தற்போதைய செய்திகள்:

♣ என் இனிய வலைப்பூ விருந்தினரே வருக.! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக.! ரமலான் நல் வாழ்த்துக்கள் ♣ .

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், இப்புதிய ஆண்டில் எமது தளத்தை எளிதில் பார்வையிட புதியதாக http://www.thahirknr.co.cc/ என்ற தளத்தின் மூலமாகவும் காணலாம், தங்களின் ஆதரவே எனது தூண்டுகோள்.

Oneindia.in - thatsTamil

SunPower

Showing posts with label பொதுச் செய்திகள். Show all posts
Showing posts with label பொதுச் செய்திகள். Show all posts

Saturday, April 28, 2012

கற்பில் கவனம் தேவை ( தேங்கை ஷறஃபுத்தீன் மிஸ்பாஹி )


கற்பில் கவனம் தேவை
( தேங்கை ஷறஃபுத்தீன் மிஸ்பாஹி )

அல்லாஹ்வும் அவனது தூதரும் விலக்கிய பாவங்களுக்கு மத்தியில்- கொலை – கொள்ளை, திருட்டு, மது அருந்துதல், மோசடி செய்தல், அவதூறு பரப்புதல், பொய் – புறம் பேசுதல் போன்ற பாவங்களெல்லாம் 'ஆண் – பெண்' ஆகிய இரு பாலருடனும் தனித்தனியே தொடர்புடையவையாகும். ஆனால் விபச்சாரம் எனும் கொடிய பாவம் மட்டும் இரு பாலரின் கூட்டு முயற்சியால் உருவாகக் கூடியதாகும். இந்தப் பாவம் இன்றைய காலகட்டத்தில் பெருகிக் கொண்டே வருவதை பத்திரிகைச் செய்திகளின் மூலம் நம்மால் உணர முடிகிறது.

சிவப்பு விளக்குப் பகுதிகளிலும் விடுதிகளிலும், உல்லாச மாளிகைகளிலும் ஒடுங்கிக் கிடந்த விபச்சாரம் இந்நாளில் 'செல்போன்' மூலம் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு சாலையோரத்தில் மாருதி கார்களில் நடைபெறுமளவிற்கு மலிந்து விட்டது. 'இன்டர்நெட்' மூலம் வாடிக்கையாளர்களுக்கு வலை வீசும் அளவு சமீபத்தில் மேலும் பெருகி விட்டது விபச்சாரம். இந்த விபச்சாரம் வெறும் கண்பார்வையால் கூட நிகழாமல் தடுக்கத் தீய ஆசைப் பார்வையை விலக்கிய விந்தை மார்க்கம் இஸ்லாம் ஆகும்.
  

ஒவ்வோர் ஆணும் ஒவ்வொரு பெண்ணும் தம்முடைய பாலியல் ஆசையுணர்வுகளையெல்லாம் கணவனுக்குள்ளேயோ தன் மனைவியர்களுக்கிடையேயோ கட்டுப்படுத்தி வாழ்வதே ஒழுக்கமான வாழ்வு!" என்பது உலக நீதி ஒத்துக் கொண்ட உண்மையாகும்.         குர்ஆனும் நபி மொழியும் கற்பிக்கும் இத்தகைய ஒழுக்க நெறிக்கு 'கற்பு' என்று பெயர்.

     'கற்பு' எனும் சொல் இந்நாளில் பெண்களுக்கு மட்டுமே உரியது போல் பெரும்பாலோரும் எண்ணியுள்ளனர். உண்மை நிலை அதுவல்ல. 'கற்பு' எனும் மூன்றடுக்கு மாளிகை, பெண் எனும் ஒரு பாலரின் தனியுடைமையா? இல்லை. இருபாலரின் பொதுவுடைமையாகும். எனவே தான் திருமறை மூலம் இறைவன் நபியை நோக்கி, "(பிற ஆண்களை ஏறெடுத்துப் பார்ப்பதை விட்டு) தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தம் மறைவிடங்களை (கற்பு நெறி தவறுவதிலிருந்து) காத்துக் கொள்ளுமாறும் இறைநம்பிக்கையுள்ள பெண்களை நோக்கிக் கூறுவீராக!" (குர் ஆன் 24:31) என்று குறிப்பிட்டதுடன் (பிற பெண்களை ஏறெடுத்துப் பார்ப்பதை விட்டு) தம் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் மறைவிடங்களை (கற்பு நெறி தவறுவதிலிருந்து) காத்துக் கொள்ளுமாறும் இறைநம்பிக்கையுள்ள ஆண்களை நோக்கிக் கூறுவீராக!" என்றும் குறிப்பிட்டுள்ளான். மேலும், "தம் மறைவிடங்களைப் பாதுகாக்கும் ஆண்களும் பெண்களும்    (குர்ஆன் 33:35) அல்லாஹ் தயாரித்து வைத்திருக்கும் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் பெறுவதற்கு தகுதியுள்ள பத்து சாராரில் ஒரு சாரார் ஆவர்.' (குர்ஆன் 24:31) என்றுதான் இறைமறை இயம்புகிறதேயல்லாமல் வெறும் பெண்களை மட்டும் தனியாகச் சொல்லவில்லை.
    
ஓர் ஆண், தன் மனைவியல்லாத அந்நியப் பெண்ணுடன் பலவந்தமாக உடலுறவு கொண்டு விட்டால் மட்டும் 'பெண் கற்பழிக்கப்பட்டாள்' என உலகம் பேசுகிறதே தவிர அந்தப் பெண் காதலன் என்ற பெயரில் அந்நிய ஆணுடன் உடலுறவு கொள்ள இணங்கும்போது 'அவள் கற்பழிக்கப்பட்டாள்' என் யாரும் குறிப்பிடுவதில்லை. கணவன் அல்லாதவன் பலவந்தமாக உடலுறவு கொண்டால் அழிகின்ற கற்பு ஒரு பெண்ணின் இசைவோடு நிகழும் உடலுறவினால் மட்டும் அழியாமல் நீடித்திருக்குமா என்ன? மனைவியல்லாத பெண்ணுடன் ஒருவன் உடலுறவு கொள்ளும் போது அவனுடைய கற்பு அவனாலேயே அழிக்கப்படுகிறதல்லவா? எனவே, 'ஆண் கற்பழிக்கப்பட்டான்' என்றும் சொல்வதில்லையே !
   

  கற்பு பெரும்பாலும் நான்கு காரணங்களுக்காக அழிக்கப்பட்டு வருகிறதெனக் கணிக்கலாம். தன் ஆசை தணிக்கப்படும் விஷயத்தில் போதிய திருப்தியைக் கணவன் மூலம் அடையவியலாத பெண்களாலும், மனைவியின் மூலம் போதிய திருப்தியை அடையவியலாத ஆண்களாலும் அவரவர் கற்பு அழிக்கப்படுகிறது. இவ்வாறு கற்பை இழப்பதில், பெண்களை விட ஆண்கள்தான் பெரும்பாலும் தீவிரமாக உள்ளனர். திருமணம் புரியும் நிலையிலுள்ள இரு தரப்பைச் சார்ந்த இளைய வயதினர் 'காதல்' எனும் காந்தத்தால் ஒருவரையொருவர் கவர்ந்திழுக்கும் போது புதிய அனுபவத்தினால் பூரிப்படைய தம் கற்பை விடுகின்றனர். இவ்வகையைச் சார்ந்த கற்பிழப்பில் இரு தரப்பினரும் சமமான பங்கை வகிக்கின்றனர்.
    
வறுமையின் கோரப் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், வாழ்வில் ஓரளவுக்குக் கிடைக்கும் வசதிகளை மேலும் வளப்படுத்திக் கொள்ளவும் பெண்களில் சிலர் தம் கற்பைத் தாமே அழித்து விடுகின்றனர். இத்தகைய நோக்கில் கற்பை இழப்பது பெண்களுக்கிடையேதான் காணப்படுகிறது. ஆசை வெறி பிடித்த மிருகங்கள் அப்பாவிப் பெண்களைச் சில நேரங்களில் அத்து மீறித் தூக்கிச் சென்று பலவந்தமாகக் கற்பழித்து விடுகின்றனர். இம்முறையிலுள்ள கற்பழிப்பு செய்வோர்களோடு மட்டுமே தொடர்புடையதாகவுள்ளது.


     இத்தகைய நான்கு விதமான கற்பழிப்புகளில் நான்காவதாகக் கூறப்பட்ட வகையில் சிக்கிக் கொண்ட பெண்களைத் தவிர ஏனைய அனைத்து வகைக் கற்பழிப்புகளில் ஈடுபட்ட ஆண்களும், பெண்களும் அல்லாஹ்வின் கடுமையான கோபத்திற்கும் சாபத்திற்கும் உரியவர்களாவர்.

     'விபச்சாரம்' எனப்படும் இத்தகைய கற்பழிப்பினைக் குறித்து இறைவன் "விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்" நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும் அது (பல்வேறு கேடுகளுக்கான) தீய பாதையாகவும் இருக்கிறது" என்று திருமறை மூலம் எச்சரிக்கிறான (குர்ஆன் 17:32) இறைவன் மனிதர்களை நோக்கி "விபச்சாரம் செய்யாதீர்கள்" என்று கூறுவதற்குப் பதில் 'விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்' என்று விலக்கியிருப்பது எத்துணை அழுத்தமானது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். 'நெருப்பைத் தொடாதே!' என்பதை விட 'நெருப்பின் பக்கமே நெருங்காதே!' என்றுரைப்பது வலிவு மிக்கதல்லவா? வார்த்தைச் சித்தர் வலம்புரியார் உவமைப்படுத்துவது போல் 'விபச்சாரம்' எனும் கொசுக்களை ஒழிக்க வேண்டும்' என்று மட்டும் இஸ்லாம் கூறாமல் இந்தக் கொசுக்கள் உருவாவதற்குக் காரணமான 'ஆசைப்பார்வை' எனும் சாக்கடையையே அகற்ற வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகிறது. 'விபச்சாரம் நிகழ்வதற்குக் காரணமாக அமைந்து விடும் அந்நிய ஆண் – பெண் தனிமையாக இருக்கும் நிலை கூட மேற்கண்ட வசனத்தின் மூலம் மறைமுகமாக விலக்கப்பட்டிருக்கிறது.


     ஒருவன் ஒரு பெண்ணுடன் தனித்திருக்கும் போது அங்கே அவர்களோடு மூன்றாம் நபராக ஷைத்தானும் இருக்கிறான் எனும் நபிமொழி (உமர் (ரளி), திர்மிதீ) மேற்கண்ட திருவசனத்தின் கருத்தை மேலும் விளக்குகிறது.


     ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் மிகப் பெரியதாகக் கருதப்படும் பாவம் எது? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கி, அல்லாஹ் உம்மைப் படைத்திருக்க அவனை வணங்குவதில் வேறு ஒருவனை அல்லது ஒன்றை அவனுக்கு இணைகற்பிப்பது' என்றார்கள். 'இதற்குப் பின் எந்தப் பாவம் மிகப் பெரியது? எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள் 'உன்னோடு உணவருந்துவதை (வறுமையை) அஞ்சி உம் குழந்தையைக் கொலை செய்வது!' என்றார்கள். 'இதற்குப் பின் எந்தப் பாவம் பெரியது? என்று அவர் மீண்டும் கேட்டதும், நபியவர்கள் அவரை 'உம் அண்டை வீட்டாரின் மனைவியோடு நீர் விபச்சாரம் செய்வது பெரிய பாவம்!' என்று பதிலளித்தார்கள். அந்நேரம் அண்ணலாரின் மேற்கண்ட பதிலை உண்மைப்படுத்தும் நிலையில் – அருளாளனின் நல்லடியார்களான அவர்கள்) அல்லாஹ்வுடன் இன்னொரு இறைவனை வணங்க மாட்டார்கள். (கொலை செய்யக் கூடாதென்று) அல்லாஹ் விலக்கிய உயிரை அநியாயமாகக் கொலை செய்ய மாட்டார்கள்.' விபச்சாரமும் செய்ய மாட்டார்கள்' எனும் திருவசனத்தை (குர்ஆன் 25:68) அல்லாஹ் அருளினான். (இப்னு மஸ்வூத் (ரளி), புகாரீ, முஸ்லிம்) அண்டை வீட்டாரின் மனைவியிடம் விபச்சாரம் செய்வதை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், பொதுவாகக் கொடிய பாவமான விபச்சாரம் அண்டை வீட்டானின் மனைவியோடு அமையும் போது பாவம் இன்னும் கொடியதாகி விடுகிறது எனும் உண்மையினைக் குறிப்பிடுவதேயாகும். ஏனெனில் அண்டை வீட்டானிடம் அணுக வேண்டிய நல்லன்பும் நம்பிக்கையும் இதனால் தகர்த்தப்படுகிறது.


