அன்புடையீர்
அஸ்ஸலாமு அழைக்கும்
நேற்று நமதூரில் கூத்தாநல்லூர் ஜமாஅத் பொது குழு கூட்டம்
சிறப்பான முறையில் மிக கண்ணியமாக நடைபெற்றது.ஊர் உறவின்
முறை ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தலைவர் ஜனாப் NMA .சிஹாபுதீன் அவர்கள் தனது தலைமையுரையில்
ஜமாத்தார்களுக்கு முதலில் இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து
கொண்டார்கள்.
அதனை தொடர்ந்து பேசிய தலைவர் அவர்கள் பல்வேறு விசயங்களை
மக்களோடு பகிர்ந்து கொண்டார்கள்.2009 ஆம் ஆண்டு ஜூலையில் இந்த பொறுப்பிற்கு
வந்த பொது பெரிய பள்ளி நிதி இருப்பு
வக்பு வாரியத்தில் இருந்து வாங்கியபோது
பெரியபள்ளி நிதி ; 13 ,37 993 என்றும்
மதரசா பைஜுல் பாகியாத் நிதி; 3 ,14 314 என்றும்
காதிமுல் இஸ்லாம் தர்மசபை நிதி ; 1 ,17 917 என்றும்
ஆக மொத்தம் 17 ,30 224 என்றும்
இன்று .....
பெரியபள்ளி நிதி ; 28 ,94 255 என்றும்
மதரசா பைஜுல் பாகியாத் நிதி; 5 ,15 266 என்றும்
காதிமுல் இஸ்லாம் தர்மசபை நிதி ; 1 ,37 640 என்றும்
ஆக மொத்தம் 26 /11 /11 இல் 35 ,47 640 குருபிட்டர்கள்.
நமதூரில் நடைபெறும் திருமணங்களில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவருவதின்
அவசியத்தை எடுத்துரைத்தார்கள்.எனினும் திருமண சீர்திருதங்களுகாக தனியாக ஒரு கூட்டத்தையே
நடத்தவேண்டுமென கேட்டு கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து செயலாளர் ஜமால் ஷேக் அப்துல் காதர் அவர்கள்
தனது உரையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் செய்த செயல் திட்டங்களை அறிக்கையாக வாசித்தார்கள்
இந்த அறிக்கை முழுவதையும் தனி
பகுதியாக அடுத்து அனுப்படும்...
எனினும் மிக முக்கிய விசயமாக இது வரை ஜமாஅத் எத்தனை பஞ்சாயத் வழக்குகளை என்பதை விவரிக்கும் போது....
2009 இல் பஞ்சாயத் வழக்கு வந்தது 55 என்றும்
தீர்வு கண்டது 43 என்றும் நிலுவையில் உள்ளது 12 என்றும்
2010 இல் பஞ்சாயத் வழக்கு வந்தது 84 என்றும்
தீர்வு கண்டது 50 என்றும் நிலுவையில் உள்ளது 34 என்றும்
2011 இல் பஞ்சாயத் வழக்கு வந்தது 75 என்றும்
தீர்வு கண்டது 26 என்றும் நிலுவையில் உள்ளது 49 என்றும் குருபிட்டர்கள்.
இதனை தொடர்ந்து துணை செயலாளர் TM தமிஜூதீன் அவர்கள் இன்றைய
முக்கிய விசயங்களை அறிவிப்பில்
கண்டுள்ளபடி ஒவ்வன்றாக வாசித்தார்கள்.அதில் முதல் விஷயம்
நமது பெரியபள்ளி வாயில் நிர்வாக விதிமுறைகளில் (BYE LAW )
ஊர் உறவின் முறை என்பதின் உரிய விளக்கத்தினை அங்கீகரித்தல்.
இதன் விளக்கத்தை எடுத்துசொல்லி மக்களின் ஒப்புதலை கேட்டார்கள்.
