தற்போதைய செய்திகள்:

♣ என் இனிய வலைப்பூ விருந்தினரே வருக.! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக.! ரமலான் நல் வாழ்த்துக்கள் ♣ .

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், இப்புதிய ஆண்டில் எமது தளத்தை எளிதில் பார்வையிட புதியதாக http://www.thahirknr.co.cc/ என்ற தளத்தின் மூலமாகவும் காணலாம், தங்களின் ஆதரவே எனது தூண்டுகோள்.

Oneindia.in - thatsTamil

SunPower

Tuesday, January 1, 2013

Fwd: இதயம் காப்போம்



இதயம் காப்போம்

     "தமிழ்மாமணி" அல்ஹாஜ் டாக்டர். பீ. ஹாமீது அப்துல்ஹை
                  எம்.பி.பி.எஸ்., டி.ஸி.ஹெச்., - மதுரை.
  "நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான வடிவில் படைத்திருக் கின்றோம்."    (அல்குர்ஆன் 95:4)
  படைப்புகளனைத்திலும் சிறந்த படைப்பாக அல்லாஹ்வால் படைக்கப்பட்டுள்ள மனிதன் சிந்திக்கும் ஆற்றல் வழங்கப்பட்டுள்ளான். இதுவே அவனின் சிறப்பாகும். ஏனெனில் தமது சிந்தனா சக்தி மூலம் படைத்தவனின் வல்லமையுணர்ந்து அவனுக்கு முற்றிலும் வழிபடுதலே அதனின் நோக்கமாகும்.
  மனித உடலே ஒரு மாபெரும் விந்தையாகும். ஆகவே அதனை "மாபெரும் உலகம்" (ஆலமும் அக்பர்) என வர்ணிக்கப்படுகிறது. உலகில் நாம் காணும் அனைத்துப் படைப்புகளின் பிரநிதித்துவமும், மனித உடலில் காணப்படுவதே அதற்குக் காரணமாகும்.
  மனித உடலினமைப்பும், அதன் உறுப்புகளின் இயக்கமும் பேரற்புத மாகும். களிமண்ணில் உருவாக்கப்பட்டுள்ள நமது உடலின் ஆராய்ச்சி, விந்தையின் சிகரத்திற்கே நம்மை இட்டுச் செல்லும்.
  மனித உடலின் இயக்கத்தில் மிக முக்கியப்பங்கு பெறும் உறுப்பு இதயமாகும்.
  வலிமை மிக்கத் தசைகளாலான இவ்வுறுப்பு சுருங்கி விரியும் தன்மை கொண்டது. மார்பின் இடதுபுறத்தில், நெஞ்செலும்புகளுக்கும், முதுகெலும்புகளுக்குமிடையில் அமைந்துள்ளது. இதன் எடை 200 கிராம் முதல் 350 கிராம் வரையிலாகும். (ஆண் 250 – 350 கிராம், பெண் 200 – 300 கிராம்).
   முட்டை வடிவம் கொண்ட இதயம், அதன் அடிபாகத்தில் குறுகிய தாகக் காணப்படும். இதன் இயக்கத்தை இடது மார்பின் கீழ்ப்பகுதியில் தொட்டு உணர்ந்து கொள்ள முடியும்.
  இதயத்தசை "மயோ கார்டியம்" என்ற கடினத்தசையாலானது. அதன் வெளிப்புறம் "பெரி கார்டியம்" என்ற மெல்லிய இரட்டைச் சவ்வுடைய திரவப் பையினால் போர்த்தப்பட்டு அருகிலுள்ள நுரையீரல்,மார்புச்சுவர் ஆகியவற்றில் உராயாமல் பாதுகாக்கப்படுகிறது. உட்புறம் "எண்டோ தீலியம்" என்ற மெல்லிய தசையால் போர்த்தப்பட்டு இரத்தத்துடன் தொடர்பு கொள்ளும் தன்மையுடையதாகும்.