     கற்பைக் காப்பவர்கள் சுவனத்தில் கண்ணியப்படுத்தப்படும் எட்டு சாராரில் ஒரு சாரார் என்று குர்ஆன் 23:29 கூறுகிறது. பிர்தவ்ஸ் என்ற உயர் சுவனத்தின் வாரிசுக்காரர்களாய் அமைந்து வெற்றி பெறும் மூமின்களின் ஆறு சாராரில் கற்பைக் காப்போரும் ஒரு சாரார் ஆவர் என்றும் அருள்மறை (23:5) உணர்த்துகிறது. ஒருவர் இரு தொடைகளுக்கிடையில் இருக்கும் இன உறுப்பையும் இரு தாடைகளுக்கிடையில் இருக்கும் நாவையும் (தீய வழியிலிருந்து) காத்துக் கொள்வதாக என்னிடம் பொறுப்பு ஏற்றுக் கொண்டால் அவருக்கு நான், சுவனத்தைப் பெற்றுத் தர பொறுப்பேற்கிறேன்" எனும் நபிமொழியும் (ஸஹ்லிப்னு ஸஃது (ரளி, புகாரீ) மேற்கண்ட மறைமொழிகளும் இம்மையில் கற்பைக் காப்போர் மறுமையில் பெறவிருக்கும் இனிய வாழ்வை உறுதிப்படுத்துகிறது. எனவே இம்மையின் அற்ப ஆசைக்காகக் கற்பை இழந்துவிட்டு மறுமையின் அற்புத ஆனந்தங்களை இழக்க நேரிடும் இழிநிலையிலிருந்து நம்மை நாம் காப்போம்! நாயனருள் பெற்றிட முனைவோம்.

நன்றி : சிந்தனை சரம் – நவம்பர் 2005

--Thanks to Brother,
MUDUVAI HIDAYATH


Saturday, August 13, 2011

இந்தியா எங்கள் தாய்நாடு...இஸ்லாம் எங்கள் உயிர் மூச்சு!



அன்புடையீர்,
அஸ்ஸலாமு அழைக்கும்


இன்ஷா அல்லாஹ் நாளது 15 /8 /2011 திங்களன்று காலை சரியாக 8 .30 மணிக்கு நமதூர் ஜமாஅத் சார்பாக பெரியபள்ளி வாயில் அருகில் நமது
பெரிய பள்ளி தலைவர் அல்ஹாஜ் N .M .A சிஹாபுதீன் B .sc (Agri )
அவர்கள் நமது நாட்டின் 64 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றுவார்கள்.

அனைவரும் கலந்துகொள்ள அன்புடன்  அழைக்கின்றோம்

Monday, February 28, 2011

கொழுப்பைக் கரைக்கும் பசலை!

கார்ட்டூன் நாயகன் பாப்பாய்க்கு மிகவும் பிடித்தது பசலைக்கீரை. "என் புஜபல ரகசியம் இந்த கீரை தான்" என்று குழந்தைகளிடம் பிரபலப்படுத்தினான்.


உண்மையில் பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை தரும் காய்கறி வேறெதுவும் இல்லை. இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம். ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

Wednesday, September 8, 2010

யாருக்குப் பெருநாள்?


•உண்ண வசதியிருந்தும் உண்ணவில்லை.
•பருக பலவித பானங்களிருந்தும் பருகவில்லை.
•காலையில் எழுந்து டீ அல்லது காஃபி
•குடித்தால் தான் அன்றைய வேலையே ஓடும்...
•என்ற பழக்கமிருந்தும் குடிக்கவில்லை.
•புகை பிடித்தால்தான் சிந்தனை செயலாற்றும்
•என்ற நிலையிருந்தும் புகை பிடிக்கவில்லை.
இவருக்குத்தான் இனிய பெருநாள்...!
• தன் ஆணவத்தை அடக்கி
•அலட்சியப் போக்கை அழித்து
•பகலில் பட்டினி கிடந்து
•இரவில் இறை வழிபாட்டில் ஈடுபட்டு
•பசி, தாகத்தால் இச்சையை வென்று
•இறை கடமைகளை நிறைவேற்றி
•தானத்தால் ஏழைகளின் கண்களை திறந்த
உண்மை முஸ்லிமுக்குத்தான் பெருநாள்...!
•வறியவர்களின் தேவைகளை கவனித்து
•பட்டினியையும், பசியையும் அடக்கி,
•நோன்பினால் ஈமானை பலப்படுத்தி
•ஆன்மிக பலத்தை நிலை நாட்டி
•ஒரு மாத கடுஞ்சோதனையை வென்று
•இறைவனுக்காக நோன்பிருந்த
•இறைமறையை ஓதி உணர்ந்த
•இறைகடமைகளை நிறைவு செய்த
உண்மை முஃமினுக்குத்தான் உன்னத பெருநாள்...!

•ஏழைவரி(ஜகாத்)யை முறையாக அளித்து
•கருமித்தனத்தை அடியோடு ஒழித்து
•சிறியவர்களை போற்றி - பாராட்டி
•பெரியவர்களை மதித்து நடந்து
•அறிஞர்களுடன் பண்புடன் நடந்து
•செய்த பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு
•இனி பாவமே செய்யமாட்டேன்
•என்ற உறுதி கொண்ட
உண்மை விசுவாசிக்குத்தான் உரிய பெருநாள்!
• எனது தொழுகை அல்லாஹ்வுக்கே!
•எனது தியாகச் செயல் அல்லாஹ்வுக்கே!
•எனது பொதுப்பணி அல்லாஹ்வுக்கே!
•எனது வாழ்வு அல்லாஹ்வுக்கே!
•எனது மரணம் அல்லாஹ்வுக்கே!
•என்று சத்தியப் பிரமாணம் எடுத்த
உண்மையளர்களுக்குத்தான் உண்மைப் பெருநாள்...!

உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய ஈகைப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்!

பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா
அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A (அரபிக்)., M.A (தத்துவமும் சமயமும்).,

Thursday, July 1, 2010

சேட் முஹம்மது அப்துல்லாஹ் - ஆயிஷா அஃப்ரீன் ரிஃப்அத்

இன்று திருமண விழாகாணும் தம்பதிகள் சேட் முஹம்மது அப்துல்லாஹ் - ஆயிஷா அஃப்ரீன் ரிஃப்அத் நீடூடி வாழ வாழ்த்துகிறோம் துபாய் மற்றும் ஷார்ஜா நண்பர்கள், பல பல செல்வங்கள் பெற்று இன்று போல் என்றும் தம்பதிகள் நீங்கள் வாழ எல்லாம் வல்ல நாயனிடம் துஆ செய்கின்றேன் - நோட்டன் தாஹிர் அலி & குடும்பத்தினர்.

Thursday, March 25, 2010

Early Booking Offer!


Tuesday, March 23, 2010

துபாயில் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை சிற‌ப்பு நிக‌ழ்ச்சி : பேராசிரிய‌ர் கே.எம்.கே. ப‌ங்கேற்பு

துபாய் : துபாயில் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் சார்பில் தாய்ச்ச‌பையின் 62 ஆம் ஆண்டு துவ‌க்க‌ விழா ம‌ற்றும் பிறைமேடை மாத‌மிருமுறை இத‌ழ் வெளியீட்டு விழா 25.03.2010 வியாழ‌க்கிழ‌மை மாலை ஈடிஏ அஸ்கான் தொழுகைக்கூட‌த்தில் ( அஸ்கான் ஹ‌வுஸ் ‍ மூன்றாவ‌து த‌ள‌ம் ) ந‌டைபெற‌ இருக்கிறது.
இந்நிக‌ழ்ச்சியில் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ த‌மிழ்மாநில‌ இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் முனீருல் மில்ல‌த் பேராசிரிய‌ர் கே.எம். காத‌ர் மொகிதீன் ( முன்னாள் எம்.பி. ) அவ‌ர்க‌ள் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்த‌ இருக்கிறார்.
இந்நிக‌ழ்வில் அனைத்து ஜ‌மாஅத்தார்க‌ளும் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.
மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு : 050 51 96433 / 050 4753052 / 050 67 65 812

பேராசிரிய‌ர் கே.எம்.கே. இன்று(செவ்வாய்க்கிழ‌மை) துபாய் வ‌ருகை

பேராசிரிய‌ர் கே.எம்.கே. இன்று ( செவ்வாய்க்கிழ‌மை ) துபாய் வ‌ருகை
துபாய் : இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் த‌மிழ் மாநில‌த் த‌லைவ‌ரும், அகில‌ இந்திய‌ பொதுச்செய‌லாள‌ருமான‌ பேராசிரிய‌ர் கே.எம். காத‌ர் மொகிதீன் இன்று செவ்வாய்க்கிழ‌மை மாலை 5.30 ம‌ணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிர‌ஸ் விமான‌ம் மூல‌ம் துபாய் வ‌ருகை த‌ர‌ இருக்கிறார்க‌ள்.

துபாய் விமான‌ நிலைய‌த்தின் டெர்மின‌ல் 2 ல் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் சார்பில் வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சிக்கு அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை த‌லைவ‌ர் அல்ஹாஜ் ஏ. லியாக்க‌த் அலி த‌லைமையில் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. இவ்வர‌வேற்பு நிக‌ழ்ச்சியில் அனைத்து ஜ‌மாஅத்தார்க‌ளும் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை பொதுச்செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா ( 050 467 43 99 ) கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒரு வார‌ கால‌ம் அமீர‌க‌த்தில் சுற்றுப் ப‌ய‌ணம் மேற்கொள்ளும் பேராசிரிய‌ர் துபாய், அபுதாபியில் ப‌ல்வேறு நிக‌ழ்ச்சிக‌ளில் க‌ல‌ந்து கொள்கிறார்.

நிக‌ழ்ச்சிக‌ள் குறித்த‌ மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு 050 51 96 433 / 050 475 3052 / 056 603 2915 / 050 58 53 888 ஆகிய‌ எண்க‌ளில் தொட‌ர்பு கொள்ள‌லாம்.

