துபாய்: அமீரகத்தில் பணிபுரிந்து வரும் இந்தியர்கள் இனி பாஸ்போர்ட் புதுப்பிக்கவோ அல்லது அமீரகத்தில் பிறக்கும் இந்திய குழந்தைகளுக்கோ பாஸ்போர்ட் பெற இனி இந்திய தூதரக அலுவலகத்தையோ அல்லது இந்திய கன்சுலேட்டையோ அணுக வேண்டியதில்லை.
பாஸ்போர்ட் சம்பந்தப்பட்ட சேவைகளை விரைவாகப் பெற அமீரகத்தில் இச்சேவைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இச்சேவை குறித்து இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி செய்தியாளர்களிடம் விளக்கினார்.
இதற்கான முதல் அலுவலகம் துபாயில் புதன்கிழமை துவக்கப்பட்டுள்ளது. இந்த வலுவலகம் துபாய் தேரா அல் ஒவைஸ் பில்டிங், நிஸான் சர்வீஸ் சென்டர் அருகில், அறை எண் 101 ல் அமைந்துள்ளது.
அமீரக போஸ்டல் நிறுவனம் (எம்போஸ்ட்) இந்திய தூதரக அலுவலகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தந்தின் அடிப்படையில் இச்சேவை துவங்கப்பட்டுள்ளது. இவ்வலுவலகம் காலை ஏழு மணி முதல் இரவு பத்து மணி வரை இயங்கும்.
மேலும் விபரமறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 600 522229 அல்லது http://www.ipavsc. com/ இணையத் தளத்தை நாடலாம்.
அமீரகத்தில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க வேண்டிய எம்போஸ்ட் சேவை மையங்கள்:
101,Al Owais building, Behind Arabian Automobiles.Deira, Dubai
3, Karama Star Building,Karama, Dubai
Central Post OfficeKarama, Dubai
2nd Floor, EMPOST Building, Madina Zayed,Abu Dhabi
EMPOST Al Wahda StreetSharjah
EMPOSTUmm Al Quwain
EMPOSTRas Al Khaimah
4th Floor, Opp Sabka Bus StationNaif Dubai
Indian Association Ajman, Opp LuluHypermarket, Al Ittihad Street,Al Sawan, Ajman
Indian Association RAK Al Mamoyra,Muntazar Road, Near Old Mamoura Police StationRas Al Khaimah
Indian Social Club Fujairah (ISCF)Al Fazil Road, Opp Hilton HotelFazeel, Fujairah
Indian Social Club Khorfakan (ISCK)Behind Indian School KabbaKhorfakan
Indian Social & Cultural Club, Kalba (KISCC)Opposit Kalba Police Station,Near Bin Moosa PharmacyKalba
Indian Social Center, Al Saroj DistrictAl-Ain
Indian AssociationSharjah, United Arab Emirates
Thanks by Mr. Habeeb
No comments:
Post a Comment