  இதயம், இரு மேல் அறைகளும், இரு கீழ் அறைகளும் கொண்ட தாகும். மேல், கீழ் அறைகளுக்கிடையே "வால்வு" எனப்படும் தடுக் கிதழ்கள் அமைந்துள்ளன. இவைகள் இரத்தம் கீழறையிலிருந்து  பின்னோக்கி மேலறைக்குப் பாய்ந்து விடாமல் தடுக்கின்றன. உடலின் அசுத்த இரத்தம் வலது மேலறைக்கு குழாய்கள் மூலம் கொண்டு வரப் பட்டு, அங்கிருந்து வலது கீழறைக்குள் பாய்ந்து, அங்கிருந்து, நுரையீரலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, கரியமில வாயு நீக்கப்பட்டு, பிராணவாயு நிரப்பப்பட்டு, அங்கிருந்து இதயத்தின் இடது மேலறைக்கு வந்தடைகிறது. பிறகு, இடது கீழறைக்குள் செலுத்தப்பட்டு, அங்கிருந்து இந்த சுத்த இரத்தம் உடல் முழுவதும் பாய்ச்சப்படுகிறது. இதுவே இதய இயக்கம். கருப்பையில் தொடங்கி, இறக்கும் வரை நீடிக்கிறது. தினமும் ஓர் இலட்சம் தடவைகள் சுருங்கி விரிகின்றன. 70 வருடம் உயிர் வாழும் மனிதனின் இதயம் 250 கோடி முறை சுருங்கி விரிந்திருக்கும். இதனால் உற்பத்தியாகும் சக்தி, ஒரு போர்க்கப்பலை 14 அடி உயரம் மேலே உயர்த்த முடியும். இடது கீழறை சுருங்கும் நேரம் 3/10 நொடி, விரியும் நேரம் ½ நொடி.
  இரத்த ஓட்டம் உடலில் பாய்ந்து செல்லும் தூரம் 1,12000 கி.மீ. இரத்த சிவப்பணு ஒரு சதுர மில்லி மீட்டர் அளவில் 50 லட்சம் வெண்ணிற அணு 6000 முதல் 11,000 வரையிலாகும். சிவப்பணுவின் நடுவில் ஹீமோகுளோபின் என்ற இரும்புச் பொருள் பொதிந்திருக்கும். இதுவே பிராணவாயுவை ஏந்திச் சென்று உடல் திசுக்களுக்கு வழங்குகின்றது. சிவப்பணு 120 நாட்கள் இயங்கும். ஒரு நொடி நேரத்தில் 12 லட்சம் சிவப்பணுக்கள் மடிந்து அதே எண்ணிக்கையில் புதிய அணுக்கள் தோன்றும். ஒவ்வொரு சிவப்பணுவும் 75,000 தடவைகள் உடலைச் சுற்றிப் பயணம் செய்திருக்கும்.
  வெள்ளையணுக்கள், நோய் கிருமிகளிலிருந்து உடலைப் பாதுகாக் கின்றன. மனித உடலில் 60 முதல் 90 வினாடி கால அளவில் இதயத் திலிருந்து இரத்தம் வெளியேறி, மீண்டும் வந்தடைகிறது.
  உடல முழுவதும் இரத்தம் பாய்ந்து செல்ல தேவையான அளவு இரத்த அழுத்தம் நிலை பெற்றிருக்க வேண்டும். சரியான அளவு 120/80 மில்லி மீட்டர் பாதரசம் ஆகும். 140/90 க்கு மேல் அழுத்தம் அதிகரித்தால், உயர் இரத்த அழுத்தம் எனக் குறிப்பிடப்படுகிறது. இது கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் பல நோய்கள் தோன்ற ஏதுவாகும். இதயம் சுருங்கி விரிவதே, நாடித்துடிப்பாக மணிக்கட்டில் உணரப் படுகிறது. இது நிமிடத்திற்கு 60 முதல் 90 வரையிலாகும்.
இதய நோய்கள் :
1.   பிறவிலேயே காணப்படும் இதயக் கோளாறுகள்.
2.   உயர் இரத்த அழுத்தம்.
3.   மாரடைப்பு
உயிருடன் பிறக்கும் 1000 குழந்தைகளில் 9 குழந்தைகளிடம் இதயக்கோளாறுகள் காணப்படுகின்றன. இக்குழந்தைகள் வளர்ந்து இயல்பான வாழ்க்கை வாழ முடியும். உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.
உயர் இரத்த அழுத்தம் :
  சுத்த இரத்த நாளங்களின் மீது இதய இயக்கத்தின் வேகம் பதிக்கும் அழுத்தமே இரத்த அழுத்தம் என்பதாகும். இதனை நிர்வகிப்பதில் சிறுநீரகங்கள், சுப்ராரீனல் சுரப்பிகள், மூளை, நரம்பு மண்டலம் ஆகியன முக்கியப் பங்காற்றுகின்றன. சரியான அளவு 100/70 முதல் 140/90 மி.மீ. பாதரஸம் வரையிலாகும். 95 சதவிகித நோயாளிகளிடம் உயர் இரத்த அழுத்தத்திற்குரிய காரணங்கள் தெரிவதில்லை. பிற காரணங்கள், மரபுவழி, அதிக உடற்பருமன், புகைப் பிடித்தல், மது அருந்துதல், மன உளைச்சல், சர்க்கரை நோய், சிறுநீரக நோய்கள், நாளமில்லாச் சுரபி நோய்கள் முதலியன.