Monday, February 8, 2010

அன்பைப் பரிமாறுவோம் - ( மவ்லவீ ஹாஃபிழ் டி.எம். முஜிபுர் ரஹ்மான் சிராஜி, திருப்பூர் )

அன்பு பரிமாற்றம்
மனிதர்களுக்கு மத்தியில் பரஸ்பரம் அன்பு, நேசம், நட்பு ஆகியன நீடித்து நிலை பெறுவதற்குரிய காரணிகளை அண்ணலார் (ஸல்) அவர்கள் தங்களின் வாழ்வின் மூலம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவைகளில் ஒன்று அன்பளிப்புகளை பரஸ்பரம் வழங்கிக் கொள்வது. அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள். “அண்ணலார் (ஸல்) அவர்கள் அன்பளிப்புகளை ஏற்றுக் கொள்வார்கள். மேலும் அதற்கு பதிலாக (அதே சமயம் அல்லது வேறொரு சமயத்தில்) தாமும் ஏதேனும் வழங்குவார்கள்”.
(நூல்: புகாரீ 2585)
அன்பளிப்பு பொருட்களை வாங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல் நாமும் அதற்கு பிரதியாக அன்பளிப்புகளை நம்மால் இயன்றளவு செய்ய வேண்டும் என்பதை அண்ணலார் (ஸல்) அவர்கள் தம் வாழ்வில் செய்து காட்டி நமக்கு வழிகாட்டுகிறார்கள். அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் எவர் ஒருவருக்கு அன்பளிப்பு வழங்கப் பட்டு அவரிடம் கொடுப்பதற்கு ஏதேனும் இருந்தால் அதற்கு பதிலாக தனக்கு அன்பளிப்பு செய்தவருக்கு அன்பளிப்பாக கொடுக்கவும். எதுவு மில்லையென்றால் (நன்றி கூறும் வகையில்) கொடுத்தவரை புகழட்டும். ஏனெனில் யார் புகழ்ந்தாரோ அவர் நிச்சயமாக நன்றி செலுத்தி விட்டார். யார் (புகழவில்லையோ மாறாக உபகாரத்தை) மறைத்தாரோ அவர் நன்றி மறந்தவராவார்.
“அறிவிப்பாளர் : ஹள்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரளி)
(நூல்: அபூதாவூது – 4813)
இந்த நபிமொழி மூலமாக அன்பளிப்புக்கு பிரதி உபகாரமாக நாமும் ஏதாவது ஒரு வகையில் அன்பளிப்பு வழங்கியவருக்கு நன்றி செலுத்த வேண்டும். அது தான் அன்பு நீடிக்க காரணமாகும் என்பதை அறிகிறோம்.அன்பளிப்பில் அளவு பார்க்க வேண்டாம்
நம் வாழ்வில் பல்வேறு வைபவங்களில் விசேஷங்களில் அன்பளிப்பு செய்கிறோம். அல்லது அன்பளிப்பு பெறுகிறோம். அன்பளிப்பு செய்வதிலும் பெறுவதிலும் மனிதர்களுக்கு மனிதர் ஒருவருக்கோர் வித்தியாசப்படலாம். வசதியானவர்கள் உயர்வான அன்பளிப்பு பொருளை பரிமாற்றம் செய்து கொள்வர். ஏழ்மையானவர் அவரின் சக்திக்கு தக்கவாறு அன்பளிப்புகளை பரிமாற்றம் செய்து கொள்வர். ஏழையோ, பணக்காரரோ உயர்ந்த அன்பளிப்பு பொருளோ சிறிய அன்பளிப்பு பொருளோ இதில் பாரபட்சம் பார்க்கக் கூடாது. எல்லாவற்றையும் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது தான் அண்ணலார் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையாகும். அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். “ஒரு ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பளிப்பாக பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு ஓர் ஆட்டின் விலா அல்லது கால் அன்பளிப்பாக தரப்பட்டாலும் சரி. அதைப் பெற்றுக் கொள்வேன்” என்று கூறிய அண்ணலார் (ஸல்) அவர்கள் முஸ்லிம் பெண்களே ! ஓர் அண்டை வீட்டுக்காரி மற்றொரு அண்டை வீட்டுக்காரிக்கு ஒரு ஆட்டின் குளம்பை அன்பளிப்பாக கொடுத்தாலும் அதைக் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள் இழிவாக கருத வேண்டாம்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஹள்ரத் அபூஹூரைரா (ரளி) நூல்: புகாரீ 2566 -2568
அன்பளிப்பு செய்பவரின் அன்பைத்தான் காண வேண்டுமே தவிர அவரின் அந்தஸ்தையோ அன்பளிப்பு பொருளின் தரத்தையோ பார்க்க கூடாது. அண்ணலாரின் வரலாற்றில் அன்பளிப்பு செய்ய வந்த ஒரு ஏழைப்பெண்மணியிடம் அன்னார் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது அன்பளிப்பு பெறுபவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். மதீனா நகரில் அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு பலர் அன்பளிப்பு கொடுத்து அதன் மூலம் மனம் நிறைவடைவார்கள். சிலர் தின்பண்டத்தை சிலர் பழங்களை என்று அவரவர்களுக்கு பிடித்தமான பொருளை மனமுவந்து அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பு வழங்கு வார்கள். ஒரு நாள் அண்ணலார் (ஸல்) அவர்கள் தோழர்கள் சூழ மஸ்ஜிதில் அமர்ந்திருந்த நேரத்தில் வயதான பெண்மணி ஒருவர் அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு திராட்சை பழக்கொத்து ஒன்றை கொண்டு வந்து அன்பளிப்பாக வழங்கி அதை புசிக்குமாறு வேண்டி பணிவுடன் நின்றார். தோழர்களுக்கு மத்தியில் அமர்ந்து எதை சாப்பிட நேர்ந்தாலும் அதை தோழர்கள் எல்லோருக்கும் பகிர்ந்து வழங்கி விட்டு பின்பு தான் அண்ணலார் (ஸல்) அவர்கள் உண்பார்கள். ஆனால் இப்போது அந்தப் பெண்மணி கொடுத்த திராட்சை பழக்கொத்தில் ஒன்றை ருசித்த அண்ணலார் (ஸல்) அவர்கள் தொடர்ந்து எல்லா பழங்களையும் ஒன்று கூட விடாமல் ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள். யாருக்கும் வழங்கவில்லை. பரிசளித்த அந்த பெண்மணிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. நான் வழங்கிய எல்லா திராட்சையையும் அண்ணலார் (ஸல்) அவர்கள் சாப்பிட்டதை கண்டு மனம் நிறைவடைந்து அண்ணலாரிடம் இருந்து விடை பெற்று சென்றார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த தோழர்களுக்கு ஆச்சரியம் தாளவில்ல. எந்த ஒரு தின் பொருளையும் பகிர்ந்தளித்து சாப்பிடும் அண்ணலார் (ஸல்) அவர்கள் இந்த தடவை தங்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட திராட்சையி லிருந்து ஒன்று கூட யாருக்கும் வழங்கவில்லையே ! என்ன காரணம்? இது குறித்து அண்ணலார் (ஸல்) அவர்களிடமே சில தோழர்கள் கேட்டும் விடுகிறார்கள். அதற்கு அண்ணலார் (ஸல்) அவர்கள் அளித்த பதில்! “தோழர்களே ! அந்த பெண்மணி மிக அன்போடு திராட்சை குலைகளை எனக்கு வழங்கினார். அதை ருசித்த நான் அந்த பழங்கள் மிக புளிப்பாக இருப்பதை உணர்ந்தேன். அதை உங்களுக்கு யாருக் காவது கொடுத்தால் “புளிக்கிறது” என்று கூறுவீர்கள். அல்லது முகத்தையாவது சுளிப்பீர்கள். இதனால் அந்தப் பெண்மணியின் மனம் நோகி விடும். எனவே தான் அந்தப் பெண்மணி மனம் சங்கடப்படக் கூடாது. சந்தோஷம் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் திராட்சைப் பழங்கள் முழுவதையும் அது புளிப்பாக இருந்தும் நானே சாப்பிட்டு விட்டேன். இதைக் கண்டு அந்தப் பெண்மணியும் மனநிறைவோடு சென்று விட்டார்” என்று அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அண்ணலாரின் இந்த பதில் தோழர்களை நெகிழச் செய்து விட்டது. எனவே அன்பளிப்பு பெறுபவர்கள் அன்பளிப்பு செய்பவரின் அன்பைத் தான் காண வேண்டும். அந்தஸ்தை அல்ல.
அன்பளிப்பில் ஹராம் ! ஹலால் !
நம்முடைய வாழ்வில் கொடுக்கல், வாங்கல், உணவு மற்றும் எல்லா நிலைகளிலும் ஹராம் மற்றும் ஹலால் பேணி வாழ வேண்டும். அது போன்று அன்பளிப்பு பெறுகிற விஷயத்தில் ஹராம் ஹலாலை பேணிக் கொள்ள வேண்டும். இது நடக்கிற காரியமா? அன்பளிப்பு செய்பவரின் தொழிலை நாம் ஆராய்ந்து கொண்டிருக்க முடியுமா? என்றெல்லாம் நம் மனதில் வினா எழலாம். ஆனால் நமக்கு வழி காட்டிகளாக திகழ்ந்த வலிமார்கள், ஆன்றோர்கள் அன்பளிப்பு பெறு வதில் மிகுந்த பேணுதலை கடைபிடித்துள்ளார்கள். மஹ்பூபே சுப்ஹானி ஹள்ரத் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரளி) அவர் களின் வரலாற்றில் ஒரு சான்றை பார்ப்போம். மஹ்பூபே சுப்ஹானி அவர்கள் அருளுரை (பயான்) வழங்குகிறார்கள் என்றால் அதைக் கேட்டு பண்படைய லட்சக்கணக்கில் மக்கள் திரளுவார்கள். ஒரு நாள் அவர்களின் உரையை கேட்க வந்த லட்சக்கணக்கான மக்களில் கலீபா முஸ்தன்ஜித் பில்லாஹ் அவர்களும் ஒருவராக அமர்ந்திருந்தார். நீண்ட நெடிய உரையை மஹ்பூபே சுப்ஹானி (ரளி) அவர்கள் முடித்தவுடன் அவர்களை கலீபா முஸ்தன்ஜித் பில்லாஹ் அணுகி தான் கொண்டு வந்திருந்த பத்து பைகள் நிரம்பிய பொற்காசுகளை அன்பளிப்பாக வழங்கி அதை ஏற்க வேண்டும் என பணிவுடன் வேண்டி நிற்கிறார். அதைப் பெற்றுக் கொண்ட மஹ்பூபே சுப்ஹானி (ரளி) அவர்கள் அவை களில் இருந்து இரண்டு பைகளை எடுத்து தங்கள் கைகளால் பழத்தை பிழிவது போன்று பிழிகிறார்கள். அப்போது அனைவரையும் அதிர்ச்சி யடைய வைக்கும் ஒரு காட்சி நிகழ்கிறது. பிழியப்பட்ட அந்தப்பையில் இருந்து இரத்தம் பீறிட்டு வழிகிறது. கலீபா முஸ்தன்ஜித் பில்லாஹ் முதற்கொண்டு அங்கிருப்பவர்கள் எல்லாம் அதிர்ச்சியுடன் அதைப் பார்க்கிறார்கள். அப்போது மஹ்பூபே சுப்ஹானி (ரளி) அவர்கள் கூறு கிறார்கள். “என்ன பொற்காசுப் பையிலிருந்து இரத்தம் வழிகின்றது என்று பார்க்கிறீர்களா? இது என்ன தெரியுமா? உங்கள் ஆட்சியில் மக்களை கொடுமைப்படுத்தி அவர்களைப் பிழிந்து எடுத்த இரத்தமாகும். (அதாவது தவறான ஆட்சியின் மூலம் மக்களை கொடுமைப்படுத்து கிறீர்கள்) இனிமேலாவது மக்களுக்கு நேர்மையான நீதியான ஆட்சியை வழங்குங்கள் என்று கூற, அதைக் கண்ணுற்ற கலீபா மயக்கமுற்று கீழே சாய்கிறார்கள். அப்போது அங்கிருப்பவர்களை நோக்கி மஹ்பூபே சுப்ஹானி அவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுகிறேன். இவர் மட்டும் அண்ணலார் (ஸல்) அவர்களின் சிறிய தகப்பனார் ஹள்ரத் அப்பாஸ் (ரளி) அவர்கள் வழித்தோன்றலாக இல்லாதிருந்தால் இவருடைய அரண்மனை வரை இந்த இரத்தத்தை பாய்ந்தோடச் செய்திருப்பேன். ஆனால் இவர் என் உயிரினும் மேலான அண்ணலார் (ஸல்) அவர்களின் குடும்பத்தை சார்ந்தவராகவல்லவா இருக்கிறார் என்று கூறினார் கள். எனவே அன்பளிப்பை பெறுகிற போதும் ஹராம் ஹலாலை பேணுவது நன்மை தரும் செயலாகும். அப்படியே ஹராமான வருவாய் உள்ளவரால் அன்பளிப்பு வழங்கப்பட்டு விட்டது என்றால் அதை நாம் உபயோகம் செய்யாமல் வேறு ஏழை எவருக் காவது அதை பயன்படுத்த வழங்கி விடலாம். இதுவும் பேணுதல் மிகுந்த செயலாகும்.
அல்லாஹ்வின் நினைவை அருளும் அன்பளிப்புகள்
இன்று வழங்கப்படும் அன்பளிப்பு பொருட்கள் பல்வேறு பயன்களை நல்கும் விதமாக அமைகிறது. அன்பளிப்பாக வழங்கப்படும் அலங்கார விளக்குகள் அதிசயிக்கத்தக்க வகையில் ஒளியால் கண்சிமிட்டி மகிழ்வை தருகிறது. மேலும் வாட்ச், கடிகாரம் மணிபார்க்க உதவுகிறது. மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் பல்வேறு பலன்களை வழங்கு கிறது. ஆனால் மார்க்க ரீதியான தீனுக்கு சாதகமாக ஏதாவது அன்பளிப்புகள் பரிமாற்றம் செய்யப்படுகிறதா? என்று பார்த்தால் அது மிகவும் குறைவு. ஆனால் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக திகழும் ஸஹாபாக்கள் வாழ்வில் அன்பளிப்பு பரிமாற்றங்கள் அல்லாஹ்வை நினைவு கூறத்தக்க வகையில் அமைந்திருந்ததை வரலாற்றில் பல்வேறு இடங்களில் காண முடிகிறது. இறையச்சம் நிரம்பப் பெற்ற சாதாரண ஒரு ஏழைப் பெண்மணிக்கு “அந்தப் பெண் இறையச்சம் உடையவளாக இருக்கிறார்” என்ற ஒரே காரணத்தால் கலீபா என்ற ஜனாதிபதி பதவியை வகிப்பவர் தன் மகனையே “அன்பளிப்பாக” வழங்கி திருமணம் செய்து கொடுத்திருப்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.
நீதிக்கும், நேர்மைக்கும் பெயர் சொல்லும் கலீபா உமர் (ரளி) அவர் களின் ஆட்சி காலம் அது !இரவு நேரங்களில் வலம் வந்து மக்களின் குறைகளையும் குமுறல்களையும் ஊரின் நிலைமையையும் அணிந்து அதற்கேற்றார் போல் துரித நடவடிக்கை எடுப்பது ஹள்ரத் உமர் (ரளி) அவர்களின் ஆட்சி முறை! வழக்கம் போல் ஒரு நாள் இரவு கலீபா ஹள்ரத் உமர் (ரளி) அவர்களும், அவர்க்ளின் பிரியமான தோழர் ஹள்ரத் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரளி) அவர்களும் நகர் வலம் வருகிறார்கள். ஒவ்வொரு வீதியாக வந்து இறுதியாக குடிசை குடியிருப்புகள் இருக்கும் பகுதிக்கு வருகிறார்கள். அப்போது ஒரு குடிசையினுள் வயோதிகப்பெண்மணி ஒருவரும் இளம்பெண் ஒருவரும் பேசும் ஓசை குடிசை தாண்டி கலீபாவின் காதுகளில் விழுகிறது. வயோதிகப் பெண்மணி கூறுகிறாள். “நாளுக்கு நாள் நமக்கு வறுமை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. எனவே இனிமேல் நாம் விற்பனை செய்யும் பாலில் தண்ணீரை கலந்து விற்றால் தான் நமக்கு கட்டுப்படியாகும்” இதற்கு அந்த இளம் பெண் பதறியடித்தவளாக பதில் தருகிறாள் “வேண்டாம்மா! ஒருபோதும் கலப்படம் செய்து வியாபாரம் செய்யக்கூடாது. இது நம் நாட்டின் கலீபா அவர்களின் உத்தரவு!” இதனைக் கேட்ட அந்த தாய் “கலப்படம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்பது எனக்குத் தெரியும்.நாம் கலப்படம் செய்வது கலீபாவுக் கோ, அல்லது அதிகாரிகளுக்கோ தெரிந்தால் தானே பிரச்சனை ! நாம் இரவோடு இரவாக பாலைக் கறந்து தண்ணீரை கலந்து விடலாம்” என்று கூறுகிறார். உடனே அந்த இளம் பெண் “இந்த நடுஇரவில் நாம் பாலில் தண்ணீர் கலப்பது கலீபாவுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் போகலாம். ஆனால் உன்னையும் என்னையும் இந்த பேருலகத்தையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு தெரியாமலா போகும் அவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறானே ! என்று பதில் பகர்கிறார். குடிசையில் இருந்து வந்த இந்த உரையாடலை கேட்ட வண்ணமாக அவ்விடத்தை விட்டும் அகன்ற கலீபா உமர் (ரளி) அவர்கள் தன் நண்பரிடம் “வறுமையிலும் வழி தவறாமல் நேர்மையை யும் இறையச்சத்தையும் கடைபிடிக்கும் இந்த இளம்பெண்ணுக்கு என்ன பரிசளிக்கலாம்?” என்று வினவுகிறார்கள். நண்பர் ஹள்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப்(ரளி) அவர்கள் “நேர்மை தவறாத தக்வாவுடைய அந்தப் பெண்மணிக்கு ஆயிரம் திர்ஹம் வரை பரிசளிக்கலாம்” என்று பதில் பகர்கிறார்கள். ஹள்ரத் கலீபா (ரளி) அவர்கள் “இல்லையில்லை. அதைவிட அதிகமாக உயர்ந்த அன்பளிப்பு ஒன்றை நான் அளிக்கலாம் என எண்ணியுள்ளேன்” என்று கூறினார்கள். அப்படி என்ன உயர் அன்பளிப்பு? என புரியாமல் நண்பர் கலீபாவை பின் தொடர்ந்து வீட்டுக்கு வருகிறார்கள்.

