அன்புடையீர்
அஸ்ஸலாமு அழைக்கும்
அறிவு ஜீவிகள் தங்களது முழு மையான பெரும்பாலான ஆராய்சிகளை
புனித குர்ஆன் மேற்கோள் காட்டிய பாதையிலேயே செய்து
குர்ஆன் மூலம் உண்மையை உலகிற்கு உணர்த்தியுள்ளார்கள்..
ஆனால் இதனை அறிவார்ந்த சமுகம் அங்கீகரித்து ஏற்று கொள்வதில்
தான் பெரும் சவாலாக இருக்கிறது.இந்த அற்புத உண்மையை மனதளவில்
முழுமையுடன் கடைபிடிக்கும் பாக்கியம் பெற்றோர் தூய இஸ்லாத்தில்
தங்களை அர்ப்பணித்து கொள்கிறார்கள் ...
அந்த வரிசையில் பேராசிரியர் S .உமர் முக்தார் அவர்கள் பெரிய பள்ளி தராவிஹ் தொழுகைக்கு பிறகு ஆற்றிய உரையில் உணவின் தன்மைகளை பற்றி சிறப்பாக எடுத்துசொன்னர்கள்...
"உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரையம்
செய்யாதிர்கள்"(குர்ஆன் 7 ;1 )
இந்த வசனத்தை பின்பற்றி உணவு உண்பதை சிந்தித்தபோது நமக்கு தெரிய வந்தது ...நாம் உண்ணும் உணவு எதுவாக இருந்தாலும் வயிற்றில் அரைக்கப்பட்டு சத்துபொருட்களின் மூலக்கூறுகளாக பிரிக்கபடுகின்றன.
உணவில் புரோட்டின் (Protein )எனப்படும் புரதசத்து,லிபிட்ஸ்(Lipids )எனப்படும் கொழுப்புசத்து, கார்போ ஹைட்ரேட்ஸ்(Carbohydraes )எனப்படும் சக்கரைசத்து மற்றும் ஸ்டார்ச்(Starch ) போன்ற கூட்டு சக்கரை சத்துக்கள் ஆகியவை எளிய ஒற்றை சக்கரை சத்துகளாக குளுகோஸ்(Glucose ) அல்லது பரக்டோஸ்(Fructosr )மாற்றபடுகின்றன.
உண்ட உணவில் உள்ள சத்து பொருட்கள் அனைத்தும் உடலுக்கு சென்றடைந்தால் தான் முழுவதும் ஜீரணமானதாக (Complete Digestion )ஆகும். இல்லாவிடில் குறைபாடுடைய ஜீரணம் ஆகும்.அதாவது அஜீரனமாகும்(Mal Digestion ) குடலுருஞ்சிகளால் உறிஞ்சபடாத சத்து பொருட்கள் அடுத்த நாள் கழிவில் வெளியேற்றபடுகின்றன.
ஒருவர் உணவு உட்கொண்ட பின்பு வயிற்றில் 6 ல் 1 பகுதியாவது காலியிடமாக இருந்தால் தான் உணவில் அணைத்து சத்துகளும் உடலில் சேர்கின்றன என்றும் ,வயிற்றில் காலியிடம் இன்றி கழுத்து வரை உணவு உட்கொள்பவருக்கு உணவின் சத்து பொருட்கள் பாதிக்குமேல் உடம்பில் சேர்வதில்லை என்றும் அடுத்த நாள் கழிவில் வெளியேற்றபடுகின்றன என்றும் மருத்துவ கல்லூரிமாணவர்களுக்கு உடல் உட்கூறு செயலில்(Physiology )பாடமாக விளக்கபடுகிறது .
வயிற்றில் 1 /4 பகுதி காலியிடம் இருக்கும்படிஉணவு உட்கொள்ளவேண்டும் என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் தரையில் அமர்ந்து சாப்பிட்டும் காட்டினார்கள். ஒரு காலை மடக்கி நபி (ஸல்) அவர்கள் வழிமுறைப்படி உட்காருகையில் வயிற்றில் ஒரு பகுதி இடம் அடைத்து கொள்கிறது.சாப்பிட்ட பின்பு இது காலி இடமாக இருக்கும்
நபி வழி உணவுபழக்கம் உண்ட உணவின் அணைத்து சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.
உணவை பற்றி பேசும் போது இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் பேராசிரியர் சொன்னது ...