  முதுமையில் இரத்த நாளங்கள் விறைத்து, விரியும் தன்மை குறைந்து விடுவதும், உயர் இரத்தம் தோன்றக் காரணமாகும். கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு அளவு அதிகரித்து, இரத்த நாளங் களில் படிந்து விடுவதும் மற்றொரு காரணமாகும்.
விளைவுகள் :      
  இதயம் விரிந்து நலிவடைகிறது. சுவாசக் கோளாறு, மாரடைப்பு, மூளை இரத்த நாளம் வெடித்து, இரத்தம் சிதறி பக்கவாத நோய் தோன்றுதல் முக்கிய, உயிரைப் போக்கும் விளைவுகள். எனவே உணவுக் கட்டுப்பாடு, புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியன தவிர்த்தல், உடற்பயிற்சி ஆகியனவும், உரிய மருந்துகளும், இரத்த அழுத்தம் சீராக அமைய உதவக் கூடியனவாகும்.
மாரடைப்பு :
  இதயத் தசைக்கு இரத்தம் கொண்டு செல்லும் கொரனரி நாளங் களில் இரத்தம் ஓட்டம் தடைபடுவதால், இதய இயக்கம் பாதிக்கப் பட்டு மரணம் ஏற்படுகிறது. அதிகக் கொழுப்பு, இரத்த நாளத்தில் படிந்து நாளத்தை அடைத்துக் கொள்கிறது. புகைப்பிடித்தல் மற்றொரு முக்கியக் காரணமாகும். புகையிலையிலுள்ள நச்சுப் பொருட்கள் நாளத்தை தடிக்கச் செய்து விரியும் தன்மையை இழக்கச் செய்கின்றன. உயர் இரத்த அழுத்தம் சர்க்கரை நோய், உடல் பருமன், உடல் உழைப்பின்றி உட்கார்ந்து கழிக்கும் வாழ்க்கை முறை, மன உளைச்சல், எளிதில் உணர்ச்சி வசப்படுதல், அதிக கோபம் முதலியன மற்ற பிற மாரடைப்புக் காரணங்களாகும்.
  நெஞ்சு வலி ஏற்படுதல், இது மார்பின் நடுவில் தோன்றி அங்கிருந்து பரவி, கழுத்து, தாடை, இரு கைகள் முழங்கை அல்லது மணிக்கட்டு வரை செல்லக்கூடும். இது முன்னெச்சரிக்கையின்றி தாக்கக்கூடும்.
  மாரடைப்பு ஏற்பட்டால், உரிய மருந்துகள் மூலமும், நவீன அறுவை சிகிச்சை மூலமும் சிகிச்சை மேற்கொண்டு நலம் பெறலாம். எனினும் நோய்த் தடுப்பே சிறந்த வழியாகும். உணவுக் கட்டுப்பாடு ("உண்ணுங்கள், பருகுங்கள், மிதமிஞ்சி விடாதீர்கள்"). அல்குர்ஆன் (7:30) புகையிலை, மது தவிர்த்தல், உடற்பயிற்சி, இறை வணக்கம், தியானம், அமைதியான வாழ்க்கை முறை, நோய் ஏற்படின் உரிய மருத்துவம் முதலியன நோய் தடுப்புக்கு உதவக் கூடியனவாகும்.
  உயரிய இஸ்லாமிய வாழ்க்கை முறை, சிறந்த நல வாழ்வுக்கு வழி காட்டுவதாகும். இதனைச் செயலாக்குவதன் மூலமே நீண்ட நல வாழ்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதைக் கவனத்தில் வைப்போமாக !
  "உடலில் ஒரு தசைத்துண்டு உள்ளது. அது சீராக இருந்தால், அனைத்து உறுப்புகளும் சீராக அமையும். அதுவே இதயம்" என பூமான் நபி (ஸல்) அவர்கள் புகன்றுள்ளனர். இந்நபிமொழியின் உட்கருத்து எதுவாக இருந்தாலும் இதயம் நலமாக இருப்பின், உடல் முழுவதும் நலமாகவே இருந்து விடும். எனவே இதயநலம் பேணுவது நீண்ட வாழ்வுக்கு வழியமைக்கும்.  