மறுநாள் காலை கலீபா அவர்களின் இருப்பிடத்திற்கு அந்தப் பெண்ணும் அவளின் தாயாரும் வரவழைக்கப்படுகிறார்கள். இருவரும் கலீபா அவர்கள் ஏன் தங்களை அழைத்துள்ளார்களோ? என்று மனதில் பதறியபடி நிற்கிறார்கள். அவர்களை கலீபா அவர்கள் கனிவோடு அமரச் சொல்கிறார்கள். பின்பு தனக்கருகில் நின்றிருந்த தனது அருமை மகனை அழைத்து இரவில் நகர்வலம் சென்ற போது நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் சொல்லி “இது போன்ற இறையச்சம் நிறைந்த ஒரு பெண் தான் உனக்கு மனைவியாக வர வேண்டும் என நான் பெரிதும் விரும்புகிறேன். நீ என்ன எண்ணுகிறாய்? என வினவுகிறார்கள். அதற்கு கலீபா அவர்களின் மகனார் “நான் இந்தப் பெண்ணை மனப்பூர்வமாக திருமணம் செய்ய விரும்புகிறேன்” எனக் கூறினார்கள். இங்கு அந்தஸ்து அழகு செல்வாக்கு என்று எந்த உலகாதய நோக்கமும் பார்க்கப்படவில்லை. அந்த ஏழைப்பெண் “இறையச்சம் மிகுந்தவளாக இருக்கிறாள்” என்ற ஒரே மறு உலக அம்சத்தை தகுதியாக பார்த்து தன் அருமை மகனை அந்தப்பெண்ணுக்கு கணவராக ஆகும் பேறை கலீபா அவர்கள் அன்பளிப்பு செய்கிறார்கள். இருவருக்கும் எளிமையான வகையில் திருமணம் நடைபெறுகிறது. இதுபோன்று நாம் வழங்கும் அல்லது பெறும் அன்பளிப்புகள் மறுமைக்கு சாதகத்தை ஏற்படுத்தும் வகையில் நன்மையை நல்கும் அம்சமாக அமைவது மிகவும் பலன் தரத்தக்க விஷயமாகும்.

