இறையருள் அங்கே இறங்குகிறது, நிம்மியும் இறங்குகிறது. அல்லாஹ் அவர்களைப் பற்றி புகழ்ந்து கூறுகிறான் போன்றவற்றை இழக்க எவருக்குத் தான் மனம் வரும்.
மற்றொரு ஹதீஸில்,
அல்லாஹுத்தஆலாவின் சில மலக்குகள், திக்ரு செய்பவர்களைத் தேடியவர்களாக பாதையில் சுற்றுவார்கள். அல்லாஹுத்தஆலாவை திக்ரு செய்யும் கூட்டத்தாரை அவர்கள் கண்டால் உடனே, 'இதோ இங்கு உங்கள் குறிக்கோளின் பக்கம் வாருங்கள்' என அவர்கள் ஒருவருக்கொருவர் அழைப்பு விடுப்பார்கள். உடனே அனைத்து மலக்குகளும் அங்கு வந்து, திக்ரு செய்யும் கூட்டத்தாரை முதல் வானம் வரை சூழ்ந்து கொள்வார்கள்.
பிறகு அவர்களின் இரட்சகனான அல்லாஹ் - அவன் மிக அறிந்தவன் - என் அடியார்கள் என்ன கூறினார்கள்? என்று கேட்பான். அதற்கவர்கள், உன்னை தஸ்பீஹ் செய்கிறார்கள், உன்னை தக்பீர் கூறுகிறார்கள், உன்னை புகழ்கிறார்கள், உன்னை கண்ணியப்படுத்துகிறார்கள் எனக் கூறுவார்கள்.
அதற்கவன், என்னை அவர்கள் பார்த்துள்ளார்களா? என்று கேட்பான். அதற்கவர்கள் இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் உன்னைப் பார்க்கவில்லை என்பார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் என்னைப் பார்த்திருந்தால் எவ்வாறு இருப்பார்கள்? எனக் கேட்பான். அதற்கு மலக்குகள், அவர்கள் உன்னைப் பார்த்திருந்தால், இன்னும் மிக அதிகமாக உன்னை வணங்குபவர்களாகவும், மிக அதிகமாக உன்னைக் கண்ணியப்படுத்துபவர்களாகவும், மிக அதிகமாக உன்னை தஸ்பீஹ் செய்பவர்களாகவும் இருப்பார்கள் எனப் பதிலளிப்பார்கள்.
பிறகு அல்லாஹ், அவ்வடியார்கள் என்ன கேட்டார்கள்? என்று அவர்களிடம் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்டார்கள் எனக் கூறுவார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் அதனைப் பார்த்துள்ளார்களா? என்று கேட்பான். அதற்கு மலக்குகள், இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்கள் இரட்கனே! அவர்கள் அதனைப் பார்க்கவில்லை எனப் பதிலளிப்பார்கள்.
அதற்கு அல்லாஹ், அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் எவ்வாறு இருக்கும்? என்று கேட்பான். அதற்கு மலக்குகள், அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் அதன் மீது மேலும் பேராசைக் கொள்வார்கள், அதிகமாகத் தேடுவார்கள், அதனை அடைய அளப்பெறும் ஆவல் கொள்வார்கள் எனக் கூறுவார்கள்.