நன்றி : குர் ஆனின் குரல் ( நவம்பர் 2009 )




No comments:

NOTICE BOARD

இஸ்லாமிய அமைப்புகளின் இலட்சிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்ஹு. அன்றொரு காலம் இருந்தது: திமுக வின் கருணாநிதியும்அதிமுக வின் MGR ம் பொது நிகழ்ச்சிகளில் சந்திக்க நேர்ந்தால் தழுவிக்கொள்வார்கள் அல்லது குசலமாவது விசாரிப்பார்கள்.. ஆனால் இரு கட்சித்தொண்டர்களும் அடிதடி , கைகலப்பு , வெட்டு குத்து என அன்றாடம் மோதிக்கொள்வதை ஊடகங்கள் வழியாக அறிந்திருந்தோம். இன்றொரு காலம் இருக்கிறது: இஸ்லாமிய சமுதாய அமைப்புகளின் கண்ணியமிக்க தலைவர்கள், தங்களது கருத்து வேறுபாடுகளால் பொது நிகழ்ச்சிகளில் சந்திப்பதைக்கூட தவிர்க்க சிந்திக்கிறார்கள். ஆனால் சமுதாய அமைப்புக்களில் தங்களை உட்படுத்திக்கொண்ட அன்பிற்குரிய சகோதரர்கள் மோதிக்கொள்வதாகத் தகவல்கள் மிக அரிது.. வாதத்துக்காகவும் ,பகட்டுக்காகவும் இல்லாமல் சுய சிந்தனையோடு கூறுங்கள் சகோதரர்களே! உங்களில், ஒற்றுமை ஏற்படுவதை விரும்பாத ஒருவராவது இருக்க முடியுமா? அல்லது ''ஒற்றுமை ஏற்படாதா?'' என்று ஆதங்கப்படாத உள்ளம் தான் இருக்க முடியுமா? சமுதாயத்தலைவர்கள் தங்கள் வெட்டி கௌரவத்தை(பந்தா?) விட்டு வெளியில் வந்து பழையன மறந்து சமுதாய ஒற்றுமைக்காக புது உறவை ஏற்படுத்த மாட்டார்களா? தங்களை நல்ல முறையில் வழி நடத்த மாட்டார்களா? என்று ஏங்காத உள்ளமுடைய எவரேனும் உங்களில் இருக்க முடியுமா? நாம் சிந்தனை செய்யும் சக்தியை ஏக இறைவனால் வழங்கப்பெற்றவர்கள்...சிந்தனை செய்யுங்கள்.... ((((( 2 ))))) அனைத்து இஸ்லாமிய சமுதாய இயக்கங்களும் இலட்சியத்தில் ஒன்று படுகிறது; நோக்கம் இறைவனின் நேசத்தைப்பெற்று மறுமை வெற்றியை அடைய வேண்டும் என்பதாகத்தான் அமைந்திருக்கும். மாஷா அல்லாஹ்.நோக்கம் உன்னதமானது. ஆக, பாதைகள் தான் வெவ்வேறே தவிர இலக்கு வெவ்வேறல்ல. ஆனால் துவங்கப்பட்ட அமைப்புகள் இந்த இலட்சியத்தை அடைவதற்கான செயல்பாடுகளிலிருந்து தடம் புரள்வதேன்? துரதிர்ஷ்டவசமாக சில இயக்கங்களை நிர்வகிப்பவர்களின் செயல்பாடுகள் ''ஊசலாட்டங்களை ஏற்படுத்துபவனின்'' செயல்களைப் போன்று அமைந்து விடுகிறது. இங்கே 'மாற்றான் தோட்டத்து மல்லிகையின் மணம்' கண்டு கொள்ளப்படுவதேயில்லை; ஏனைய பண்புகளே மிகைப்படுத்தப்படுகிறது. பிற இஸ்லாமிய சமுதாய அமைப்புகளுடையவும் அதைச்சார்ந்தவர்களுடையவும் குறைகளை மிகைப்படுத்துவதையே முக்கிய இலக்காகக் கொண்டுள்ளனரோ? என்று எண்ணத்தோன்றுகிறது! படைக்கப்பட்டவனுடைய உள்ளத்தை படைத்தவன் அறிவான். படைத்தவனின் உரிமைகளை தனதாக்கிக்கொள்ள எவருக்கு தகுதியிருக்கிறது? ''இன்னமல் அஃமாலு பின் நிய்யத்''என்பதை மறப்பதேன்? நான் அல்லது நாம் செய்வது தான் சரியென்பது அவரவர் நம்பிக்கை; தீர்ப்பு