அன்புடையீர்
அஸ்ஸலாமு அழைக்கும்
கூத்தநல்லூர் ஜமாஅத் பொதுகுழு கூட்டத்தில் நேற்று சில செய்திகளை
பகிர்ந்து கொண்டோம் ..இதில் ஊர் உத்தரவு விசயமாக விவாதம் துவங்கிய போது
செயலாளர் ஜமால் ஷேக் அப்துல் காதர் அவர்கள் நமிடையே இரு வழக்குகள்
வினோதமான நிலையில் வந்துள்ளது. சமுகத்தின் கட்டமைப்பை சீர்குலைக்கும்
விதமாக மார்க்கத்தின் நெறிமுறைகளை சற்றும் மதிக்காமல் பெண்களின் ஒழுக்கம்
சார்ந்த நிலையை கேள்வி குறியாக்கும் இந்த வழக்குகளை உங்களோடு பகிர்ந்து
கொள்கிறேன்.. இந்த விசயத்தில் ஊர் உத்தரவு கொடுக்கலாமா?இவர்களை நாம்
எப்படி எதிர் கொள்வது?இவர்களுக்கு என்ன தீர்வு காண்பது என்று அந்த செய்தியை
சொல்ல ஆரம்பித்தார்கள்....
இதனிடையே செயலாளரின் ஆண்டு அறிக்கையை நாம் முழுவதும் படிக்க வேண்டுமே
முதலில் அதை சற்று கவனிப்போம்...அதன் பின்பு அந்த வழக்குகளை விவரிக்கிறேன்...
செயலாளரின் அறிக்கை ....
சென்ற 8 /8 /2010 அன்று நிர்வாகத்தின் முதலாம் ஆண்டு ஜமாஅத் கூட்டம் கூட்டப்பட்டது. தாங்கள் அறிவிர்கள்.
இன்று இரண்டாம் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.அடுத்து வர இருக்கும் 24 ஜூலை 2012 பகுதி காலம் முடிவடைவதால்
மூன்றாண்டுகளுக்கும் சேர்த்தார் போல் வரவு செலவு கணக்கு அறிக்கையாக தாக்கல் செய்யப்படும்.
முதலாமாண்டு செயல் திட்டங்கள்...
1 .பெரிய பள்ளி வாயிலுக்கும் பைஜுல் பாகியாத் மதர்சாவிற்கும் மராமத் பணிகள் செய்து
வர்ணம் பூசப்பட்டது.
2 .நிர்வாக அலுவலகத்தில் கணினி வசதி செய்ய பட்டது.
3 .நிர்வாக வசதி கேற்ப நிர்வாக அலுவலகம் நவீனபடுத்த பட்டது.
4 .பள்ளியின் ஒலிபெருக்கி (SOUND SYSTEM ) அதிநவீன படுத்தப்பட்டது.
5 .மூமின்களின் பூங்காவிற்கு மின்விளக்கு அமைத்து கொடுக்க பட்டது .
6 .ஜாமியா பெண்கள் பள்ளி பிள்ளைகள் அமர்ந்து படிக்க ஏதுவாக ஜமுக்கால விரிப்பு வசதி செய்யப்பட்டது.
7 .பள்ளிவாசல் உள்ளே வால் பேன் ,ஸ்பீட் பேன் வசதி செய்யப்பட்டது.
8 .மதரசாவிற்கு FRIDGE வசதி செய்யப்பட்டது.
9 .தற்கால தேவைக்கு ஏற்ப ரமளானில் கஞ்சி காய்ச்ச அலுமினிய சட்டி வாலி சாமான்கள் வாங்கப்பட்டது.
10 .தொழுகையாளிகளின் வசதி கேற்ப ஒழு செய்யும் இடத்தை மறு சீரமைப்புடன் நவினபடுத்தி உயர்த்தி கட்டப்பட்டது .
11 .நமதூர் மின்சார பகிர்மானம் கிராமிய நிலையில் இருந்ததை நகர நிலைக்கு(URBAN )உயர்த்திட முயற்சி
செய்து அதில் வெற்றி கண்டது .
12 .வாசன் ஐ. கேர் மூலம் கண் சிகிச்சை முகாம் நடத்தி 400 கும் அதிகமான மக்களுக்கு இலவச சேவை செய்தது .
13 .சென்னை பில்ரோத் மருத்துவ மனை உதவியுடன் இதய நோய் மருத்தவ முகாம் நடத்தி 560 நபர்களுக்கு
இலவச ஆலோசனை வழங்க பட்டது .
இது முதல் ஆண்டு செயல் திட்டங்கள்(2009 TO 2010 ) ஆகும்.நாளைகடந்த ஆண்டு
2010 முதல் 2011 நவம்பர் வரை நாளை பார்ப்போமே...
அன்புடன்
அப்துல் அலீம்
No comments:
Post a Comment