அன்புடையீர்
அஸ்ஸலாமு அழைக்கும்
பேராசிரியர் சுப்பிரமணியம் ராஜன் M .sc Ph .D ,M A அவர்கள்
எப்படி உமர் முக்தார் என கலிமா சொல்லி தூய இஸ்லாத்தை
ஏற்று கொண்டார்கள்
அவருடைய சொல்லை கேளுங்கள்....
பேராசிரியர் பேச்சிலே என்னை மிகவும் கவர்ந்த வாசகம் ...
MUSLIMS ARE BORN WITH SILVER SPOON IN THEIR MOUTH
முஸ்லிம்கள் பிறக்கும்போதே வாயில் வெள்ளி கரண்டியோடு பிறந்தவர்கள்
அதாவது அதிர்ஷ்டகாரர்கள் என்று பொருள்.
அதிகாலை இறைவணக்கத்தை கடமையாக கொண்டுள்ள வாழ்வியல் பாதை-
மார்க்கம் இஸ்லாம் ஆகும்.
அதிகாலை நேரம் வாழ்க்கையின் அலாரம் ...
கதிரவன் வரவிற்கு காத்திருக்கும் நேரம்..செஞ்சூரியன் வரவிற்கு முன்பாக சுமார்
100 நிமிடங்கள்...!கதிரவன் வரும் முன்பாக அதிகாலை பொழுது அரபியில் பஜர்
அல்லது ஸுபுஹ் தொழுகும் நேரம் ஆங்கிலத்தில் Predawn என்று கூறுவார்கள்.
ஆன்மாவின் உந்துதல் உடையவர்களும்,அறிவு ஜீவிகளும் நேர்மையனவர்களும்
வாழ்கையில் வெற்றியாளர்களும் அதிகாலை நேரத்தில் விழித்து இயங்குகிறார்கள்.
சூரிய உதயத்திற்கு முன்பு அல்லாஹ்வை துதித்தும்,தியானித்தும்,தொழுகையை
மேற்கொண்டும் இறைநெருக்கத்தை பெறுமாறும் அந்த நேரத்தில் தன் அருட்கொடையை
அல்லாஹ் இரட்டிப்பாக வழங்குவதாக இறைமறையில் அல்லாஹ் வாக்களித்து உள்ளான்
உடலும் உள்ளமும் தூய்மையோடு ஒவ்வரு நாளும் வாழ்கையை அந்த அதிகாலை நேரத்தில்
துவங்கிடுமாறு இறைவன் நமக்கு வழிகாட்டுகிறான்.
நவீன நரம்பியல் முறை ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையின் ஆற்றல் மட்டங்களை
அளப்பதற்கு
மின் அதிர்வு கருவி(Electro Encephalo Graph )உள்ளத்தின் துடிப்பு அல்லது மன அழுத்தத்தை படமாக
காட்டும் கருவி,(Functional Resonance Imaging )ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள்.
மூளையின் ஆற்றல் இன்னும் முழுமையாக அளவிடப்பட்டு அறியவில்லை.
தனது ஆற்றலில்
30 லிருந்து 40 சதவிதம் வரையிலேயே மூளை தனது செயல் திறனாக வெளிபடுத்துகிறது .
அதாவது சராசரி 35 சதவிதம்.
ஒரு நாளில் 24 மணிநேரத்தில்(Geo Physical Day )சூரிய உதயத்திற்கு முன்பாக,செயல்திறனில்
உச்சகட்டமாக,70 சதவிதம் வரை ஆற்றல் வெளிபடுகிறது.
பூமியின் காற்று வெளிமண்டலத்தின்
பிராணவாயு எனும் ஆக்ஸிஜன்(Oxygen )O2 நிறைந்து காணப்படும் நேரம்.
பூமியை சுற்றி கண்ணனுக்கு புலனாகதபடி அமைக்கபட்டுள்ள ஒசோன்(Ozone )O3 பாதுகாப்பு
வளையிலிருந்து
பிராணவாயு கசிந்து பூமியின் பரப்பு முழுவதும் அமிழ்ந்து கிடக்கிற நேரம்
அது அதிகாலை நேரமே!
பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த அதிகாலை வானம் அல்லாஹ்வின்
அடையாளங்களையுடையது.பாதுகாக்கபட்டது.
அதிகாலையின் அமைதிக்கு பாதுகாக்கபட்ட வானம் காரணமாகிறது.
மனித உடல் உறுப்புக்கள்,திசுக்கள்,செல்கள் அனைத்திலும் நாள் முழுக்க
(Geo Physical Day ) சேமிக்கப்பட்ட கழிவு பொருட்களெல்லாம் அகற்றப்பட்டு,
தேவையான சக்தியை செரிக்கப்பட்ட உணவின் துணுக்குகளிலிருந்து பெற்று
கொள்கிற,உடலின் உள் உறுப்புகள் சக்தியும்,ஆற்றலும் மிக்கவையாய்,கணிசமான
ஓய்வுக்கு பிறகு சேகரிக்கப்பட்ட கழிவுகள் அகற்றப்பட்டவையாய் அடுத்தகட்ட வேலைகளுக்கு
தயார் என்று தயார் நிலையில் உடல் இருக்கின்ற நேரம்-அந்த அதிகாலை ஆகும்.அதாவது
சூரிய உதயத்திற்கு முன்பு சுமார் 100 நிமிட நேரமாகும்.
புற உலகு பிராணவாயு நிறைந்தது.
வெப்பம் தணிந்து தூய்மையாகவும்,(புறத்தூய்மை) உடலின் உறுப்புகள் எல்லாம் தூய்மையுடம்
(அகத்தூய்மை)துடிப்புடனும்,அடுத்த கட்ட செயல்களுக்கு தயார் நிலையில் இருக்கும் நேரம்.
இவ்வாறு மனித உடலின் உள்ளும்,புறமும் தூய்மையாக விளங்குகிற அதிகாலை நேரத்தில்
மனதை தூய்மையாக வைத்துகொண்டு இறைவனை சிந்தித்து உணரும்படியும்,சிந்தித்து
விளங்கும்படியும்(தியானம்-Meditation )தொழுகையை மேற்கொள்ளும்படியும் இறைவன் நம்மை
கட்டாய கடமையாக செய்யும்படி வலியுறுத்துகிற நேரம்-அந்த அதிகாலை பொழுது ஆகும்.
அதிகாலை!அற்புதமான நேரம்!உடலின் உட்புறமும்,வெளிபுறமும் மனம் அல்லது உள்ளம்
ஆகிய மூன்று பரிணாமங்களிலும் தூய்மையுடன் விளங்குகிற நேரம்!
மூளையின் ஆற்றல் வழக்கமாக 30 -40 சதவித அளவிலிருந்து 60 -70 சதவித அளவை எட்டுகிற
நேரம்!
அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்குபவன் பிறக்கும் போதே சில்வர் ஸ்பூனுடன்
பிறந்தவன் தானே.
அதிகாலையின் அமைதியின் முப்பரிமான தூய்மையை தங்கள் வாழ்கையில்
அனுபவிக்கிறவர்களாகவும்
மூளையின் ஆற்றல் மட்டம் உச்சத்தில் இருக்கிறபோது,தங்கள் வாழ்கையை
துவங்குபவர்களாகவும்
இருக்கிறார்கள்.எனவேதான் முஸ்லிம்களை பார்த்து- அவர்கள் எல்லோரும் அதிகாலை
இறைவணக்கத்தை
பஜூர் தொழுகையை கடைபிடிக்கிறவர்கள் என்று கருதி விஞானி ஒருவர் பொறாமையுடன்
கூறியது தான்
முஸ்லிம்கள் வாயில் வெள்ளிகரண்டியோடு பிறக்கிறார்கள் என்பது.என்று பேராசிரியர் பேசினார்.
மிகவும் அழகிய பெண்(Gorgeous Woman ) பற்றி பேராசிரியர் முத்தாய்பாய் பேசி நிறைவு செய்ததை
நான் இன்ஷா அல்லாஹ் நாளை குருபிட்டே ஆகவேண்டும்.நாளை பார்ப்போமே...
அன்புடன்
அப்துல் அலீம்
No comments:
Post a Comment