செய்யும் அதிகாரம் படைத்தவனுக்குரியது. குறைகள் தெரிந்தாலும் அன்போடும் அக்கரையோடும் நளினமான முறையில் எடுத்துக்கூறும் பண்பு ஏன் இல்லாமல் போயிற்று? எங்கே இந்த சமுதாயம் அழிந்துவிடதா? என நப்பாசை கொண்டு திரிபவனுக்கு மத்தியில் நமது குறைகளை மேடைபோட்டு அரங்கேற்றுவதில் சகோதரர்களே! நீங்கள் உடன்படுகிறீர்களா? ((( 3 ))) நமது இயக்கங்களின் நிர்வாகிகள் அரசியல் குள்ளநரிகளின் சூழ்ச்சியில் விழுந்து விடும் சூழ்ச்சுமம் என்னவாக இருக்கும்? இதற்கு விடை அறிய வேண்டுமெனில் முதலில் சூழ்ச்சி என்னவென்று தெரிய வேண்டும். சமீபத்திய நிகழ்வு ஒன்றை பார்ப்போம்... நமது சமுதாய இயக்கம் ஒன்றின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில்,, ஒரு கட்சியை வரும் பாரளுமன்றத்தேர்தலில் ஆதரிப்பது என்பதும் ஒரு தீர்மானம். இந்த முடிவு 2007 ஆம் வருடத்திலேயே எடுக்கப்பட்டது என்பது வெளியிடப்பட்ட கடிதத்தின் வாயிலாக நமக்கு இப்போது தெரிய வருகிறது. ஆனால் எழுதப்பட்ட கடிதம் யாருக்கு? நரிக்குணத்துடன் முதுகில் குத்தும் குணமுடையவருக்காயிற்றே! முன்னணி இயக்கங்களில் ஒன்றை கூட்டுப்பிடித்திருந்தும் மற்றொன்றின் ஆதரவு இல்லாததால் (கோவை மற்றும் சில இடங்கள்)பெரும்பான்மையும் கிடைக்கவில்லை; கிடைத்த இடங்களிலும் (சென்னை மற்றும் சில இடங்கள்)சொற்ப ஓட்டுக்களில் வெற்றி என்று நொந்து போயிருந்தவருக்கு அல்லவா இந்த கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.. 2007 ல் தகவல் கிடைக்கப்பெற்றவர் குதூகலம் அடைந்திருப்பார்! ''இந்த இஸ்லாமியர்கள் சொன்ன சொல்லைக் காப்பார்கள்'' என்பதும் ''இந்த இஸ்லாமிய இயக்கங்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் ஒற்றுமையற்ற இயக்கங்கள்'' என்பதும் புரிந்த தந்திரக்காரர் அவர்! திட்டம் வகுத்திருப்பார்!! இலவசமாக ஒரு இயக்கத்தின் ஆதரவு கிடைக்கப்போகிறது; முன்னர் ஆதரித்த இயக்கம் கூடவே இருந்தால் ஒன்றிரண்டு தொகுதிகள் கேட்டு நச்சரிப்பார்கள் ; திட்டம் வகுத்து கழற்றி விட்டுவிட்டார்.. சூடு, சொரணையற்ற இளிச்சவாயர் கூட்டத்தின் பகுதி ஓட்டுக்கள் இலவசமாகக் கிடைக்கும் போது மற்றொரு பகுதியில்லாமலே (அதுவும் சிதறி விடும்)இந்த சமுதாயத்தை சமாளித்து விடலாம் என்று சூழ்ச்சி செய்தார். சரி, அவர் சூழ்ச்சி செய்தார்! அது அவரது அரசியல்! நம்மவர்கள் எப்படி சூழ்ச்சியில் விழுந்தார்கள்? என்றெல்லாம் (இஸ்லாமிய இயக்கங்களின் இலட்சிய சகோதரர்களே) நீங்கள் கேட்க விரும்புகிறீர்கள் என்றால் ........மகிழ்ச்சி.........நீங்களும் சிந்திக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று பொருள். இன்ஷா அல்லாஹ்... தொடருவேன்... சமுதாய ஒற்றுமையை விரும்பும் ஒரு சாதாரண சகோதரன்... நாஞ்சில் தமிழ்.