அழிவைத்தரும் அன்பளிப்புகள்
அன்பளிப்பு பரிமாற்றம் என்பது பரஸ்பரம் அன்பு, நட்பு, உறவு, என்ற அம்சத்தின் அடிப்படையில் அமைவது அன்பளிப்பின் மரபு. அதே வேளையில் தற்போது ”காரியம் சாதித்துக் கொள்ளும் “லஞ்சமாக” வும் அன்பளிப்பு வழங்கப்படுகிறது. இது அன்பளிப்பின் நன்மையை சிதைத்து அழிவுப் பாதையில் தள்ளி விடும். ஹள்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் தனது ஆழ்ந்த ஆதங்கத்தை “தற்கால அன்பளிப்பு பரிமாற்ற” விஷயங்களில் வெளியிடுகிறார்கள். “அண்ணலார் (ஸல்) அவர்களின் காலத்தில் அன்பளிப்பு அன்பளிப்பாக இருந்தது. தற்காலத்தில் அது லஞ்சமாக மாறிவிட்டது” என தனது வருத்தத்தை வெளியிடுகிறார்கள். ஆன்றோர்களின் வாழ்வில் ஒரு சான்றை பாருங்கள்.
மவ்லானா அஷ்ரப் அலீதானவி (ரஹ்) அவர்களிடம் ஒரு நபர் வருகின்றார். ஒரு பொட்டலத்தை நீட்டி மவ்லானா அவர்களே ! இதை எனது அன்பளிப்பாக ஏற்க வேண்டும் ! என பணிவுடன் நீட்டுகிறார். வந்த நபர் புதிய நபர் என்பதாலும் அந்தப் பொருள் என்ன என்று தெரியாததாலும் மவ்லானா அவர்கள் “இது என்ன?” என்று வினவு கிறார்கள். இது எனது தோட்டத்தில் விளைந்த கரும்பிலிருந்து எடுக்கப் பட்ட சர்க்கரை ! என்று அந்த நபர் பதில் கூற அதை வாங்கிய மவ்லானா தன்னை சுற்றிலும் அமர்ந்துள்ள தனது மாணவர்களான உலமா பெருமக்களுக்கு பகிர்ந்து கொடுத்து தானும் சிறிதளவு சுவைக் கிறார்கள். சர்க்கரையை அனைவரும் சுவைத்த பின்பு அந்த நபர் மவ்லானா அவர்களை அணுகி “எனக்கு தாங்கள் பைஅத் செய்து கொடுத்து என்னை தங்களின் முரீ தாக்கிக் கொள்ள வேண்டும்” என்று பணிவுடன் வேண்டுகிறார். அதற்கு மவ்லானா அவர்கள் “நீங்கள் யாரென்று எனக்கு தெரியாது. இப்போது தான் அறிமுகம் ஆகி உள்ளீர் கள். மேலும் பைஅத் ஆக வேண்டுமெனில் அதற்கு பல நன்னடத்தை விதிமுறைகள் உள்ளது. அதில் பூர்ணத்துவம் பெற்ற பின்பு தான் பைஅத் வழங்க முடியும் ! என தனது நிலையை விளக்குகிறார்கள். மவ்லானா அவர்களின் இந்த பதில் அவருக்கு கோபத்தை ஏற்படுத்து கிறது. “என்னை முரீதாக்கிக் கொள்ளவில்லையானால் எனது சர்க்கரையை திருப்பித் தாரும்!” என்று ஆவேசமாக கூறுகிறார். இதைக் கேட்டு மவ்லானாவும் சுற்றியிருந்தவர்களும் அதிர்ச்சியடைகிறார்கள். ஏதோ உள்நோக்கம் ஒன்றை வைத்து தான் இவர் சர்க்கரையை அன்பளிப்பு செய்துள்ளார். அன்பளிப்பு செய்ததை திருப்பி கேட்கிறாரே ! எல்லோருக்கும் அதை பகிர்ந்து கொடுக்கப்பட்டு விட்டதே! என்ன செய்வது? என மனதில் பரிதவித்தவாறு மவ்லானா அவர்களும் சுற்றி யிருந்த உலமா பெருமக்களும் அந்த நபரை அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைக்கிறார்கள். இனிமேல் அன்பளிப்பு பொருளை பெறு வதில் மிக ஜாக்கிரதையை கையாள வேண்டும். காரியம் சாதித்துக் கொள்ள அன்பளிப்பு தற்காலத்தில் வழங்கப்படுகிறது என்பதை மவ்லானா அவர்கள் வருத்தத்துடன் உணர்கிறார்கள்.
“(ஒருவர் அன்பளிப்பு செய்துவிட்டு அதை திரும்பக் கேட்டான் என்றால் வாந்தி எடுத்து அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன்”
(அறிவிப்பாளர் : ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரளி)
நூல் : புகாரி
என்று அண்ணலார் (ஸல்) அவர்கள் கண்டனம் தெரிவித்திருப்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஆக அன்பளிப்பு என்பது அன்பு, நட்பு, உறவு ஆகியவற்றை பரிமாற்றம் செய்ய இருக்க வேண்டுமே தவிர காரியம் சாதிக்க உதவும் லஞ்சமாக அமைந்து விடக்கூடாது.
எந்தப் பொருளை அன்பளிப்பு செய்யலாம் ?
அன்பை பரிமாற இன்று எத்தனையோ பொருட்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்படுகின்றன. அன்பளிப்புப் பொருட்களில் சிலருக்கு மிகவும் மனம் கவர்ந்த பொருட்களும் இருக்கத்தான் செய்கின்றன. அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு மிகவும் உகந்த அன்பளிப்புப் பொருள் யாது? ஹள்ரத் சுமாமா அவர்கள் கூறுகிறார்கள். “அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு எவராவது வாசனைத் திரவியத்தை அன்பளிப்பாகக் கொடுத்தால் அதை நிராகரிக்க மாட்டார்கள்”
(புகாரி – 2582)
இதுபோன்று தற்காலத்தில் சமுதாயத்திற்கு மிகவும் பலன் தரத்தக்க அன்பளிப்புப்பொருள் என்னவெனில் பயனுள்ள வழிகாட்டும் நெறி நூல் களை அன்பளிப்புச் செய்யலாம். அன்பை பரிமாறவும் அறவழியை வளர்க்கவும் நூல் பரிமாற்றங்கள் நிச்சயம் துணை நிற்கும். அறிஞர் ஷேக்சஅதி அவர்களின் வரலாற்றில் ஒரு சான்றை இதற்கு சாட்சியாக கூறலாம்.
குலிஸ்தான், பூஸ்தான் போன்ற புகழ் பெற்ற காவிய நூல்களைப் படைத்த ஷேக்சஅதி அவர்கள் ஒரு பயணக்குழுவுடன் சேர்ந்து பார சீகத்திலிருந்து ஈராக்கிற்கு பயணம் செய்கிறார்கள். நீண்ட தூரப் பயணம். 13 நாட்கள் கடந்து 14 நாட்கள் காலையில் இவர்களின் பயணம் தொடர்ந்து கொண்டிருந்த போது திடீரென்று கொள்ளையர் கூட்டம் ஒன்று பயணக்கூட்டத்தை சுற்றி வளைத்தது. பயணிகள் திசைக்கொருவராக சிதறி ஓடுகிறார்கள். சஅதி அவர்கள் மட்டும் துணி வோடு இருந்த இடத்தை விட்டும் அகலாமல் பயணப்பொருளோடு நிற்கிறார். உத்தரவிட்டுக் கொண்டிருந்த (?) கொள்ளையர் கூட்டத் தலைவன் ஓடாமல் நிற்கும் சஅதி அவர்களுக்கு அருகில் வருகிறான். சஅதி அவர்கள் அவனைப்பார்த்து தன் பயணப்பொருட்களை சுட்டிக் காட்டி “இதோ! இந்தப் பையில் முழுவதும் புத்தகங்கள் தான் இருக் கின்றன. இவற்றை நான் மனப்பூர்வமாக உமக்கு அன்பளிப்புச் செய்கிறேன். ஆனால் என் கவலை என்னவெனில் நான் பொக்கிஷ மாக கருதும் இந்த புத்தகங்களை நீ நல்ல முறையில் உபயோகப் படுத்த வேண்டும் என்பது தான்!” என்றார். அதற்கு கொள்ளையர் தலைவன கிண்டலான தொனியில் “இதை எப்படி நான் உபயோகிப்பது? என்று வினவ! ஒரு நல்ல ஆசிரியரை நியமனம் செய்து உனது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கச் சொல். அந்த ஆசிரியருக்கு சம்பளம் நான் கொடுக்கிறேன்! என்று சஅதி கூறுகிறார். இந்த புத்தகங் களை எனது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதால் என்ன பலன்? என்று அவன் மீண்டும் கேட்க; பிறர் பொருளை அபகரிப்பதும் களவாடு வதும் எவ்வளவு கொடிய செயல்! என்றும் அதன்மூலம் பாதிக்கப்பட்ட வர்கள் எவ்வளவு துன்பம் வேதனை அடைகிறார்கள் என்பது உனது குழந்தைகளுக்காவது தெரிய வேண்டாமா? என்று சஅதி சொன்னவுடன் சாட்டையடி பட்டவனாக கொள்ளையத் தலைவன் உணர்கிறான். மனதில் ஏதோ ரசாயண மாற்றங்கள் ஏற்படுவதைப் போன்று உணர்கிறான்.
உடனே ஷேக் சஅதி அவர்களின் கரங்களைப்பற்றி தம் அதரங்களில் ஒற்றிக் கொண்ட அவன் “பெரியவரே! என் கண்களையும் என் மனதை யும் திறந்து விட்டீர்கள். இத்தனை நாள் தவறான பாதையில் சென்று கொண்டிருந்த என்னை எவரும் ஏறிட்டுக் கூடப் பார்க்காமல் என்னைக் கண்டு பயந்து ஓடினார்கள். ஆனால் நீங்கள் துணிச்சலான முறையில் என் முன் நின்றதோடு மட்டுமல்லாமல் எனக்கு அறிவுரை கூறி விட்டீர்கள். இனிமேல் நான் எந்த காரணம் கொண்டு இந்த தவறான தொழிலின் பக்கம் செல்ல மாட்டேன். இனிமேல் நானும் எனது கூட்டத் தினரும் உழைத்து பாடுபட்டு எங்கள் வாழ்க்கையை கழிப்போம்” என நெகிழ்வோடு கூறிய அவன் சஅதி அவர்களிடம் ”பெரியவரே! தயவு கூர்ந்து நீங்கள் கொண்டு வந்த புத்தகங்களை எனக்கு கொடுத்தீர்கள் என்றால் நான் திருந்தி வாழவும் அறவழியில் செல்லவும் எனக்கு அது பயன்படும். என்று வேண்டுகோள் விடுக்க ஷேக் சஅதி அவர்கள் மிகவும் மகிழ்ந்து அந்தப் புத்தகப்பை அனைத்தையும் அவனுக்கு அன்பளிப்புச் செய்து அவன் நேர்வழி நடப்பதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து அனுப்பி வைக்கிறார்கள்.
இந்த வரலாற்று சம்பவத்தைப் போன்று அன்பளிப்பாக சிறந்த நூல்கள். மார்க்க தத்துவ நூற்களை அன்பளிப்புச் செய்தால் அது சிறந்த நற்பலனை நல்கும் என்பதில் சந்தேகமில்லை. நவீன இந்த யுகத்தில் அன்பளிப்பாக “கிஃப்ட் ஹாம்பர்” வழங்குவதைப் போன்று “குர் ஆனின் குரல்” போன்று தரமான இஸ்லாமிய மாத இதழ்கள் வருகின்றன. அவைகளுக்கு ஒரு வருடமோ அல்லது அதற்கு அதிகமாக நம்மால் முடிந்த அளவு சந்தா செலுத்தி யாருக்கு அன்பளிப்பு செய்ய நினைக் கிறோமோ அவர் பெயரில் இதழ்களை அனுப்பி வைக்கச் செய்யலாம். இதுபோன்று நல்ல புத்தகங்கள் அன்பளிப்பு செய்வதால் “அன்பளிப்பு செய்த திருப்தி நமக்கு ஏற்படுவதோடு அறவழியை காண்பித்த நன்மை யும் கிடைக்கும். எனவே நம் உறவுகள், நட்புகள், தோழமைகள் ஆகி யோருக்கு மத்தியில் அண்ணலார் (ஸல்) அவர்கள் காட்டிய வழி முறைப்படி அன்பளிப்புகளை பரிமாறிக் கொள்வோம். அன்பை நீடித்து நிலைபெறச் செய்வோம். அல்லாஹ் நல்லுதவி புரிவானாக.
நன்றி : குர்ஆனின் குரல் ( மே 2009 )

Wednesday, October 28, 2009

UAE Visa + Return Air Ticket for AED 975 only!


Thanks Mr. Hajee (BDM)

Thursday, October 22, 2009

செல்போன் யோசனைகள்

டைப் *#06# - 15 இலக்க எண்களை உமக்குக் காட்டும். உதாரணமாக: 43 4 5 6 6 1 0 7 8 9 4 3 5
அந்த எண்களில் 7 & 8ம் இலக்க எண்கள் 02 or 20 என இருந்தால் தொலைபேசி ஐக்கிர அரபு எமிரேட்டில் தயாரிக்கப்பட்டது. தரம் குறைந்த போன்.

அந்த எண்களில் 7 & 8ம் இலக்க எண்கள் 08 or 80 என இருந்தால் தொலைபேசி ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. பரவாயில்லை ரகம்.

அந்த எண்களில் 7 & 8ம் இலக்க எண்கள் 01 or 10 என இருந்தால் தொலைபேசி பின்லாந்தில் தயாரிக்கப்பட்டது. தரம் வாய்ந்தது.

அந்த எண்களில் 7 & 8ம் இலக்க எண்கள் 00 என இருந்தால் தொலைபேசி பிரான்சில் தயாரிக்கப்பட்டது. மிகச்சிறந்த தொலைபேசியாகும்.

Tuesday, September 15, 2009

புஷ் மீது ஷூ வீசிய நிருபர் இன்று விடுதலை


அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த புஷ் ஓய்வு பெறுவதற்கு முன் ஈராக் சென்றிருந்தார். அப்போது அவர் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் ஒன்றில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

மாநாட்டில் கலந்து கொண்ட டி.வி செனல் நிருபர் முண்டாசர் அல் சேய்தி, தன் கால்களில் அணிந்திருந்த 2 ஷூக்களையும் கழற்றி புஷ் மீது வீசி எறிந்தார். அவருக்கு ஈராக் நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மனுசெய்ததில் இந்த தண்டனை ஓர் ஆண்டாக குறைக்கப்பட்டது. இவரது நன்நடத்தை காரணமாக அந்தத் தண்டனை மேலும் குறைக்கப்பட்டது. இவர் நேற்றே விடுதலை செய்யப்படுவார் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

எனினும் சட்ட நெறிமுறைகள் முழுமை அடையாததால் அவர் நேற்று விடுதலை செய்யப்படவில்லை. இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் விடுதலை செய்யப்படுகிறார். இந்தத் தகவலை அவரது சகோதரர் டர்காம் தெரிவித்தார்

Monday, August 31, 2009

பெற்றோர்களை பேணுவோம்!


பெற்றோர்களை பேணுவோம்!