பின்னர் அவர்கள் எதனை விட்டுப் பாதுகாவல் தேடுகிறார்கள் என மலக்குகளிடம் அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் நரகை விட்டுப் பாதுகாவல் தேடுகின்றனர் என்பர். அவர்கள் அதனைப் பார்த்துள்ளார்களா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் அதனைப் பார்க்கவில்லை என மறுமொழி கூறுவார்கள். அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் எவ்வாறு? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் அதைப் பார்த்திருந்தால் இதைவிட மிக அதிகமாக அதனை விட்டு விரண்டோடுவார்கள். கடுமையாக அதனை அஞ்சுவார்கள் எனப் பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் (மலக்குகளே) நான் அவர்களை மன்னித்து விட்டேன். அதற்கு உங்களைச் சாட்சிகளாக ஆக்குகிறேன் என்று கூறுவான். அப்போது மலக்குகளில் ஒருவர் அவர்களில் ஒருவர் திக்ர் செய்தவர்களின் கூட்டத்தில் உள்ளவரல்ல, ஏனெனில் அவர் அவரது ஏதோ ஒரு தேவைக்காக அங்கு வந்தார் எனக் கூறுவார். அதற்கு அல்லாஹ், திக்ரு செய்தவர்களாக அமர்ந்திருந்தவர்களுடன் சேர்ந்து அமர்ந்து இருந்த எந்த மனிதரும் நற்பாக்கியத்தை இழக்க மாட்டார். (அவரும் நற்கூலி பெறுவார்) எனக் கூறுவான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
மற்றொரு ஹதீஸில்,
அபூ வாகித் அல் ஹாரிஸ் பின் அவ்ப் (ரலி) அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்து இருந்தார்கள். மக்களும் அவர்களுடன் அமர்ந்து இருந்தார்கள்.. அப்போது மூன்று நபர்கள் வந்தார்கள். அவர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களின் சமூகம் முன்னோக்கி வந்தனர். ஒருவர் போய் விட்டார். அவ்விருவரும் நபியவர்களின் அவையில் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அவ்விருவரில் ஒருவர் அவ்வட்டத்தில் ஒரு காலியிடத்தைப் பார்த்தார்... உடனே அவர் அதில் போய் அமர்ந்தார். மற்றொருவர் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து கொண்டார். நபி (ஸல்) அவர்கள் தங்களின் சொற்பொழிவை நிறைவு செய்ததும் கூறினார்கள்: மூன்று நபர்களைப் பற்றி உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ் சேர்த்துக் கொண்டான். மற்றொருவர் வெட்கப்பட்டார். அல்லாஹ்வும் அவரிடமிருந்து வெட்கப்பட்டுக் கொண்டான். இன்னொருவர் புறக்கணித்துச் சென்றுவிட்டார். அல்லாஹ்வும் அவரைப் புறக்கணித்து விட்டான். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
ஒரு நாள் முஆவியா (ரலி) அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்திருந்த ஒரு திக்ரின் ஹல்காவிற்கு (வட்டத்திற்கு) வந்தார்கள். அப்போது அவர்களைப் பார்த்து, நீங்கள் ஏன் இங்கு அமர்ந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், நாங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாக அமர்ந்துள்ளோம் என மறுமொழி கூறினார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதைத்தவிர வேறு எதற்காகவும் நீங்கள் இங்கு உட்காரவில்லையே? என்றார்கள். அதற்கவர்கள், அதைத்தவிர வேறு எதற்காகவும் நாங்கள் இங்கு உட்காரவில்லை எனக் கூறினார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், நான், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக!' என்று உங்களிடம் கேட்டது உங்கள் மீது சந்தேகப்பட்டு அல்ல. (எனினும் உங்கள் நோக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான்.) நான் நபி (ஸல்) அவர்களிடம் சிறப்பான அந்தஸ்தைப் பெற்றிருந்தும் (பேணுதலின் காரணமாக) அவர்களைப் பற்றி மிகக் குறைவாகவே ஹதீஸ்களை அறிவிக்கின்றேன். அவைகளில் ஒன்று.
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களின் ஒரு ஹல்காவிற்கு (வட்டத்திற்கு) வந்தார்கள். ஏன் இங்கு அமர்ந்துள்ளீர்கள்? என்று அவர்களிடம் வினவினார்கள். அதற்கவர்கள், 'நாங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாகவும், எங்களுக்கு இஸ்லாமுக்கு வழிகாட்டி எங்கள் மீது அருள் புரிந்ததற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாகவும் அமர்ந்துள்ளோம் எனக் கூறினார்கள். அப்போது, நபியவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அதற்காகவே அமர்ந்துள்ளீர்களா?' என்றார்கள். அதற்கவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்காகவே நாங்கள் அமர்ந்துள்ளோம்' என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள், நான் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்று உங்களிடம் கேட்டது உங்கள் மீது சந்தேகப்பட்டு அல்ல, எனினும் (இப்பொழுதுதான்) ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்தார்கள். நிச்சயமாக அல்லாஹ் தன் மலக்குகளிடம் உங்களைப் பற்றி பெருமை பாராட்டுகின்றான் என அவர்கள் என்னிடம் கூறினார்கள்' எனப் பகர்ந்தார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீதில் குத்ரீ (ரலி), நூல்: முஸ்லிம்