திக்ருகள்‏

திக்ரு என்பது இறைவனை நினைவு கூறுவதாகும்.. மனிதன் இறைவனின் நினைவுகளோடு இவ்வுலகில் வாழ வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைபாடு. இது மனிதனை வெற்றிக்கு இட்டுச் செல்லும் வழியாகும். ஐவேளை தொழுகை கூட இறைவனை நினைவு கூறக்கூடியதாகவே அமைந்துள்ளது. தொழுகை நேரம் போக அன்றாட வாழ்க்கையின் மற்ற நேரங்களிலும் இறைவனை நினைவு கூறுவதற்கு சில திக்ருகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.. அதற்கு முன் திக்ரு செய்வதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும். திக்ருகளின் சிறப்புகள் : فَاذْكُرُونِي اَذْكُرُكُمْ 'என்னை நீங்கள் நினைவு கூறுங்கள், நானும் உங்களை நினைவு கூறுவேன்' (அல்குர்ஆன் 2:152) நாம் அல்லாஹ்வை திக்ரு செய்தால் அல்லாஹ் நம்மை நினைவு கூறுகிறான். இது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். وَاذْكُرْ رَبَّكَ فِيْ نَفْسِكَ تَضَرُّعًا وَخِيْفَةً وَدُوْنَ الجَهْرِ مِنَ القَوْلِ بِالْغُدُوِّ وَالآصَالِ وَلاَ تَكُنْ مِنَ الغَافِلِيْنَ '(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும் மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்' (அல்குர்ஆன் 7:205) திக்ரு எவ்வாறு செய்ய வேண்டும் என்ற முறையை இறைவன் இங்கே நமக்கு கற்றுத் தருகிறான். يَأيُّهَا الَّذِينَ ءَامَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا ، وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا 'ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு செய்யுங்கள்.. இன்னும் காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்' (அல்குர்ஆன் 33:41,42) அல்லாஹ்வை அதிகமதிகம் திக்ருச் செய்ய வேண்டும், காலையிலும் மாலையிலும் அதிகமதிகம் செய்ய வேண்டும் என்பது இதன் பொருளாகும். காலையிலும் மாலையிலும் மட்டும் திக்ருச் செய்தால் போதும் என்பது இதன் பொருள் அல்ல. لاَيَقْعُدُ قَوْمٌ يَذْكُرُوْنَ اللهَ عَزَّ وَجَلَّ إِلاَّ حَفَّتْهُمُ المَلاَئِكَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِيْنَةُ ، وَذَكَرَهُمُ اللهُ فِيْمَنْ عِنْدَهُ (رواه مسلم) 'அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாக அமரும் கூட்டத்தினரை மலக்குகள் சூழ்ந்தும், ரஹ்மத் (இறையருள்) அவர்களை மூடியும் 'ஸகீனா' என்னும் நிம்மதி அவர்கள் மீது இறங்கியுமே தவிர வேறில்லை. அல்லாஹ் தன்னிடமுள்ளவர்களிடம் (மலக்குகளிடம்) அவர்களைப் பற்றி (புகழ்ந்து) கூறுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்கள்: அபூஹுரைரா (ரலி), அபூ ஸயீது (ரலி) நூல்: முஸ்லிம்) திக்ரு செய்வோரை மலக்குகள் சூழ்ந்து இருப்பார்கள், மனிதன் சுவர்க்கம் செல்ல அவசியம் தேவைப்படும் இறையருள் அங்கே இறங்குகிறது, நிம்மியும் இறங்குகிறது. அல்லாஹ் அவர்களைப் பற்றி புகழ்ந்து கூறுகிறான் போன்றவற்றை இழக்க எவருக்குத் தான் மனம் வரும். மற்றொரு ஹதீஸில், அல்லாஹுத்தஆலாவின் சில மலக்குகள், திக்ரு செய்பவர்களைத் தேடியவர்களாக பாதையில் சுற்றுவார்கள். அல்லாஹுத்தஆலாவை திக்ரு செய்யும் கூட்டத்தாரை அவர்கள் கண்டால் உடனே, 'இதோ இங்கு உங்கள் குறிக்கோளின் பக்கம் வாருங்கள்' என அவர்கள் ஒருவருக்கொருவர் அழைப்பு விடுப்பார்கள். உடனே அனைத்து மலக்குகளும் அங்கு வந்து, திக்ரு செய்யும் கூட்டத்தாரை முதல் வானம் வரை சூழ்ந்து கொள்வார்கள். பிறகு அவர்களின் இரட்சகனான