நமதூரில் தராவிஹ் நேர சிந்தனைகள்...
அன்புடையீர் அஸ்ஸலாமு அழைக்கும்
இன்று(8 /8 /11 )திங்கள் இரவு நமதூர் பெரிய பள்ளியில்
தராவிஹ் தொழுகை முடிந்ததும் மேட்டுபாளையம்
பேராசிரியர் S . உமர் முக்தார் அவர்கள் நம் வழி நபி வழி
எனும் தலைப்பில் சிறப்புரை யாற்றினார்கள்..
இதிலே சிறப்பான விஷயம்...
பேராசிரியர் சுப்பிரமணியம் ராஜன் M .sc Ph .D ,M A அவர்கள்
எப்படி உமர் முக்தார் என கலிமா சொல்லி தூய இஸ்லாத்தை
ஏற்று கொண்டார்கள் என்பது தான் .அவருடைய சொல்லை கேளுங்கள்....
மதுரை காமராஜ் பல்கலையில் பேராசிரியர் பணியாற்றிய காலத்தில்
இஸ்லாமியர் புனித குர்ஆனில் எந்த அறிவியலை பெறுகிறார்கள்
என ஆராய்ச்சி செய்தேன் .
அதில்
"சூரியன் முடிவை நோக்கி (உள் நோக்கு சுருள் பாதையில் (Galaxy ) )சென்று
கொண்டிருகிறது "(குர்ஆன் 36 ;38 )
"நட்சத்திரங்கள் செல்லுகின்ற பாதைகளை (Galaxys )நாம் வானங்களில் அமைத்தோம்"
"(குர்ஆன் 15 ;16 )
இந்த வசனம் இறை நிராகரிப்பாளானாக வாழ்ந்து வந்த என்னை
இறைவனைப் பற்றி முதல் முறையாக ஒரு வித்தியாசமான கோணத்தில்
சிந்திக்க வைத்தது .
வேதங்கள் இறைவனின் வெளிபாடுதானா? அப்படியானால் இறைவனின்
அத்தாட்சி என்ன?(evidence )
"உங்களுக்குள்ளேயும் பூமியிலும் வானத்திலும் பல
அத்தாட்சிகளை வைத்துள்ளோம்.நீங்கள் பார்க்கவில்லையா"
"(குர்ஆன் 51 ;20 ,21 )
குர்ஆன் வசனங்களையும் நபி (ஸல் )அவர்கள் நடைமுறை வாழ்க்கை நெறி
விளக்கங்களையும் விஞ்ஞான செய்திகளையும் ஒப்பிட்டு பார்க்கும்போது இறைவனின்
அத்தாட்சிகள் ,ஆதாரங்கள் மாபெரும் அடையாளங்கள் வெளிபடுகின்றன.நம்மை
பிரம்மிக்க வைக்கின்றன .
இதிலே பேராசிரியர் சொன்ன விளக்கம்...
அண்டவெளியில் சூரியன் தன்னுடைய முடிவு வரையறுக்கபட்ட பாதையில் பயணம்
செய்து கொண்டிருகிறது.அண்டவெளி அல்லது பிரபஞ்சத்தில்
அணுக்களும்,மூலக்கூறுகளும்
காற்றும் இல்லாத வெற்றிடமாக (SPACE )இருக்கிறது.
அண்டவெளியில் ஒரு பொருள் நேர் கோட்டில் பயணிக்கிறதென்றால் முடிவே இல்லாத
பயணமாகிவிடும்.(Infinitive ) வட்டப்பாதையில் சென்றாலும் முடிவுற்ற பயணமாகிவிடும்.
எனவே ஒரு பொருள் சுருள் பாதையில் அதுவும் உள்நோக்கு சுருல்பாதையில் பயணம்
செய்தால் மட்டுமே முடிவடையும் பாதையாக அது அமையும்.
ஒரு கொசுவர்த்தியின் எரிகின்ற கங்கு உள்நோக்கு சுருள் பாதையில் எரிந்து
முடிவடைவது
போல சூரியனும் அதைபோன்று பலமடங்கு பெரிதான நட்சத்திரங்களும் உள்நோக்கு
சுருல்பாதையில்
செல்கின்றன.சூரியனும் ஒரு நட்சத்திரம் தான் நாம் அதற்கு சூரியன் என பெயர்
சூட்டியுள்ளோம்.
சூரியனும் நட்சத்திரங்களும் தங்களுடைய முடிவை நோக்கி செல்கிற சுருள்பாதைக்கு
"காலக்ஸ்சி
(Galaxy )என்று பெயர்.
1957 லில் ரஷ்ய நாட்டுவிண்வெளி வீரர் யூரிகாரிகன் ஸ்புட்னிக் என்ற ராக்கெட்டில்
விண்வெளியில்
அண்ட வெளியில் மிதந்தபடி நடந்தார்.அகசிவப்பு கதிர் (Infra Red )காமிராவை பயன்படுத்தி
காலக்ஸ்சிகளையும்
படம்பிடித்துக் கொண்டு வந்து ஆராய்ச்சி செய்த பின்பு தான் சூரியன் பயணிக்கும் பாதை
முடிவடையும் ஒன்று
என்பது தெளிவானது!உலகமே ஏற்றுகொண்டது .
சுமார் 600 ஆண்டு களுக்கு முன்பு விஞ்ஞானிகள் கோப்பர் நிக்கஸ், கலிலியோ,கெப்ளர்
ஆகியோர் இந்த
உண்மையை கண்டறிந்ததற்காக கொல்லபட்டார்கள்.
ஆனால் 57 லில் ஒப்புகொன்டர்கள்.இதைத்தான் வல்ல அல்லாஹ் தனது அருள் மறையில்
அன்றே
"சூரியன் முடிவை நோக்கி (உள் நோக்கு சுருள் பாதையில் (Galaxy ) )சென்று
கொண்டிருகிறது "(குர்ஆன் 36 ;38 )
சொன்னான்.உலகம் இன்று ஏற்றுகொள்கிறது .இவ்வாறு பேராசிரியர் S . உமர் முக்தார்
அவர்கள்
பேசினார்கள்.
நோன்பு காலம் என்பதால் "உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரையம்
செய்யாதிர்கள்"(குர்ஆன் 7 ;1 )
என்பதற்கு பேராசிரியர் தந்த அற்புத அறிவியல் விளக்கத்தை நாளை பார்க்கலாமா ...
அன்புடன்
அப்துல் அலீம்
No comments:
Post a Comment