(போலியான ஈமெயிலின் விபரத்தை தரப்பட்ட படத்தில் பார்க்கவும்)
Gmail Account verification எனது மெயிலில் கேட்கும்போது தான் இந்த விபரம் எனக்கு தெரியவந்தது. அல்லாஹ் மிகப்பெரியவன். கயவர்களின் சூழ்ச்சியில் அவர்களின் மதியை ஒருநிமிடம் தவறவிட்டு எனக்கு அதை சாதகமாக்கி கொடுத்தான் (அதாவது துணை மெயிலாக என் உண்மையான மெயிலை அவர்களை தரவைத்து) இல்லையேல், நான் தெரிய வாய்ப்பில்லாமல் போயிருக்கும். பின் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அந்த போலியான Account Block செய்யப்பட்டது. இதற்கு முன்பும், ஊரில் பல பிரச்சனைகளுக்கு காரணமான முகவரி (உரிமையாளர்) தெரியாத பல மெயில்களை அனுப்பியவர்களின் முயற்சிகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்பது நன்றாக தெளிவாகிறது.
இன்றைய காலகட்டத்தில் எந்த எதிர்பார்பும் இல்லாமல் அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டும் அடைந்தால் போதும் என்ற உயரிய நோக்கில் சமுதாய சேவைகளில் ஈடுபட கூடியவர்கள் சொற்பமாகவே உள்ளார்கள். அப்படி இருக்கையில், சமுதாய சேவைகளில் உள்ளவர்களை ஊக்கபடுத்தாவிட்டாலும் அவர்கள் துன்புறும் நிலைக்கு ஆளாக்காதிர்கள். நீங்கள் துன்புறுத்துவது உங்கள் சகோதரர்களை...! உங்களுக்காக உங்கள் குடுபதிற்காக சேவை செய்ய வந்தவர்களை...!
அவர்கள் என்றுமே உங்களில் ஒருவர் தான், நல்லதைத்தான் செய்வார்கள், நல்லவைகளைதான் நினைப்பார்கள். பயனாளிகளில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் கூட இருக்கலாம். அவர்களை நீங்கள் எந்த வகைகளில் கேவலப்படுதினாலும், இழிவுபடுத்தினாலும் கூட உங்களுக்கு, உங்கள் குடும்பத்தாருக்கு ஒன்று என்றால் முதலில் ஓடிவரக்கூடியவர்கள் அவர்கள் தான். எதையும் நினைத்து உங்களை ஒதுக்க கூடியவர்கள் அல்ல சமுதாய சேவையாளர்கள். என்றாலும், அவர்கள் மனதால் வருந்தினார்கள் என்றால் அல்லாஹ் போதுமானவன் ஒரு நிமிடம் அவனுக்கு போதும் உங்களை அடையாளப்படுத்தவும், வேதனைபடுத்தவும். அல்லாஹ் அத்தகைய நிலையைவிட்டும் நம் அனைவரையும் காப்பானாக ஆமீன்...!!! நான்
பயன்படுத்தும் சரியான மெயில் (thahirali@gmail.com / thahiralinme@yahoo.com ) அட்ரசை தவிர வேறு எந்த அட்ரசின் மூலம் வரும் மெயில்களுக்கு நான் பொருப்பாகமாட்டேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். இனியும் என் பெயரை பயன்படுத்தி ஈமெயிலோ அல்லது அவதூறோ வந்தால் அல்லாஹ்வை முன்னிறுத்தி அத்தகையவர்களை ஒருபொழுதும் (கியாமநாள் வரை) நான் மன்னிக்கமாட்டேன். தவிர, அவர்கள் பகிரங்கமாக தவறை ஒத்துக்கொள்ளாதவரையில்.
இந்த பிரச்சனைகளை ஒரு முடிவுக்கு கொண்டு வரவும், மேலும் இதுபோன்ற காரியங்கள் தொடராமல் இருக்கவும் நம் சமுதாய இளைஞர்கள் இந்த இழிச்செயல்களை செய்பவர்களை கண்டுபிடிக்க முன் வரவேண்டும். இவர்களை பிடித்து அனைவருக்கும் முன் நிருத்துவதற்கான முயற்ச்சிகளை மேற்கொள்ளவேண்டும். அல்லாஹ் நல்லவர்களின் பக்கம் இருக்கின்றான், நாம் எதற்கும் அஞ்சவேண்டாம்.
நம் சகோதரர்களும் இதைப்போன்ற விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். மற்றவர்களை வருந்தவைக்கும் எந்த மெயில்களையும், யாருக்கும் நாம் forward செய்யக்கூடாது. இதுவே நம் நல் உணர்வுக்கு எடுத்துக்காட்டாகும், வல்ல ரஹ்மான் இவர்களை விரைவில் அடையாளம் காட்டிதருவதோடு, நமதூர் பெயரையும் காப்பாற்றுவானாக ஆமீன்!!!
Thahir Ali - (Admin.)








No comments:
Post a Comment