அல்லாஹ் - அவன் மிக அறிந்தவன் - என் அடியார்கள் என்ன கூறினார்கள்? என்று கேட்பான். அதற்கவர்கள், உன்னை தஸ்பீஹ் செய்கிறார்கள், உன்னை தக்பீர் கூறுகிறார்கள், உன்னை புகழ்கிறார்கள், உன்னை கண்ணியப்படுத்துகிறார்கள் எனக் கூறுவார்கள். அதற்கவன், என்னை அவர்கள் பார்த்துள்ளார்களா? என்று கேட்பான். அதற்கவர்கள் இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் உன்னைப் பார்க்கவில்லை என்பார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் என்னைப் பார்த்திருந்தால் எவ்வாறு இருப்பார்கள்? எனக் கேட்பான். அதற்கு மலக்குகள், அவர்கள் உன்னைப் பார்த்திருந்தால், இன்னும் மிக அதிகமாக உன்னை வணங்குபவர்களாகவும், மிக அதிகமாக உன்னைக் கண்ணியப்படுத்துபவர்களாகவும், மிக அதிகமாக உன்னை தஸ்பீஹ் செய்பவர்களாகவும் இருப்பார்கள் எனப் பதிலளிப்பார்கள். பிறகு அல்லாஹ், அவ்வடியார்கள் என்ன கேட்டார்கள்? என்று அவர்களிடம் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்டார்கள் எனக் கூறுவார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் அதனைப் பார்த்துள்ளார்களா? என்று கேட்பான். அதற்கு மலக்குகள், இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்கள் இரட்கனே! அவர்கள் அதனைப் பார்க்கவில்லை எனப் பதிலளிப்பார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் எவ்வாறு இருக்கும்? என்று கேட்பான். அதற்கு மலக்குகள், அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் அதன் மீது மேலும் பேராசைக் கொள்வார்கள், அதிகமாகத் தேடுவார்கள், அதனை அடைய அளப்பெறும் ஆவல் கொள்வார்கள் எனக் கூறுவார்கள். பின்னர் அவர்கள் எதனை விட்டுப் பாதுகாவல் தேடுகிறார்கள் என மலக்குகளிடம் அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் நரகை விட்டுப் பாதுகாவல் தேடுகின்றனர் என்பர். அவர்கள் அதனைப் பார்த்துள்ளார்களா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் அதனைப் பார்க்கவில்லை என மறுமொழி கூறுவார்கள். அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் எவ்வாறு? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் அதைப் பார்த்திருந்தால் இதைவிட மிக அதிகமாக அதனை விட்டு விரண்டோடுவார்கள். கடுமையாக அதனை அஞ்சுவார்கள் எனப் பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் (மலக்குகளே) நான் அவர்களை மன்னித்து விட்டேன். அதற்கு உங்களைச் சாட்சிகளாக ஆக்குகிறேன் என்று கூறுவான். அப்போது மலக்குகளில் ஒருவர் அவர்களில் ஒருவர் திக்ர் செய்தவர்களின் கூட்டத்தில் உள்ளவரல்ல, ஏனெனில் அவர் அவரது ஏதோ ஒரு தேவைக்காக அங்கு வந்தார் எனக் கூறுவார். அதற்கு அல்லாஹ், திக்ரு செய்தவர்களாக அமர்ந்திருந்தவர்களுடன் சேர்ந்து அமர்ந்து இருந்த எந்த மனிதரும் நற்பாக்கியத்தை இழக்க மாட்டார். (அவரும் நற்கூலி பெறுவார்) எனக் கூறுவான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) மற்றொரு ஹதீஸில், அபூ வாகித் அல் ஹாரிஸ் பின் அவ்ப் (ரலி) அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்து இருந்தார்கள். மக்களும் அவர்களுடன் அமர்ந்து இருந்தார்கள்.. அப்போது மூன்று நபர்கள் வந்தார்கள். அவர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களின் சமூகம் முன்னோக்கி வந்தனர். ஒருவர் போய் விட்டார். அவ்விருவரும் நபியவர்களின் அவையில் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அவ்விருவரில் ஒருவர் அவ்வட்டத்தில் ஒரு