உடனடி சக்தி(Instant Energy ) சாப்பிடும்போது உணவை விரல்களால் எடுத்து சாப்பிடுமாறும் உள்ளங்கையில் உணவு படாமல் சாப்பிடுதல் வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டினார்கள்.சாப்பாட்டின் முடிவில்
இனிப்பு பொருள் உண்பதையும் ,விரல்கள் கன்றி சிவந்து போகுமளவிற்கு நடுவில் உள்ள மூன்று விரல்களை சூப்புகிற பழக்கமுடையவராகவும் இருந்தார்கள் என்றும் வரலாற்று செய்திகளில் ஹதீஸ் தொகுப்புகளில் அறிய முடிகிறது.
உள்ளங்கை பகுதியில் தோலின் நச்சுபொருட்கள் சுரக்கின்றன.உள்ளங்கையில் உணவு படுமாறு எடுத்து உண்பவருக்கு உணவுடன் இந்த நச்சுபொருட்கள் கலந்துவிடுகின்றன.இந்த நச்சு அல்லது விஷபொருட்கள் உயிரை கொல்லும் அளவிற்கு சக்தி வாய்ந்தவை அல்ல என்றாலும் சிறிது சிறிதாய் உணவு குழாயின் உட்புறத்தில் வினைபுரிந்து ஜீரண ஆற்றலை குறைக்கின்றன..40 வயதுக்கு பிறகு ஜீரண ஆற்றலில் பாதிப்புகள் வாயுகோளாறு ஏற்படும்.
விரல்களை சூப்புவதால் விரல்களில் சுரப்பு எதுவும் வெளிபடுவதிலை ஆனால் வாயில் இரண்டு புறங்களிலும் சேர்த்து 4 இடங்களில் உமிழ்நீர் அல்லது எச்சில் சுரப்பிகள்(Salivary Galands ) இருக்கின்றன.
விரல்கள் சூப்புவதால் இந்த எச்சில் சுரப்பிகள் கசக்கப்பட்டு நிர்பந்தமான சுரநீர்(Enzym ) அமைலேஸ் அல்லது படையலினை(Amylase or Ptylin ) சுரக்கின்றன.
வழக்கமாக இனிப்பு,புளிப்பு உணவுபொருட்களை பார்க்கும்போது,ஆசைப்பட்ட உணவுகளை கேள்விப்பட்டு கற்பனை காட்சிகளாய் மனதில் விரிகிற போதும்,பசியாக இருக்கிறபோதும் ஒருவருக்கு உமிழ்நீர் எச்சில்
சுரக்கிறது.பசியில்லாதபோது,குறிப்பாக சாப்பிட்டு முடிந்தவுடன் உமிழ்நீர் சுரப்பதில்லை.ஆனால் விரல்
சூப்புவதால் உமிழ்நீர் சுரக்கிறது.
அமைலேஸ் என்ற என்ஸைம் நன்றாக அரைக்கபட்டுள்ள உணவிலுள்ள துணுக்கு சக்கரை அல்லது
ஒற்றை சக்கரை(Mono Sacharides )என்றழைக்கபடுகிற குளுகோஸ்(Glucose )பிரக்டோஸ் (Fructose )ஆகிய
சக்கரை மூலக்கூறுகளை தேடிபிடித்து,குடலுரிஞ்சிகள் மூலம் ரத்தத்துக்கு அனுப்பி வைக்கிறது.
உடலில் களைப்படைந்த பாகங்களுகெல்லாம் சக்கரை அனுப்பபட்டு,களைப்பு நீக்கபடுகிறது.
களைப்பை போக்குவதற்கு விளையாட்டு வீரர்களுக்கு உடனடி சக்தியாக குளுகோஸ் தருவது அனைவரும் அறிந்த விஷயம். அதுபோல,சாப்பிட்டு முடிந்தவுடன் கைவிரல்களை சூப்புவதால் உடலில் களைப்படைந்த உறுப்புகளுக்கு
உடனடி சக்தி வழங்கப்பட்டு புத்துணர்ச்சி பெறுகின்றன. உண்டபின் களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்பார்கள்.
அல்லாஹுவும் ரஸுலும் காட்டிதந்த வழிமுறையில் உணவு உண்பவருக்கு முழுமையாக ஜீரணமாகிறது. உண்டபின் களைப்பு கிடையாது.
"சாப்பிட்டு முடிக்கையில் மூன்று விரல்களை ரசூல்(ஸல்) அவர்கள் சூப்பினார்கள்." அனஸ் ரலி)திர்மிதி 131 .
இவ்வாறு பேராசிரியர் ச.உமர் முக்தார் அவர்கள் குறிப்பிட்டர்கள்.
பேராசிரியர் பேச்சிலே என்னை மிகவும் கவர்ந்த வாசகம் ...
MUSLIMS ARE BORN WITH SILVER SPOON IN THEIR MOUTH
அப்படி என்ன அதன் உட்பொருள் அதைதான் நாளை பார்ப்போமே...
அன்புடன்
அப்துல் அலீம்
No comments:
Post a Comment