கடந்த முறை ஜமாஅத் தேர்தலின் போது ஊர் உறவின் முறை என்ற வரையறையில்
தங்களை இணைக்க வேண்டும் அது வரை இந்த தேர்தலை நடத்த கூடாது என சிலர் நாகை
நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததையும் ஜமாஅத் அதை எதிர்கொண்டு வெற்றி பெற்றதையும்
குறுபிட்டர்கள்.ஊர் உறவின் முறை என்பது ஆண்டாண்டு காலமாய் எல்லா இடங்களிலும் இருகிறது.
அதனால் இதில் யாருக்கும் எந்தவித பாதிப்புமில்லை.நமதூர் முன்னோர்களின் வழிகாட்டுதல் இது என்றார்கள்.
சில கருத்துகளை சகோதரர் தினா.மூனா. சகாபுதீன் அவர்கள் எடுத்து சொன்னார்கள்.அதன் பின்பு ஏக மனதாய்
இது அங்கீகரிக்க பட்டது.
அடுத்து....
வெளிநாட்டிலிருந்து தலாக் சொல்லும் முறை குறித்து ஆலோசித்தல்
இதில் பெரும்பாலும் அனைவரும் வெளிநாட்டு தலாக்கை ஏற்க வில்லை
சகோதரர் HR .ஆரிப் முஹமது அவர்கள் வெளிநாட்டு தலாக்கை ஏற்க கூடாது என வாதிட்டார்கள் .
இந்த தீர்மானமும் அங்கீகரிக்க பட்டது.மூன்றாவது .....
ஊர் உத்தரவு பெறாமலேயே திருமணங்கள் நடைபெறும் சமயம் மேற்கொள்ளப்பட
பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!
வேண்டிய நடவடிக்கை சம்பந்தமாக ஆலோசித்தல்
இந்த தலைப்பில் உரையாற்றிய நான் திருமணத்தில் இடம் பெரும் அனாச்சாரங்கள் தடுக்க பட வேண்டும்
தலைவர் அவர்கள் தனது தலைமையுரையில் குறிபிட்டது போல் மணமகனுக்கு பெண்வீட்டில் தங்க நகை
அணிவிப்பது தடுக்க பட வேண்டும் குறிப்பாக பெண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாய்
திருமணக் கொடை (மஹர்)
பெண்களுக்கு ஆண்கள் மஹர் வழங்குதல் கட்டாயம் -
அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (திருக்குர்ஆன் 4:4)
என்கிற வசனத்தின் அடிப்படையில் இந்த இனிய இஸ்லாமிய புத்தாண்டில் முதல் நாளில் இல்லங்களில் இருக்கும் நமது சகோதரிகளுக்கு
இனிப்பான செய்தியாக மஹர் தொகையை மகிழ்ச்சியுடன் வழங்க இந்த ஜமாஅத் தீர்மானிக்க வேண்டும்.இவைகள் நடைபெறும் போது
ஊர் உத்தரவு இல்லாத திருமணங்கள் இல்லாமல் போய்விடும் என்றேன்.
ஆனால் தலைவர் அவர்கள் அஜெண்டாவில் இல்லாத விஷத்தை பேச வேண்டாம்.மஹர் குறித்து இப்போது விவாதிக்க வில்லை அடுத்த
கூட்டத்தில் அது பற்றி பேச படும்.இந்த தலைப்பில் மட்டும் பேசுங்கள் என கேட்டு கொண்டார்கள்.
தொடர்ந்து பல்வேறு சகோதரர்கள் கருத்துகளை சொன்னார்கள்.
எனினும் இன்னும் விரிவாக பேசப்பட வேண்டி இருபதால் 11 /12 /11 அன்று
மீண்டும் ஜமாஅத் கூட்டம் நடத்துவது என தீர்மானிக்க பட்டது
ஜஸ்ன மீலாத் சொசைட்டி குறித்து மனு கொடுத்தேன் நிர்வாகத்திற்கு
கடிதம் அனுப்பி பிறகு பதில் அளிபதாக சொல்லியுள்ளார்கள்
இன்னும் முக்கிய செய்திகள் மிக உணர்சிகரமாக அலசப்பட்டது...
அது குறித்து நாளை விவரிப்போம்
Info..Bro. ABDUL ALEEM








No comments:
Post a Comment