காலியிடத்தைப் பார்த்தார்... உடனே அவர் அதில் போய் அமர்ந்தார். மற்றொருவர் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து கொண்டார். நபி (ஸல்) அவர்கள் தங்களின் சொற்பொழிவை நிறைவு செய்ததும் கூறினார்கள்: மூன்று நபர்களைப் பற்றி உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ் சேர்த்துக் கொண்டான். மற்றொருவர் வெட்கப்பட்டார். அல்லாஹ்வும் அவரிடமிருந்து வெட்கப்பட்டுக் கொண்டான். இன்னொருவர் புறக்கணித்துச் சென்றுவிட்டார். அல்லாஹ்வும் அவரைப் புறக்கணித்து விட்டான். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) ஒரு நாள் முஆவியா (ரலி) அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்திருந்த ஒரு திக்ரின் ஹல்காவிற்கு (வட்டத்திற்கு) வந்தார்கள். அப்போது அவர்களைப் பார்த்து, நீங்கள் ஏன் இங்கு அமர்ந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், நாங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாக அமர்ந்துள்ளோம் என மறுமொழி கூறினார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதைத்தவிர வேறு எதற்காகவும் நீங்கள் இங்கு உட்காரவில்லையே? என்றார்கள். அதற்கவர்கள், அதைத்தவிர வேறு எதற்காகவும் நாங்கள் இங்கு உட்காரவில்லை எனக் கூறினார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், நான், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக!' என்று உங்களிடம் கேட்டது உங்கள் மீது சந்தேகப்பட்டு அல்ல. (எனினும் உங்கள் நோக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான்.) நான் நபி (ஸல்) அவர்களிடம் சிறப்பான அந்தஸ்தைப் பெற்றிருந்தும் (பேணுதலின் காரணமாக) அவர்களைப் பற்றி மிகக் குறைவாகவே ஹதீஸ்களை அறிவிக்கின்றேன். அவைகளில் ஒன்று. ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களின் ஒரு ஹல்காவிற்கு (வட்டத்திற்கு) வந்தார்கள். ஏன் இங்கு அமர்ந்துள்ளீர்கள்? என்று அவர்களிடம் வினவினார்கள். அதற்கவர்கள், 'நாங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாகவும், எங்களுக்கு இஸ்லாமுக்கு வழிகாட்டி எங்கள் மீது அருள் புரிந்ததற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாகவும் அமர்ந்துள்ளோம் எனக் கூறினார்கள். அப்போது, நபியவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அதற்காகவே அமர்ந்துள்ளீர்களா?' என்றார்கள். அதற்கவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்காகவே நாங்கள் அமர்ந்துள்ளோம்' என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள், நான் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்று உங்களிடம் கேட்டது உங்கள் மீது சந்தேகப்பட்டு அல்ல, எனினும் (இப்பொழுதுதான்) ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்தார்கள். நிச்சயமாக அல்லாஹ் தன் மலக்குகளிடம் உங்களைப் பற்றி பெருமை பாராட்டுகின்றான் என அவர்கள் என்னிடம் கூறினார்கள்' எனப் பகர்ந்தார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீதில் குத்ரீ (ரலி), நூல்: முஸ்லிம்

1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்களை தரப்பட்ட இணைப்பின் மூலம் பெறலாம்

1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்களை தரப்பட்ட இணைப்பின் மூலம் பெறலாம்
இதை Print செய்து தேவையான மாணவர்களுக்கு கொடுத்து உதவலாம்.