ஆக்கம்: மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)
உங்களி்ன் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு யார் காரணம்? என்ற கேள்விக்கு எனது தாயும், தந்தையும் தான் என லட்சக்கணக்கானோர் கூடியிருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நன்றிப் பெருக்குடன் உரத்தக்கூறியது வேறு யாருமல்ல, இரட்டை ஆஸ்கர் விருது நாயகன் நமது ஏஆர் ரஹ்மான் தான்!.தனது பெற்றோர்களின் மீது வைத்திருந்த மதிப்பு, மரியாதையினால் தான் இறைவன் இந்த உயர்வை ஏஆர் ரஹ்மானுக்கு வழங்கினான். அதனால் தான் தமது பேச்சின் முடிவில் எல்லாப் புகழும் இறைவனுக்கே! எனக்கூறி நிறைவு செய்தார்.பெற்றோர்களின் மனம் குளிரும்படியாக நடந்து கொள்ளும் எந்தப் பிள்ளைகளும் இறைவனால் கைவிடப்பட மாட்டார்கள் என்பதற்கு எவ்வளவோ உதாரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
மேலும் .... http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0826-take-care-of-parents.html

Sunday, August 23, 2009

A Grand IFTHAR Party

The Organizing Committee of

Alumni of Jamal Mohamed College

UAE Chapter

has the pleasure to invite all the Jamalians to

A Grand IFTHAR Party

The program will be presided over by our President

Mr. SADIQ

(Managing Director Landmark Hotels)



Felicitators

Mr. M. Akbar Khan

(Executive Director of HRM Division ETA Ascon Group)



Prof. S.M. Khalanthar

(Director of Education – SEMS Group, ETA Star International Schools, U.A.E)



Mr. M. Abdul Rahman M.P.

(Founder Member & General Secretary)

Venue: Landmark Hotel, Level-1

(Nasser Square, Deira, Dubai)

Date: 26th Aug 2009 (Wednesday) at 06:00 pm


“We meet to reminisce our college days”

“Your pleasing presence will be cherished by each one of our fellow Jamalians”

For further information, please contact 050-5489609/050-5356650


Thursday, August 13, 2009

Tuesday, August 11, 2009

உறவுகள் மேம்பட ...

நானே பெரியவன் , நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்

எந்த விஷயத்தையும் , பிரச்சனையும் கையாளுங்கள்

சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்து ஆகவேண்டும் என்று உணருங்கள்

நீங்கள் சொன்னதே சரி , செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்

குறுகிய மனப்பான்மையை விட்டு ஒழியுங்கள்

மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி கர்வப்படாதீர்கள்

அளவுக்கு அதிகமாய் தேவைக்கு அதிகமாய் ஆசைபடாதீர்கள்

எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள்

கேள்வி படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்

உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்

மற்றக் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்

புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாததுப் போல் நடந்து கொள்ளாதீர்கள்

பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் , தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்

பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்

Monday, August 10, 2009

அல் அமான் இளைஞர் இயக்க அமீரக (UAE) உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம்.

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) ,
எதிர்வரும் 14.08.2009 வெள்ளி மாலை 5 மணியளவில் (Deira, Nasser Square, Maktoum Road, Behind of CBD Bank, Dubai ) இயக்க உறுப்பினர் தாஹிர் அலி அவர்களின் இல்லத்தில், அல் அமான் இளைஞர் இயக்க அமீரக (UAE) உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது, அதுசமயம் இயக்க மற்றும் ஊர் நலம் குறித்து பல முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளதால் இயக்க (UAE) உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு நல்ல ஆலோசனைகளை வழங்க வேண்டுகின்றோம்.
என்றும் சமுதாய சேவையில் ....
அல் அமான் இளைஞர் இயக்கத்தினர்

Monday, August 3, 2009

ஆகஸ்ட் 5 – துபாயில் ரத்ததான முகாம்

துபாய் : துபாயில் இந்திய சமூக நல கமிட்டி மற்றும் அல் வாஸல் மருத்துவமனை ஆதரவுடன் இந்திய கன்சுலேட்டில் ஆகஸ்ட் 5 புதன்கிழமை காலை காலை 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நடைபெற இருக்கிறது.
இதன் மூலம் சேகரிக்கப்படும் ரத்தம் தலசீமியா எனும் குறைபாடால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு ஒரு முறை மாற்றப்படுவதற்கும், மேலும் அறுவை சிகிச்சை மற்றும் விபத்து கால சிகிச்சைகளுக்கும் பயன்படுத்தப்படும்.
இத்தகைய மனிதாபிமான பணிகளுக்கு பயன்படும் ரத்தத்தை மனிதாபிமான அடிப்படையில் ரத்ததானம் வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஈமான் அமைப்பு இந்திய சமூக நல கமிட்டியின் நிறுவன உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.


SUBJECT : BLOOD DONATION CAMP
VENUE : CONSULATE GENERAL OF INDIA, DUBAI
DATE : WEDNESDAY, 5TH AUGUST, 2009
TIME : 09.00 A.M. to 02.30 P.M.
Indian Community Welfare Committee(ICWC) in assosciation with Blood Donation Centre, Al Wasal Hospital, Dubai Ministry of Health Authority has organised a Blood Donation Camp on Wednesday, 5th August, 2009 at Consulate General of India, Dubai from 09.00 a.m. to 02.30 p.m.
As you are well aware, Al Wasal Hospital peroforms various humanitarian services like poviding blood for serious children suffering from Thallasemia, who are constantly in need of blood transfusion evey three to four weeks. In addition blood is also required for patients require surgery for various illness and in particular for accident victims.
We look forward to receive your support and participate in this noble contribution.
By donating blood, you matain your good health and save the life of others. Those who are interested to participate in this valuable service.

For details Pl. contact Mr A Mohamed Thaha 050 467 43 99 / 050 25 33 712

Sunday, July 19, 2009

வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.யின் நாடாளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை

ஜமால் முஹம்மது கல்லூரியின் பலயமாணவரும் எங்கள் பாசத்திற்குரிய அண்ணனும் , வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.யின் நாடாளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை ...
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற முதல்வர் கலைஞரின் திட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் தொடங்கி வேலை வாய்ப்புகள் உருவாக்கித்தர வேண்டும்.
இஸ்லாமிய வங்கி முறையை இந்தியாவில் தொடங்க வேண்டும்
நாடாளுமன்ற மக்களவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு வேலூர் தொகுதியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசுகையில் குறிப்பிட்டதாவது.
மாண்புமிகு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த அவையில் தாக்கல் செய்த 2009- 2010-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை குறித்த எனது கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பளித்த மாண்புமிகு துணைத்தலைவர் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிதிநிலை அறிக்கை சந்தேகத்திற்கிட மில்லாத வகையில் நடைமுறைப்படுத்தக் கூடிய பல விஷயங்களை வெளிப்படுத்தியிருக்கிறது.
நாட்டில் அனைத்து தரப்பு மக்களுடைய உளப்பூர்வமான அங்கீகாரத்தை பெற்றுள்ளது. அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துக் களின் அடிப்படையில் நமது நாட்டில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இந்த நிதி நிலை அறிக்கையில் பசுமைப் புரட்சிக்கான புதிய சகாப்தம் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதை நான் உளமாற பாராட்டுகிறேன். இந்த நிதிநிலை அறிக்கையில் சில முக்கிய திட்டங்கள் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. அதை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் விகிதாச்சாரம் 2014-ம் ஆண்டிற்குள் பாதியாக குறைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயமே இந்த நாட் டின் முதுகெலும்பாக திகழ்கிறது. விவசாய உற்பத்தி வருடத்திற்கு 4 சதவீதம் உயர்த்தப்படும் என்று சொல்லப்பட்டிருக் கிறது. 2014-ம் ஆண்டிற்குள் கூடுதல் முதலீடு 9 சதவீதம் உயர்த்தப்படும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதார போட்டியின் சவால்களை சந்திக்க இந்திய தொழில்களுக்கு எல்லா வகையான உதவிகளையும் செய்ய உறுதி கூறப்பட்டுள்ளது.
விவசாயக் கடன் 2 லட்சத்து 87 ஆயிரம் கோடியாக இருந்து 3 லட்சத்து 27 ஆயிரம் கோடி யாக உயர்த் தப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு 3 லட்ச ரூயாய் 7 சதவீத வட்டியின் கீழ் கடன் கொடுக்கப்படு கிறது. தவறாமல் கடனைத் திருப்பி செலுத்துகின்றவர்களுக்கு ஒரு சதவீத ஊக்கத் தொகை கொடுக்கப்படுகிறது. இவைகளெல்லாம் வரவேற்கத்தக்க விஷயங்கள்.
விவசாய - நெசவாளர்கள் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 2 ஏக்கருக்கு மேல் உள்ள நிலம் உள்ளவர்கள் கடன் தவணைகளை இந்த வருடம் டிசம்பர் 31-க்குள் 75 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதும் என குறிப்பி டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2 ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ள வர்கள் நிலை என்ன? என்பதை அறிய விரும்புகிறேன். நமது நாட்டில் சிறிய விவசாயிகள் தான் அதிகம் உள்ளனர். நான் சொல்ல விரும்புவது அந்த சிறிய விவசாயிக ளையும் பயன் அடையும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினர் மாதத்திற்கு 25 கிலோ கோதுமை அல்லது அரிசி கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் வீதம் வாங்க லாம் என அறிவித்துள் ளீர்கள். அது பாராட்டுக்குரியது. அதேசமயம், தமிழ்நாடு முதல்வர் கலைஞர் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி என்ற திட்டத்தை அறிவித்து அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப் பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். அந்த திட்டத்தை மத்திய அரசு ஏன் நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தக்கூடாது.
தமிழ்நாட்டில் கைத்தறி பூங்கா அமைப்பதாக இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததை பாராட்டி வரவேற்கிறேன்.
நமது நாட்டில் மிக குறைந்த அளவில்தான் பெண்கள் படித்தவர்களாக உள்ளனர். அது மிக மிகப் பெரிய சவாலாக உள்ளது. தற்போது, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சிறுபான்மை மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேசிய மகளிர் கல்வி மேம்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டுள் ளது. வேலூர் நாடாளு மன்றத் தொகுதிக்குட்பட்ட பேரணாம்பட்டை சுற்றி 60 கி-மீட்டர் சுற்றள விற்குள் மகளிர் கல்லூரிகளே இல்லை. அந்த குறையை போக்கிடும் வகையில் அங்கு மகளிர் கல்லூரி ஒன்றை நிறுவ அரசை வேண்டுகிறேன்.
உயர்கல்விக்காக 200 கோடி ரூபாய் இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குபட்ட குடியாத்தத்தில் ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி கற்பதற்கு கல் லூரி அமைத்துத் தருமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தோல் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், நெசவாளர்கள் என தொழில் செய்கின்றவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் உயர வேலூர் நாடாளுமன்றத்தொகுதியில் பெரிய அளவில் தொழிற் சாலைகள் தொடங்கி வேலை வாய்ப்புக்கள் அமைக்கப்பட வேண்டும்.
இந்த நிதி நிலை அறிக்கையில் சிறுபான்மையினரின் பல நோக்கு முன்னேற்றத் திட்டத்துக்கு ரூ.1740 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது போதுமானதல்ல. நீதியரசர் ராஜேந்திர சச்சார் அறிக்கை முஸ்லிம்களின் பரிதாப நிலைகளில் அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டியுள்ளது. அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த நிதி போதாது. இதற்கு அதிகமான நிதி ஒதுக்க வேண்டும்.
இந்திய நாடாளுமன்றத் தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த மாபெரும் தலைவர்களான காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயீல் சாஹிப், இப்ராஹீம் சுலைமான் சேட், குலாம் மஹ்மூது பனாத்வாலா, சிராஜுல்மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் உள்ளிட்டோர் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வீரமிக்க குரல் எழுப்பியுள்ளனர். அவர்கள் இந்த சமுதாயங்களின் உயர்வுக்காக அளப்பரிய பங்களிப்பு செய்துள்ளனர். அவர்களுக்காக இந்த அவையில் குரல் எழுப்பியதை நான் நினைவு கூர விரும்புகிறேன்.
மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலத்தின் மலப்புரத்தில் அலிகர் முஸ்லிம் சர்வகலா சாலையில் புதிய கிளைகள் ஆரம் பிக்கப்பட ரூ.25 கோடி ஒதுக்கியிருப்பதை வரவேற்கிறேன்.
உலகப் பொருளாதாரம் 1.3 சதவீதம் இந்த வருடத் தில் உயரும் என சர்வதேச நிதி ஆணையம் அறிவித் துள்ளது. இதில் இந்தியா வின் பொருளாதாரம் ஏப்ரல் 2009லேயே 4.5 சதவீத வளர்ச்சியை எட்டி விட் டது. 5.4 சதவீதம் வரை இது உயரும் என சொல்லப்பட் டுள்ளது. எதிர்கால இந்தியாவிற்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கி றது என்பது இதன் மூலம் வெளிச்சமாகியுள்ளது.
வங்கிகளுக்கு சாதகமான பல திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் பொருளாதார வல்லுநர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இஸ்லாமிய வங்கி முறை திகழ்கிறது. ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடு களில் இது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இஸ்லாமிய வங்கி முறை உலக அளவில் வெற்றிகர மாக நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. வட்டி, நிலுவைத் தொகை செலுத்த முடியாதவர்க ளுக்கு நிவர்த்தி செய்யக் கூடிய ஒரு முறையாக இஸ்லாமிய வங்கி முறை அமைந்துள்ளது. வர்த்தக நோக்கின் அடிப்படையில் இந்த வங்கி முறை செயல் படுகிறது. உலக அளவில் பொருளாதார நிபுணர்கள் இஸ்லாமிய வங்கி முறையை வரவேற்றுள்ள னர். ஜாதி மதங்களை கடந்து ஐரோப்பிய மேற் கத்திய மற்றும் அரபுலக நாடுகளில் இஸ்லாமிய வங்கி நிறுவப்பட்டுள்ளது. இந்த வங்கி முறை அனைத்து மக்களுக்கும் தெளிவான ஒரு முறையாக உலகில் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. இது இந்தி யாவில் நடைமுறைப் படுத்தப்பட்டால் வங்கித் துறையில் முன்னேற்றம் காணலாம்.
சமீபத்தில் ரகுராம் ராஜன் தலைமையிலான குழுவினர் இந்தியாவில் இஸ்லாமிய வங்கியை நிறுவ இந்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
உலக இஸ்லாமிய வங்கி அமைப்போடு ஒருங்கி ணைப்புச் செய்ய இந்திய அரசு விரும்பினால் நான் அதற்காக இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன். அவர்களை அழைத்து வருவதாக இருந்தாலும் கலந்தாய்வு செய்வதாக இருந்தாலும் அதற்கு நான் ஒத்துழைக்கத் தயாராக உள்ளேன்.
உலகப் பொருளாதார நெருக்கடியால் அனைத்து வங்கிகளும் பாதிக்கப்பட்ட நிலை யில் இஸ்லாமிய வங்கி முறை எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட்டிருப்பது நிருபிக்கப்பட்டுள்ளது.
எச்.எஸ்.பி.சி.., சிட்டி வங்கி உள்ளிட்ட சர்வதேச வங்கிகள் நடைமுறையில் உள்ள வங்கி முறைகளோடு அதற்கு அப்பாலும் இஸ்லாமிய வங்கிக்கான தனிப்பிரிவு ஏற்படுத்தி மாற்றத்தகுந்த வங்கி முறையை ஏற்படுத்தியுள்ள னர். இதில் கவனிக்கத்தக்க ஒன்று என்னவெனில், நமது நாட்டில் நடைமுறையில் உள்ள வங்கி சேவைகளை விட இஸ்லாமிய வங்கி முறையின் பிரிவில் அதிக வருமானம் வந்துள்ளது.
எனவே, இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் நிறுவ நான் வலியுறுத்து கிறேன்.
இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. பேசுகையில் குறிப்பிட்டார்.

NOTICE BOARD

இஸ்லாமிய அமைப்புகளின் இலட்சிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்ஹு. அன்றொரு காலம் இருந்தது: திமுக வின் கருணாநிதியும்அதிமுக வின் MGR ம் பொது நிகழ்ச்சிகளில் சந்திக்க நேர்ந்தால் தழுவிக்கொள்வார்கள் அல்லது குசலமாவது விசாரிப்பார்கள்.. ஆனால் இரு கட்சித்தொண்டர்களும் அடிதடி , கைகலப்பு , வெட்டு குத்து என அன்றாடம் மோதிக்கொள்வதை ஊடகங்கள் வழியாக அறிந்திருந்தோம். இன்றொரு காலம் இருக்கிறது: இஸ்லாமிய சமுதாய அமைப்புகளின் கண்ணியமிக்க தலைவர்கள், தங்களது கருத்து வேறுபாடுகளால் பொது நிகழ்ச்சிகளில் சந்திப்பதைக்கூட தவிர்க்க சிந்திக்கிறார்கள். ஆனால் சமுதாய அமைப்புக்களில் தங்களை உட்படுத்திக்கொண்ட அன்பிற்குரிய சகோதரர்கள் மோதிக்கொள்வதாகத் தகவல்கள் மிக அரிது.. வாதத்துக்காகவும் ,பகட்டுக்காகவும் இல்லாமல் சுய சிந்தனையோடு கூறுங்கள் சகோதரர்களே! உங்களில், ஒற்றுமை ஏற்படுவதை விரும்பாத ஒருவராவது இருக்க முடியுமா? அல்லது ''ஒற்றுமை ஏற்படாதா?'' என்று ஆதங்கப்படாத உள்ளம் தான் இருக்க முடியுமா? சமுதாயத்தலைவர்கள் தங்கள் வெட்டி கௌரவத்தை(பந்தா?) விட்டு வெளியில் வந்து பழையன மறந்து சமுதாய ஒற்றுமைக்காக புது உறவை ஏற்படுத்த மாட்டார்களா? தங்களை நல்ல முறையில் வழி நடத்த மாட்டார்களா? என்று ஏங்காத உள்ளமுடைய எவரேனும் உங்களில் இருக்க முடியுமா? நாம் சிந்தனை செய்யும் சக்தியை ஏக இறைவனால் வழங்கப்பெற்றவர்கள்...சிந்தனை செய்யுங்கள்.... ((((( 2 ))))) அனைத்து இஸ்லாமிய சமுதாய இயக்கங்களும் இலட்சியத்தில் ஒன்று படுகிறது; நோக்கம் இறைவனின் நேசத்தைப்பெற்று மறுமை வெற்றியை அடைய வேண்டும் என்பதாகத்தான் அமைந்திருக்கும். மாஷா அல்லாஹ்.நோக்கம் உன்னதமானது. ஆக, பாதைகள் தான் வெவ்வேறே தவிர இலக்கு வெவ்வேறல்ல. ஆனால் துவங்கப்பட்ட அமைப்புகள் இந்த இலட்சியத்தை அடைவதற்கான செயல்பாடுகளிலிருந்து தடம் புரள்வதேன்? துரதிர்ஷ்டவசமாக சில இயக்கங்களை நிர்வகிப்பவர்களின் செயல்பாடுகள் ''ஊசலாட்டங்களை ஏற்படுத்துபவனின்'' செயல்களைப் போன்று அமைந்து விடுகிறது. இங்கே 'மாற்றான் தோட்டத்து மல்லிகையின் மணம்' கண்டு கொள்ளப்படுவதேயில்லை; ஏனைய பண்புகளே மிகைப்படுத்தப்படுகிறது. பிற இஸ்லாமிய சமுதாய அமைப்புகளுடையவும் அதைச்சார்ந்தவர்களுடையவும் குறைகளை மிகைப்படுத்துவதையே முக்கிய இலக்காகக் கொண்டுள்ளனரோ? என்று எண்ணத்தோன்றுகிறது! படைக்கப்பட்டவனுடைய உள்ளத்தை படைத்தவன் அறிவான். படைத்தவனின் உரிமைகளை தனதாக்கிக்கொள்ள எவருக்கு தகுதியிருக்கிறது? ''இன்னமல் அஃமாலு பின் நிய்யத்''என்பதை மறப்பதேன்? நான் அல்லது நாம் செய்வது தான் சரியென்பது அவரவர் நம்பிக்கை; தீர்ப்பு செய்யும் அதிகாரம் படைத்தவனுக்குரியது. குறைகள் தெரிந்தாலும் அன்போடும் அக்கரையோடும் நளினமான முறையில் எடுத்துக்கூறும் பண்பு ஏன் இல்லாமல் போயிற்று? எங்கே இந்த சமுதாயம் அழிந்துவிடதா? என நப்பாசை கொண்டு திரிபவனுக்கு மத்தியில் நமது குறைகளை மேடைபோட்டு அரங்கேற்றுவதில் சகோதரர்களே! நீங்கள் உடன்படுகிறீர்களா? ((( 3 ))) நமது இயக்கங்களின் நிர்வாகிகள் அரசியல் குள்ளநரிகளின் சூழ்ச்சியில் விழுந்து விடும் சூழ்ச்சுமம் என்னவாக இருக்கும்? இதற்கு விடை அறிய வேண்டுமெனில் முதலில் சூழ்ச்சி என்னவென்று தெரிய வேண்டும். சமீபத்திய நிகழ்வு ஒன்றை பார்ப்போம்... நமது சமுதாய இயக்கம் ஒன்றின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில்,, ஒரு கட்சியை வரும் பாரளுமன்றத்தேர்தலில் ஆதரிப்பது என்பதும் ஒரு தீர்மானம். இந்த முடிவு 2007 ஆம் வருடத்திலேயே எடுக்கப்பட்டது என்பது வெளியிடப்பட்ட கடிதத்தின் வாயிலாக நமக்கு இப்போது தெரிய வருகிறது. ஆனால் எழுதப்பட்ட கடிதம் யாருக்கு? நரிக்குணத்துடன் முதுகில் குத்தும் குணமுடையவருக்காயிற்றே! முன்னணி இயக்கங்களில் ஒன்றை கூட்டுப்பிடித்திருந்தும் மற்றொன்றின் ஆதரவு இல்லாததால் (கோவை மற்றும் சில இடங்கள்)பெரும்பான்மையும் கிடைக்கவில்லை; கிடைத்த இடங்களிலும் (சென்னை மற்றும் சில இடங்கள்)சொற்ப ஓட்டுக்களில் வெற்றி என்று நொந்து போயிருந்தவருக்கு அல்லவா இந்த கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.. 2007 ல் தகவல் கிடைக்கப்பெற்றவர் குதூகலம் அடைந்திருப்பார்! ''இந்த இஸ்லாமியர்கள் சொன்ன சொல்லைக் காப்பார்கள்'' என்பதும் ''இந்த இஸ்லாமிய இயக்கங்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் ஒற்றுமையற்ற இயக்கங்கள்'' என்பதும் புரிந்த தந்திரக்காரர் அவர்! திட்டம் வகுத்திருப்பார்!! இலவசமாக ஒரு இயக்கத்தின் ஆதரவு கிடைக்கப்போகிறது; முன்னர் ஆதரித்த இயக்கம் கூடவே இருந்தால் ஒன்றிரண்டு தொகுதிகள் கேட்டு நச்சரிப்பார்கள் ; திட்டம் வகுத்து கழற்றி விட்டுவிட்டார்.. சூடு, சொரணையற்ற இளிச்சவாயர் கூட்டத்தின் பகுதி ஓட்டுக்கள் இலவசமாகக் கிடைக்கும் போது மற்றொரு பகுதியில்லாமலே (அதுவும் சிதறி விடும்)இந்த சமுதாயத்தை சமாளித்து விடலாம் என்று சூழ்ச்சி செய்தார். சரி, அவர் சூழ்ச்சி செய்தார்! அது அவரது அரசியல்! நம்மவர்கள் எப்படி சூழ்ச்சியில் விழுந்தார்கள்? என்றெல்லாம் (இஸ்லாமிய இயக்கங்களின் இலட்சிய சகோதரர்களே) நீங்கள் கேட்க விரும்புகிறீர்கள் என்றால் ........மகிழ்ச்சி.........நீங்களும் சிந்திக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று பொருள். இன்ஷா அல்லாஹ்... தொடருவேன்... சமுதாய ஒற்றுமையை விரும்பும் ஒரு சாதாரண சகோதரன்... நாஞ்சில் தமிழ்.

திக்ருகள்‏

திக்ரு என்பது இறைவனை நினைவு கூறுவதாகும்.. மனிதன் இறைவனின் நினைவுகளோடு இவ்வுலகில் வாழ வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைபாடு. இது மனிதனை வெற்றிக்கு இட்டுச் செல்லும் வழியாகும். ஐவேளை தொழுகை கூட இறைவனை நினைவு கூறக்கூடியதாகவே அமைந்துள்ளது. தொழுகை நேரம் போக அன்றாட வாழ்க்கையின் மற்ற நேரங்களிலும் இறைவனை நினைவு கூறுவதற்கு சில திக்ருகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.. அதற்கு முன் திக்ரு செய்வதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும். திக்ருகளின் சிறப்புகள் : فَاذْكُرُونِي اَذْكُرُكُمْ 'என்னை நீங்கள் நினைவு கூறுங்கள், நானும் உங்களை நினைவு கூறுவேன்' (அல்குர்ஆன் 2:152) நாம் அல்லாஹ்வை திக்ரு செய்தால் அல்லாஹ் நம்மை நினைவு கூறுகிறான். இது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். وَاذْكُرْ رَبَّكَ فِيْ نَفْسِكَ تَضَرُّعًا وَخِيْفَةً وَدُوْنَ الجَهْرِ مِنَ القَوْلِ بِالْغُدُوِّ وَالآصَالِ وَلاَ تَكُنْ مِنَ الغَافِلِيْنَ '(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும் மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்' (அல்குர்ஆன் 7:205) திக்ரு எவ்வாறு செய்ய வேண்டும் என்ற முறையை இறைவன் இங்கே நமக்கு கற்றுத் தருகிறான். يَأيُّهَا الَّذِينَ ءَامَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا ، وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا 'ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு செய்யுங்கள்.. இன்னும் காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்' (அல்குர்ஆன் 33:41,42) அல்லாஹ்வை அதிகமதிகம் திக்ருச் செய்ய வேண்டும், காலையிலும் மாலையிலும் அதிகமதிகம் செய்ய வேண்டும் என்பது இதன் பொருளாகும். காலையிலும் மாலையிலும் மட்டும் திக்ருச் செய்தால் போதும் என்பது இதன் பொருள் அல்ல. لاَيَقْعُدُ قَوْمٌ يَذْكُرُوْنَ اللهَ عَزَّ وَجَلَّ إِلاَّ حَفَّتْهُمُ المَلاَئِكَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِيْنَةُ ، وَذَكَرَهُمُ اللهُ فِيْمَنْ عِنْدَهُ (رواه مسلم) 'அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாக அமரும் கூட்டத்தினரை மலக்குகள் சூழ்ந்தும், ரஹ்மத் (இறையருள்) அவர்களை மூடியும் 'ஸகீனா' என்னும் நிம்மதி அவர்கள் மீது இறங்கியுமே தவிர வேறில்லை. அல்லாஹ் தன்னிடமுள்ளவர்களிடம் (மலக்குகளிடம்) அவர்களைப் பற்றி (புகழ்ந்து) கூறுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்கள்: அபூஹுரைரா (ரலி), அபூ ஸயீது (ரலி) நூல்: முஸ்லிம்) திக்ரு செய்வோரை மலக்குகள் சூழ்ந்து இருப்பார்கள், மனிதன் சுவர்க்கம் செல்ல அவசியம் தேவைப்படும் இறையருள் அங்கே இறங்குகிறது, நிம்மியும் இறங்குகிறது. அல்லாஹ் அவர்களைப் பற்றி புகழ்ந்து கூறுகிறான் போன்றவற்றை இழக்க எவருக்குத் தான் மனம் வரும். மற்றொரு ஹதீஸில், அல்லாஹுத்தஆலாவின் சில மலக்குகள், திக்ரு செய்பவர்களைத் தேடியவர்களாக பாதையில் சுற்றுவார்கள். அல்லாஹுத்தஆலாவை திக்ரு செய்யும் கூட்டத்தாரை அவர்கள் கண்டால் உடனே, 'இதோ இங்கு உங்கள் குறிக்கோளின் பக்கம் வாருங்கள்' என அவர்கள் ஒருவருக்கொருவர் அழைப்பு விடுப்பார்கள். உடனே அனைத்து மலக்குகளும் அங்கு வந்து, திக்ரு செய்யும் கூட்டத்தாரை முதல் வானம் வரை சூழ்ந்து கொள்வார்கள். பிறகு அவர்களின் இரட்சகனான அல்லாஹ் - அவன் மிக அறிந்தவன் - என் அடியார்கள் என்ன கூறினார்கள்? என்று கேட்பான். அதற்கவர்கள், உன்னை தஸ்பீஹ் செய்கிறார்கள், உன்னை தக்பீர் கூறுகிறார்கள், உன்னை புகழ்கிறார்கள், உன்னை கண்ணியப்படுத்துகிறார்கள் எனக் கூறுவார்கள். அதற்கவன், என்னை அவர்கள் பார்த்துள்ளார்களா? என்று கேட்பான். அதற்கவர்கள் இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் உன்னைப் பார்க்கவில்லை என்பார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் என்னைப் பார்த்திருந்தால் எவ்வாறு இருப்பார்கள்? எனக் கேட்பான். அதற்கு மலக்குகள், அவர்கள் உன்னைப் பார்த்திருந்தால், இன்னும் மிக அதிகமாக உன்னை வணங்குபவர்களாகவும், மிக அதிகமாக உன்னைக் கண்ணியப்படுத்துபவர்களாகவும், மிக அதிகமாக உன்னை தஸ்பீஹ் செய்பவர்களாகவும் இருப்பார்கள் எனப் பதிலளிப்பார்கள். பிறகு அல்லாஹ், அவ்வடியார்கள் என்ன கேட்டார்கள்? என்று அவர்களிடம் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்டார்கள் எனக் கூறுவார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் அதனைப் பார்த்துள்ளார்களா? என்று கேட்பான். அதற்கு மலக்குகள், இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்கள் இரட்கனே! அவர்கள் அதனைப் பார்க்கவில்லை எனப் பதிலளிப்பார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் எவ்வாறு இருக்கும்? என்று கேட்பான். அதற்கு மலக்குகள், அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் அதன் மீது மேலும் பேராசைக் கொள்வார்கள், அதிகமாகத் தேடுவார்கள், அதனை அடைய அளப்பெறும் ஆவல் கொள்வார்கள் எனக் கூறுவார்கள். பின்னர் அவர்கள் எதனை விட்டுப் பாதுகாவல் தேடுகிறார்கள் என மலக்குகளிடம் அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் நரகை விட்டுப் பாதுகாவல் தேடுகின்றனர் என்பர். அவர்கள் அதனைப் பார்த்துள்ளார்களா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் அதனைப் பார்க்கவில்லை என மறுமொழி கூறுவார்கள். அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் எவ்வாறு? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் அதைப் பார்த்திருந்தால் இதைவிட மிக அதிகமாக அதனை விட்டு விரண்டோடுவார்கள். கடுமையாக அதனை அஞ்சுவார்கள் எனப் பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் (மலக்குகளே) நான் அவர்களை மன்னித்து விட்டேன். அதற்கு உங்களைச் சாட்சிகளாக ஆக்குகிறேன் என்று கூறுவான். அப்போது மலக்குகளில் ஒருவர் அவர்களில் ஒருவர் திக்ர் செய்தவர்களின் கூட்டத்தில் உள்ளவரல்ல, ஏனெனில் அவர் அவரது ஏதோ ஒரு தேவைக்காக அங்கு வந்தார் எனக் கூறுவார். அதற்கு அல்லாஹ், திக்ரு செய்தவர்களாக அமர்ந்திருந்தவர்களுடன் சேர்ந்து அமர்ந்து இருந்த எந்த மனிதரும் நற்பாக்கியத்தை இழக்க மாட்டார். (அவரும் நற்கூலி பெறுவார்) எனக் கூறுவான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) மற்றொரு ஹதீஸில், அபூ வாகித் அல் ஹாரிஸ் பின் அவ்ப் (ரலி) அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்து இருந்தார்கள். மக்களும் அவர்களுடன் அமர்ந்து இருந்தார்கள்.. அப்போது மூன்று நபர்கள் வந்தார்கள். அவர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களின் சமூகம் முன்னோக்கி வந்தனர். ஒருவர் போய் விட்டார். அவ்விருவரும் நபியவர்களின் அவையில் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அவ்விருவரில் ஒருவர் அவ்வட்டத்தில் ஒரு காலியிடத்தைப் பார்த்தார்... உடனே அவர் அதில் போய் அமர்ந்தார். மற்றொருவர் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து கொண்டார். நபி (ஸல்) அவர்கள் தங்களின் சொற்பொழிவை நிறைவு செய்ததும் கூறினார்கள்: மூன்று நபர்களைப் பற்றி உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ் சேர்த்துக் கொண்டான். மற்றொருவர் வெட்கப்பட்டார். அல்லாஹ்வும் அவரிடமிருந்து வெட்கப்பட்டுக் கொண்டான். இன்னொருவர் புறக்கணித்துச் சென்றுவிட்டார். அல்லாஹ்வும் அவரைப் புறக்கணித்து விட்டான். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) ஒரு நாள் முஆவியா (ரலி) அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்திருந்த ஒரு திக்ரின் ஹல்காவிற்கு (வட்டத்திற்கு) வந்தார்கள். அப்போது அவர்களைப் பார்த்து, நீங்கள் ஏன் இங்கு அமர்ந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், நாங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாக அமர்ந்துள்ளோம் என மறுமொழி கூறினார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதைத்தவிர வேறு எதற்காகவும் நீங்கள் இங்கு உட்காரவில்லையே? என்றார்கள். அதற்கவர்கள், அதைத்தவிர வேறு எதற்காகவும் நாங்கள் இங்கு உட்காரவில்லை எனக் கூறினார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், நான், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக!' என்று உங்களிடம் கேட்டது உங்கள் மீது சந்தேகப்பட்டு அல்ல. (எனினும் உங்கள் நோக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான்.) நான் நபி (ஸல்) அவர்களிடம் சிறப்பான அந்தஸ்தைப் பெற்றிருந்தும் (பேணுதலின் காரணமாக) அவர்களைப் பற்றி மிகக் குறைவாகவே ஹதீஸ்களை அறிவிக்கின்றேன். அவைகளில் ஒன்று. ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களின் ஒரு ஹல்காவிற்கு (வட்டத்திற்கு) வந்தார்கள். ஏன் இங்கு அமர்ந்துள்ளீர்கள்? என்று அவர்களிடம் வினவினார்கள். அதற்கவர்கள், 'நாங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாகவும், எங்களுக்கு இஸ்லாமுக்கு வழிகாட்டி எங்கள் மீது அருள் புரிந்ததற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாகவும் அமர்ந்துள்ளோம் எனக் கூறினார்கள். அப்போது, நபியவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அதற்காகவே அமர்ந்துள்ளீர்களா?' என்றார்கள். அதற்கவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்காகவே நாங்கள் அமர்ந்துள்ளோம்' என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள், நான் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்று உங்களிடம் கேட்டது உங்கள் மீது சந்தேகப்பட்டு அல்ல, எனினும் (இப்பொழுதுதான்) ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்தார்கள். நிச்சயமாக அல்லாஹ் தன் மலக்குகளிடம் உங்களைப் பற்றி பெருமை பாராட்டுகின்றான் என அவர்கள் என்னிடம் கூறினார்கள்' எனப் பகர்ந்தார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீதில் குத்ரீ (ரலி), நூல்: முஸ்லிம்

1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்களை தரப்பட்ட இணைப்பின் மூலம் பெறலாம்

1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்களை தரப்பட்ட இணைப்பின் மூலம் பெறலாம்
இதை Print செய்து தேவையான மாணவர்களுக்கு கொடுத்து உதவலாம்.